Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா - Page: 3

As-Sajdah

(as-Sajdah)

௨௧

وَلَنُذِيْقَنَّهُمْ مِّنَ الْعَذَابِ الْاَدْنٰى دُوْنَ الْعَذَابِ الْاَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ ٢١

walanudhīqannahum
وَلَنُذِيقَنَّهُم
அவர்களுக்கு நிச்சயமாக நாம் சுவைக்க வைப்போம்.
mina l-ʿadhābi
مِّنَ ٱلْعَذَابِ
வேதனையை
l-adnā
ٱلْأَدْنَىٰ
சிறிய
dūna l-ʿadhābi
دُونَ ٱلْعَذَابِ
வேதனைக்கு முன்னர்
l-akbari
ٱلْأَكْبَرِ
மிகப் பெரிய
laʿallahum yarjiʿūna
لَعَلَّهُمْ يَرْجِعُونَ
அவர்கள் திரும்புவதற்காக
அவர்கள் (பாவங்களிலிருந்து) விலகிக்கொள்வதற்காக (மறுமையில் அவர்கள்) பெரிய வேதனையை அடைவதற்கு முன்பாகவே (இம்மையில்) சிறியதொரு வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம். ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௨௧)
Tafseer
௨௨

وَمَنْ اَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِاٰيٰتِ رَبِّهٖ ثُمَّ اَعْرَضَ عَنْهَا ۗاِنَّا مِنَ الْمُجْرِمِيْنَ مُنْتَقِمُوْنَ ࣖ ٢٢

waman
وَمَنْ
யார்?
aẓlamu
أَظْلَمُ
பெரியஅநியாயக்காரன்
mimman
مِمَّن
ஒருவனைவிட
dhukkira
ذُكِّرَ
அறிவுரை கூறப்பட்டான்
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களினால்
rabbihi
رَبِّهِۦ
தனது இறைவனின்
thumma
ثُمَّ
பிறகு
aʿraḍa
أَعْرَضَ
புறக்கணித்தான்
ʿanhā
عَنْهَآۚ
அவற்றை
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
mina l-muj'rimīna
مِنَ ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளிடம்
muntaqimūna
مُنتَقِمُونَ
பழிவாங்குவோம்
(இவ்வாறு) இறைவனின் (எச்சரிக்கையான) அத்தாட்சியைக் கொண்டு மறுமையை ஞாபகமூட்டிய பின்னரும் இதனைப் புறக்கணித்து விடுபவனைவிட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக நாம் இத்தகைய குற்றவாளிகளை பழிவாங்கியே தீருவோம். ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௨௨)
Tafseer
௨௩

وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ فَلَا تَكُنْ فِيْ مِرْيَةٍ مِّنْ لِّقَاۤىِٕهٖ وَجَعَلْنٰهُ هُدًى لِّبَنِيْٓ اِسْرَاۤءِيْلَۚ ٢٣

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ātaynā
ءَاتَيْنَا
நாம் கொடுத்தோம்
mūsā
مُوسَى
மூஸாவிற்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
falā takun
فَلَا تَكُن
ஆகவே, நீர் இருக்க வேண்டாம்
fī mir'yatin
فِى مِرْيَةٍ
சந்தேகத்தில்
min liqāihi
مِّن لِّقَآئِهِۦۖ
அவரை சந்திப்பதில்
wajaʿalnāhu
وَجَعَلْنَٰهُ
இன்னும் அதை ஆக்கினோம்
hudan
هُدًى
நேர்வழியாக
libanī is'rāīla
لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களுக்கு
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து இருந்தோம். ஆகவே, (நபியே! அத்தகைய வேதம்) உங்களுக்குக் கிடைக்கும் என்பதைப் பற்றி நீங்கள் சந்தேகிக்காதீர்கள். நாம் (மூஸாவுக்குக் கொடுத்த) அதனை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு ஒரு வழிகாட்டியாக ஆக்கினோம். ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௨௩)
Tafseer
௨௪

