Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௧௨

Qur'an Surah As-Sajdah Verse 12

ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ تَرٰىٓ اِذِ الْمُجْرِمُوْنَ نَاكِسُوْا رُءُوْسِهِمْ عِنْدَ رَبِّهِمْۗ رَبَّنَآ اَبْصَرْنَا وَسَمِعْنَا فَارْجِعْنَا نَعْمَلْ صَالِحًا اِنَّا مُوْقِنُوْنَ (السجدة : ٣٢)

walaw tarā
وَلَوْ تَرَىٰٓ
And if you (could) see
நீர் பார்த்தால்
idhi
إِذِ
when
சமயத்தை
l-muj'rimūna
ٱلْمُجْرِمُونَ
the criminals
குற்றவாளிகள்
nākisū
نَاكِسُوا۟
(will) hang
தாழ்த்தியவர்களாக
ruūsihim
رُءُوسِهِمْ
their heads
தங்கள் தலைகளை
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْ
before their Lord
தங்கள் இறைவனிடம்
rabbanā
رَبَّنَآ
"Our Lord
எங்கள் இறைவா!
abṣarnā
أَبْصَرْنَا
we have seen
நாங்கள் பார்த்தோம்
wasamiʿ'nā
وَسَمِعْنَا
and we have heard
இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்
fa-ir'jiʿ'nā
فَٱرْجِعْنَا
so return us
ஆகவே, எங்களை திரும்ப அனுப்பு!
naʿmal
نَعْمَلْ
we will do
நாங்கள் செய்வோம்
ṣāliḥan
صَٰلِحًا
righteous (deeds)
நற்செயல்களை
innā mūqinūna
إِنَّا مُوقِنُونَ
Indeed we (are now) certain"
நிச்சயமாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம்

Transliteration:

Wa law taraaa izil mujrimoona naakisoo ru'oosihim 'inda rabbihim rabbanaaa absarnaa wa sami'naa farji'naa na'mal saalihan innaa mooqinoon (QS. as-Sajdah:12)

English Sahih International:

If you could but see when the criminals are hanging their heads before their Lord, [saying], "Our Lord, we have seen and heard, so return us [to the world]; we will work righteousness. Indeed, we are [now] certain." (QS. As-Sajdah, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

(நபியே! விசாரணைக்காக) இக்குற்றவாளிகள் தங்கள் இறைவன் முன் (நிறுத்தப்படும் சமயத்தில்) தலை குனிந்தவர்களாக "எங்கள் இறைவனே! எங்களுடைய கண்களும் காதுகளும் திறந்து கொண்டன. (நாங்கள் அனைத்தையும் பார்த்தும் கேட்டும் தெரிந்தும் கொண்டோம். முந்திய உலகிற்கு ஒரு தடவை) எங்களை திரும்ப அனுப்பி வை. நாங்கள் நற்செயல்களையே செய்வோம். நிச்சயமாக நாங்கள் (இந்த விசாரணை நாளை) உறுதியாக நம்புகிறோம்" என்றும் கூறுவதை நீங்கள் காண்பீராயின் (அவர்களுடைய நிலைமை எவ்வளவு கேவலமாயிருக்கும் என்பதை அறிந்து கொள்வீர்கள்.) (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௧௨)

Jan Trust Foundation

மேலும், இக்குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய், “எங்கள் இறைவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம், கேட்டும் கொண்டோம் - ஆகவே, நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை; நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாய் நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிட்டோம்” என்று சொல்லும்போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்து கொள்வீர்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

குற்றவாளிகள் தங்கள் இறைவனிடம் தங்கள் தலைகளை தாழ்த்தியவர்களாக, எங்கள் இறைவா! நாங்கள் (உனது தண்டனையை கண்கூடாகப்) பார்த்தோம்; (உனது தூதர்களை நீ உண்மைப்படுத்தியதையும்) நாங்கள் செவிமடுத்தோம். ஆகவே, எங்களை (உலகிற்கு) திரும்ப அனுப்பு! நாங்கள் நற்செயல்களைச் செய்வோம். (நீதான் வணக்கத்திற்குரியவன்; நீ கூறிய மறுமை, சொர்க்கம், நரகம் எல்லாம் உண்மை என்று இப்போது) நிச்சயமாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று கூறுகின்ற சமயத்தை நீர் பார்த்தால் (அது திடுக்கம் மிகுந்த காட்சியாக இருக்கும்).