Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௧௩

Qur'an Surah As-Sajdah Verse 13

ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ شِئْنَا لَاٰتَيْنَا كُلَّ نَفْسٍ هُدٰىهَا وَلٰكِنْ حَقَّ الْقَوْلُ مِنِّيْ لَاَمْلَـَٔنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَ (السجدة : ٣٢)

walaw shi'nā
وَلَوْ شِئْنَا
And if We (had) willed
நாம் நாடியிருந்தால்
laātaynā
لَءَاتَيْنَا
surely We (would) have given
கொடுத்திருப்போம்
kulla
كُلَّ
every
எல்லா
nafsin
نَفْسٍ
soul
ஆன்மாவிற்கும்
hudāhā
هُدَىٰهَا
its guidance
அதற்குரிய நேர்வழியை
walākin
وَلَٰكِنْ
but
எனினும்
ḥaqqa
حَقَّ
(is) true
உறுதியாகி விட்டது
l-qawlu
ٱلْقَوْلُ
the Word
வாக்கு
minnī
مِنِّى
from Me
என்னிடமிருந்து
la-amla-anna
لَأَمْلَأَنَّ
that I will surely fill"
நிச்சயமாக நான் நிரப்புவேன்
jahannama
جَهَنَّمَ
Hell
நரகத்தை
mina l-jinati
مِنَ ٱلْجِنَّةِ
with the jinn
ஜின்களில் இருந்து(ம்)
wal-nāsi
وَٱلنَّاسِ
and the men
இன்னும் மனிதர்கள்
ajmaʿīna
أَجْمَعِينَ
together
அனைவரிலிருந்தும்

Transliteration:

Wa law shi'naa la-aatainaa kulla nafsin hudaahaa wa laakin haqqal qawlu minnee la amla'anna jahannama minal jinnati wannaasi ajma'een (QS. as-Sajdah:13)

English Sahih International:

And if We had willed, We could have given every soul its guidance, but the word from Me will come into effect [that] "I will surely fill Hell with jinn and people all together. (QS. As-Sajdah, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

நாம் விரும்பியிருந்தால் (இவர்களில் உள்ள) ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் நேரான வழியில் செல்லக்கூடிய வசதியைக் கொடுத்திருப்போம். எனினும், ஜின்களையும் மனிதர்(களில் உள்ள பாவி)களையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவோம் என்ற நம்முடைய தீர்ப்பு (முன்னரே) ஏற்பட்டுவிட்டது. (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௧௩)

Jan Trust Foundation

மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம்; ஆனால் “நான் நிச்சயமாக நரகத்தை - ஜின்களையும், (தீய) மனிதர்களையும் - ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் நாடியிருந்தால் எல்லா ஆன்மாவிற்கும் அதற்குரிய நேர்வழியை (அதற்கு வலுக்கட்டாயமாக) கொடுத்திருப்போம். எனினும், நிச்சயமாக ஜின்கள் இன்னும் மனிதர்கள் அனைவரிலிருந்தும் நரகத்தை நான் நிரப்புவேன் என்ற வாக்கு என்னிடமிருந்து உறுதியாகி விட்டது.