وَجَعَلْنَا مِنْهُمْ اَىِٕمَّةً يَّهْدُوْنَ بِاَمْرِنَا لَمَّا صَبَرُوْاۗ وَكَانُوْا بِاٰيٰتِنَا يُوْقِنُوْنَ ٢٤

wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் உருவாக்கினோம்
min'hum
مِنْهُمْ
அவர்களில்
a-immatan
أَئِمَّةً
தலைவர்களை
yahdūna
يَهْدُونَ
நேர்வழி காட்டுகின்றனர்
bi-amrinā
بِأَمْرِنَا
நமது கட்டளையின்படி
lammā ṣabarū
لَمَّا صَبَرُوا۟ۖ
அவர்கள் பொறுமையாக இருந்தபோது
wakānū
وَكَانُوا۟
இன்னும் அவர்கள் இருந்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நமது வசனங்களை
yūqinūna
يُوقِنُونَ
உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களாக
நம்முடைய கட்டளைகளைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்த இஸ்ராயீலின் சந்ததிகளில் இருந்த ஒரு கூட்டத்தினரை அவர்களுக்கு வழி காட்டிகளாக அமைத்தோம். அவர்கள் நம் வசனங்களை முற்றிலும் உறுதியுடன் நம்பியவர்களாக இருந்தனர். ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௨௪)
Tafseer
௨௫

اِنَّ رَبَّكَ هُوَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ ٢٥

inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka huwa
رَبَّكَ هُوَ
உமது இறைவன்தான்
yafṣilu
يَفْصِلُ
தீர்ப்பளிப்பான்
baynahum
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
fīmā
فِيمَا
எதில்
kānū
كَانُوا۟
இருந்தார்களோ
fīhi
فِيهِ
அதில்
yakhtalifūna
يَخْتَلِفُونَ
அவர்கள் கருத்து வேறுபட்டவர்களாக
(நபியே! அவர்களுக்குப் பின்னர் வழிகாட்டியாக ஏற்பட்டவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர்.) இவர்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ அதனைப் பற்றி மறுமை நாளில் உங்களது இறைவன் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பான். ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௨௫)
Tafseer
௨௬

اَوَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ اَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنَ الْقُرُوْنِ يَمْشُوْنَ فِيْ مَسٰكِنِهِمْ ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍۗ اَفَلَا يَسْمَعُوْنَ ٢٦

awalam yahdi
أَوَلَمْ يَهْدِ
தெளிவுபடுத்தவில்லையா?
lahum
لَهُمْ
அவர்களுக்கு
kam
كَمْ
எத்தனையோ
ahlaknā
أَهْلَكْنَا
நாம் அழித்தது
min qablihim
مِن قَبْلِهِم
இவர்களுக்கு முன்னர்
mina l-qurūni
مِّنَ ٱلْقُرُونِ
பல தலை முறையினர்களை
yamshūna
يَمْشُونَ
சுற்றித் திரிந்தனர்
fī masākinihim
فِى مَسَٰكِنِهِمْۚ
தங்கள் வசிப்பிடங்களில்
inna fī dhālika
إِنَّ فِى ذَٰلِكَ
நிச்சயமாக இதில் உள்ளன
laāyātin
لَءَايَٰتٍۖ
பல அத்தாட்சிகள்
afalā yasmaʿūna
أَفَلَا يَسْمَعُونَ
அவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா?
இவர்களுக்கு முன்னர் எத்தனையோ வகுப்பினரை நாம் அழித்திருக்கின்றோம். அவர்கள் வசித்திருந்த இடங்களின் மீதே இவர்கள் போய் வந்து கொண்டிருப்பதும் இவர்களுக்கு நேரான வழியைக் காட்டவில்லையா? நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (இதற்கும்) அவர்கள் செவிசாய்க்கமாட்டார்களா? ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௨௬)
Tafseer
௨௭

