Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா - Page: 2

As-Sajdah

(as-Sajdah)

௧௧

۞ قُلْ يَتَوَفّٰىكُمْ مَّلَكُ الْمَوْتِ الَّذِيْ وُكِّلَ بِكُمْ ثُمَّ اِلٰى رَبِّكُمْ تُرْجَعُوْنَ ࣖ ١١

qul
قُلْ
கூறுவீராக!
yatawaffākum
يَتَوَفَّىٰكُم
உங்களை உயிர் கைப்பற்றுவார்
malaku l-mawti
مَّلَكُ ٱلْمَوْتِ
மலக்குல் மவுத்
alladhī
ٱلَّذِى
எவர்
wukkila
وُكِّلَ
நியமிக்கப்பட்டார்
bikum
بِكُمْ
உங்களுக்கு
thumma
ثُمَّ
பிறகு
ilā rabbikum
إِلَىٰ رَبِّكُمْ
உங்கள் இறைவனிடம்
tur'jaʿūna
تُرْجَعُونَ
திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
ஆகவே, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "உங்கள் மீது (உங்கள் இறைவனால்) சாட்டப்பட்டிருக்கும் "மலக்குல் மவ்த்து" (என்ற மலக்குத்)தான் உங்களுடைய உயிரைக் கைப்பற்றுகின்றார். பின்னர், உங்கள் இறைவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்." ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௧௧)
Tafseer
௧௨

وَلَوْ تَرٰىٓ اِذِ الْمُجْرِمُوْنَ نَاكِسُوْا رُءُوْسِهِمْ عِنْدَ رَبِّهِمْۗ رَبَّنَآ اَبْصَرْنَا وَسَمِعْنَا فَارْجِعْنَا نَعْمَلْ صَالِحًا اِنَّا مُوْقِنُوْنَ ١٢

walaw tarā
وَلَوْ تَرَىٰٓ
நீர் பார்த்தால்
idhi
إِذِ
சமயத்தை
l-muj'rimūna
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகள்
nākisū
نَاكِسُوا۟
தாழ்த்தியவர்களாக
ruūsihim
رُءُوسِهِمْ
தங்கள் தலைகளை
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْ
தங்கள் இறைவனிடம்
rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா!
abṣarnā
أَبْصَرْنَا
நாங்கள் பார்த்தோம்
wasamiʿ'nā
وَسَمِعْنَا
இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்
fa-ir'jiʿ'nā
فَٱرْجِعْنَا
ஆகவே, எங்களை திரும்ப அனுப்பு!
naʿmal
نَعْمَلْ
நாங்கள் செய்வோம்
ṣāliḥan
صَٰلِحًا
நற்செயல்களை
innā mūqinūna
إِنَّا مُوقِنُونَ
நிச்சயமாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம்
(நபியே! விசாரணைக்காக) இக்குற்றவாளிகள் தங்கள் இறைவன் முன் (நிறுத்தப்படும் சமயத்தில்) தலை குனிந்தவர்களாக "எங்கள் இறைவனே! எங்களுடைய கண்களும் காதுகளும் திறந்து கொண்டன. (நாங்கள் அனைத்தையும் பார்த்தும் கேட்டும் தெரிந்தும் கொண்டோம். முந்திய உலகிற்கு ஒரு தடவை) எங்களை திரும்ப அனுப்பி வை. நாங்கள் நற்செயல்களையே செய்வோம். நிச்சயமாக நாங்கள் (இந்த விசாரணை நாளை) உறுதியாக நம்புகிறோம்" என்றும் கூறுவதை நீங்கள் காண்பீராயின் (அவர்களுடைய நிலைமை எவ்வளவு கேவலமாயிருக்கும் என்பதை அறிந்து கொள்வீர்கள்.) ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௧௨)
Tafseer
௧௩

وَلَوْ شِئْنَا لَاٰتَيْنَا كُلَّ نَفْسٍ هُدٰىهَا وَلٰكِنْ حَقَّ الْقَوْلُ مِنِّيْ لَاَمْلَـَٔنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَ ١٣

