Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௧௦

Qur'an Surah As-Sajdah Verse 10

ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالُوْٓا ءَاِذَا ضَلَلْنَا فِى الْاَرْضِ ءَاِنَّا لَفِيْ خَلْقٍ جَدِيْدٍ ەۗ بَلْ هُمْ بِلِقَاۤءِ رَبِّهِمْ كٰفِرُوْنَ (السجدة : ٣٢)

waqālū
وَقَالُوٓا۟
And they say
அவர்கள் கூறுகின்றனர்
a-idhā ḍalalnā
أَءِذَا ضَلَلْنَا
"Is (it) when we are lost
நாங்கள் மறைந்து விட்டால்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
a-innā
أَءِنَّا
will we
?/நிச்சயமாக நாங்கள்
lafī khalqin
لَفِى خَلْقٍ
certainly be in a creation
படைப்பில் (படைக்கப்படுவோமா)
jadīdin
جَدِيدٍۭۚ
new?"
புதிய
bal hum
بَلْ هُم
Nay they
மாறாக/அவர்கள்
biliqāi
بِلِقَآءِ
in (the) meeting
சந்திப்பை
rabbihim
رَبِّهِمْ
(of) their Lord
தங்கள் இறைவனின்
kāfirūna
كَٰفِرُونَ
(are) disbelievers
நிராகரிக்கின்றவர்கள்

Transliteration:

Wa qaalooo 'a-izaa dalalnaa fil ardi 'a-innaa lafee khalqin jadeed; bal hum biliqaaa'i rabbihim kaafirroon (QS. as-Sajdah:10)

English Sahih International:

And they say, "When we are lost [i.e., disintegrated] within the earth, will we indeed be [recreated] in a new creation?" Rather, they are, in the meeting with their Lord, disbelievers. (QS. As-Sajdah, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

"(நாங்கள் இறந்து) பூமியில் அழிந்து போனதன் பின்னர் மெய்யாகவே நாங்கள் புதிய படைப்பாக அமைக்கப்பட்டு விடுவோமா?" என்று அவர்கள் கூறுகின்றனர். (இதனால்) அவர்கள் தங்களுடைய இறைவனைச் சந்திப்பதையும் நிராகரிக்கின்றனர். (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௧௦)

Jan Trust Foundation

“நாம் பூமியில் அழிந்து போய் விடுவோமாயின் மெய்யாகவே நாங்கள் புதிய படைப்பாவோமா?” எனவும் அவர்கள் கூறுகின்றனர்; ஏனெனில் அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதையே நிராகரிப்போராய் இருக்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறுகின்றனர்: “நாங்கள் (மரணித்த பின்னர் புதைக்கப்பட்டு) பூமியில் (மண்ணோடு மண்ணாக) மறைந்து விட்டால், (அதன் பிறகு) நிச்சயமாக நாங்கள் புதிய படைப்பில் (மீண்டும்) படைக்கப்படுவோமா?” மாறாக, அவர்கள் தங்கள் இறைவனின் சந்திப்பை நிராகரிக்கின்றவர்கள் ஆவர்.