اَوَلَمْ يَرَوْا اَنَّا نَسُوْقُ الْمَاۤءَ اِلَى الْاَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهٖ زَرْعًا تَأْكُلُ مِنْهُ اَنْعَامُهُمْ وَاَنْفُسُهُمْۗ اَفَلَا يُبْصِرُوْنَ ٢٧

awalam yaraw
أَوَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
annā
أَنَّا
நிச்சயமாக நாம்
nasūqu
نَسُوقُ
ஓட்டிவருகிறோம்
l-māa
ٱلْمَآءَ
மழை நீரை
ilā l-arḍi
إِلَى ٱلْأَرْضِ
பூமிக்கு
l-juruzi
ٱلْجُرُزِ
காய்ந்த(து)
fanukh'riju
فَنُخْرِجُ
உற்பத்தி செய்கிறோம்
bihi
بِهِۦ
அதன் மூலம்
zarʿan
زَرْعًا
விளைச்சலை
takulu min'hu
تَأْكُلُ مِنْهُ
சாப்பிடுகின்றன/அதில்
anʿāmuhum
أَنْعَٰمُهُمْ
அவர்களின் கால்நடைகளும்
wa-anfusuhum
وَأَنفُسُهُمْۖ
அவர்களும்
afalā yub'ṣirūna
أَفَلَا يُبْصِرُونَ
அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?
நிச்சயமாக நாமே வறண்ட பூமிகளின் பக்கம் மழையின் மேகத்தை ஓட்டி (பொழியச் செய்து) அதன் மூலம் இவர்களும், இவர்களுடைய (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளும் புசிக்கக்கூடிய பயிர்களையும் வெளிப்படுத்துகின்றோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? (இதனைக் கூட) அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா? ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௨௭)
Tafseer
௨௮

وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْفَتْحُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٢٨

wayaqūlūna
وَيَقُولُونَ
அவர்கள் கூறுகின்றனர்
matā
مَتَىٰ
எப்போது
hādhā
هَٰذَا
இந்த
l-fatḥu
ٱلْفَتْحُ
தீர்ப்பு
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
"(வாக்களிக்கப்பட்ட) தீர்ப்பு நாள் எப்பொழுது வரும்? நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (அது வரும் காலத்தைக்) கூறுங்கள்" எனக் கேட்கின்றனர். ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௨௮)
Tafseer
௨௯

قُلْ يَوْمَ الْفَتْحِ لَا يَنْفَعُ الَّذِيْنَ كَفَرُوْٓا اِيْمَانُهُمْ وَلَا هُمْ يُنْظَرُوْنَ ٢٩

qul
قُلْ
கூறுவீராக!
yawma
يَوْمَ
நாளில்
l-fatḥi
ٱلْفَتْحِ
தீர்ப்பு
lā yanfaʿu
لَا يَنفَعُ
பலனளிக்காது
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரிப்பவர்களுக்கு
īmānuhum
إِيمَٰنُهُمْ
அவர்களது ஈமான்
walā hum yunẓarūna
وَلَا هُمْ يُنظَرُونَ
இன்னும் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்
(அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அந்தத் தீர்ப்பு நாளின்போது (இந்) நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொள்வது அவர்களுக்கு (யாதொரு) பயனும் அளிக்காது. (வேதனையைத் தாமதப்படுத்த) அவர்கள் தவணையும் கொடுக்கப்படமாட்டார்கள்." ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௨௯)
Tafseer
௩௦

فَاَعْرِضْ عَنْهُمْ وَانْتَظِرْ اِنَّهُمْ مُّنْتَظِرُوْنَ ࣖ ٣٠

fa-aʿriḍ
فَأَعْرِضْ
ஆகவே, நீர் புறக்கணிப்பீராக!
ʿanhum
عَنْهُمْ
அவர்களை
wa-intaẓir
وَٱنتَظِرْ
இன்னும் எதிர்பார்த்திருப்பீராக!
innahum
إِنَّهُم
நிச்சயமாக அவர்கள்
muntaẓirūna
مُّنتَظِرُونَ
எதிர்பார்ப்பவர்கள்தான்
ஆகவே, நீங்கள் அவர்களைப் புறக்கணித்து (அந்நாளை) எதிர்பார்த்து இருங்கள். நிச்சயமாக அவர்களும் எதிர்பார்த்து இருக்கின்றனர். ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௩௦)
Tafseer