walaw shi'nā
وَلَوْ شِئْنَا
நாம் நாடியிருந்தால்
laātaynā
لَءَاتَيْنَا
கொடுத்திருப்போம்
kulla
كُلَّ
எல்லா
nafsin
نَفْسٍ
ஆன்மாவிற்கும்
hudāhā
هُدَىٰهَا
அதற்குரிய நேர்வழியை
walākin
وَلَٰكِنْ
எனினும்
ḥaqqa
حَقَّ
உறுதியாகி விட்டது
l-qawlu
ٱلْقَوْلُ
வாக்கு
minnī
مِنِّى
என்னிடமிருந்து
la-amla-anna
لَأَمْلَأَنَّ
நிச்சயமாக நான் நிரப்புவேன்
jahannama
جَهَنَّمَ
நரகத்தை
mina l-jinati
مِنَ ٱلْجِنَّةِ
ஜின்களில் இருந்து(ம்)
wal-nāsi
وَٱلنَّاسِ
இன்னும் மனிதர்கள்
ajmaʿīna
أَجْمَعِينَ
அனைவரிலிருந்தும்
நாம் விரும்பியிருந்தால் (இவர்களில் உள்ள) ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் நேரான வழியில் செல்லக்கூடிய வசதியைக் கொடுத்திருப்போம். எனினும், ஜின்களையும் மனிதர்(களில் உள்ள பாவி)களையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவோம் என்ற நம்முடைய தீர்ப்பு (முன்னரே) ஏற்பட்டுவிட்டது. ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௧௩)
Tafseer
௧௪

فَذُوْقُوْا بِمَا نَسِيْتُمْ لِقَاۤءَ يَوْمِكُمْ هٰذَاۚ اِنَّا نَسِيْنٰكُمْ وَذُوْقُوْا عَذَابَ الْخُلْدِ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ١٤

fadhūqū
فَذُوقُوا۟
சுவையுங்கள்!
bimā nasītum
بِمَا نَسِيتُمْ
நீங்கள் மறந்த காரணத்தால்
liqāa
لِقَآءَ
சந்திப்பை
yawmikum
يَوْمِكُمْ
உங்கள் நாளின்
hādhā
هَٰذَآ
இந்த
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
nasīnākum
نَسِينَٰكُمْۖ
உங்களை மறந்து விட்டோம்
wadhūqū
وَذُوقُوا۟
இன்னும் சுவையுங்கள்!
ʿadhāba
عَذَابَ
வேதனையை
l-khul'di
ٱلْخُلْدِ
நிரந்தரமான
bimā kuntum taʿmalūna
بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றின் காரணமாக
ஆகவே "(நம்மைச்) சந்திக்கும் இந்நாளை நீங்கள் மறந்துவிட்டதன் பலனை நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (இந்நாளை நீங்கள் மறந்தவாறே) நிச்சயமாக நாமும் உங்களை மறந்துவிட்டோம். நீங்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலின் காரணமாக என்றென்றும் நிலையான இந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருங்கள்" (என்றும் கூறப்படும்). ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௧௪)
Tafseer
௧௫

اِنَّمَا يُؤْمِنُ بِاٰيٰتِنَا الَّذِيْنَ اِذَا ذُكِّرُوْا بِهَا خَرُّوْا سُجَّدًا وَّسَبَّحُوْا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ ۩ ١٥

innamā yu'minu
إِنَّمَا يُؤْمِنُ
நம்பிக்கை கொள்பவர்கள் எல்லாம்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நமது வசனங்களை
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
idhā dhukkirū
إِذَا ذُكِّرُوا۟
அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால்
bihā
بِهَا
அவற்றின் மூலம்
kharrū
خَرُّوا۟
வீழ்ந்து விடுவார்கள்
sujjadan
سُجَّدًا
சிரம் பணிந்தவர்களாக
wasabbaḥū
وَسَبَّحُوا۟
இன்னும் துதிப்பார்கள்
biḥamdi
بِحَمْدِ
புகழ்ந்து
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவனை
wahum
وَهُمْ
இன்னும் அவர்கள்
lā yastakbirūna
لَا يَسْتَكْبِرُونَ۩
பெருமையடிக்க மாட்டார்கள்
நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், எவர்கள் (பூமியில்) சிரம் பணிந்து தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதி செய்கின்றார்களோ அவர்கள்தாம் நம்முடைய வசனங்களை மெய்யாகவே நம்பிக்கை கொள்வார்கள். அவர்கள் கர்வம்கொண்டு பெருமையடிக்கவும் மாட்டார்கள். ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௧௫)
Tafseer
௧௬

تَتَجَافٰى جُنُوْبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُوْنَ رَبَّهُمْ خَوْفًا وَّطَمَعًاۖ وَّمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ ١٦

tatajāfā
تَتَجَافَىٰ
தூரமாக இருக்கும்
junūbuhum
جُنُوبُهُمْ
அவர்களின் விலாக்கள்
ʿani l-maḍājiʿi
عَنِ ٱلْمَضَاجِعِ
படுக்கைகளை விட்டு
yadʿūna
يَدْعُونَ
வணங்குவார்கள்
rabbahum
رَبَّهُمْ
தங்கள் இறைவனை
khawfan
خَوْفًا
பய(த்துடனு)ம்
waṭamaʿan
وَطَمَعًا
ஆசையுடனும்
wamimmā razaqnāhum
وَمِمَّا رَزَقْنَٰهُمْ
இன்னும் நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து
yunfiqūna
يُنفِقُونَ
தர்மம் செய்வார்கள்
அவர்கள் (நித்திரையில் ஆழ்ந்திருக்கும் போது) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தியும், தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும், பயந்தும் (அவனைப்) பிரார்த்தனை செய்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள். ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௧௬)
Tafseer
௧௭

فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّآ اُخْفِيَ لَهُمْ مِّنْ قُرَّةِ اَعْيُنٍۚ جَزَاۤءًۢ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ ١٧

falā taʿlamu
فَلَا تَعْلَمُ
அறியாது
nafsun
نَفْسٌ
எந்த ஓர் ஆன்மாவும்
mā ukh'fiya
مَّآ أُخْفِىَ
மறைத்து வைக்கப்பட்டுள்ளதை
lahum
لَهُم
அவர்களுக்காக
min qurrati
مِّن قُرَّةِ
குளிர்ச்சியான
aʿyunin
أَعْيُنٍ
கண்களுக்கு
jazāan
جَزَآءًۢ
கூலியாக
bimā kānū yaʿmalūna
بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு
அவர்கள் செய்த (நற்)காரியங்களுக்குக் கூலியாக நாம் அவர்களுக்காக (தயார்படுத்தி) மறைத்து வைத்திருக்கும் கண் குளிரக்கூடிய (சன்மானத்)தை எவராலும் அறிந்துகொள்ள முடியாது. (அவ்வளவு மேலான சன்மானங்கள் அவர்களுக்கு தயார் படுத்தப்பட்டுள்ளன.) ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௧௭)
Tafseer
௧௮

اَفَمَنْ كَانَ مُؤْمِنًا كَمَنْ كَانَ فَاسِقًاۗ لَا يَسْتَوٗنَ ١٨

afaman kāna
أَفَمَن كَانَ
?/இருக்கின்றவர்
mu'minan
مُؤْمِنًا
நம்பிக்கையாளராக
kaman kāna
كَمَن كَانَ
இருக்கின்றவரைப் போன்று
fāsiqan
فَاسِقًاۚ
பாவியாக
lā yastawūna
لَّا يَسْتَوُۥنَ
அவர்கள் சமமாக மாட்டார்கள்
நம்பிக்கை கொண்ட ஒரு மனிதன் (இறைவனுக்கு) மாறு செய்பவனைப் போலாவானா? இருவரும் சமமாக மாட்டார்கள். ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௧௮)
Tafseer
௧௯

اَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ جَنّٰتُ الْمَأْوٰىۖ نُزُلًا ۢبِمَا كَانُوْا يَعْمَلُوْنَ ١٩

ammā
أَمَّا
ஆக,
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
எவர்கள்/நம்பிக்கை கொண்டார்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
falahum
فَلَهُمْ
அவர்களுக்கு
jannātu
جَنَّٰتُ
சொர்க்கங்கள்
l-mawā
ٱلْمَأْوَىٰ
தங்குமிடம்
nuzulan
نُزُلًۢا
விருந்தோம்பலாக
bimā kānū yaʿmalūna
بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்யும் (நற்) செயல்களின் காரணமாக சுவனபதி தங்கும் இடமாகி அதில் விருந்தாளியாக உபசரிக்கப்படுவார்கள். ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௧௯)
Tafseer
௨௦

وَاَمَّا الَّذِيْنَ فَسَقُوْا فَمَأْوٰىهُمُ النَّارُ كُلَّمَآ اَرَادُوْٓا اَنْ يَّخْرُجُوْا مِنْهَآ اُعِيْدُوْا فِيْهَا وَقِيْلَ لَهُمْ ذُوْقُوْا عَذَابَ النَّارِ الَّذِيْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ٢٠

wa-ammā
وَأَمَّا
ஆக
alladhīna fasaqū
ٱلَّذِينَ فَسَقُوا۟
பாவம் செய்தவர்கள்
famawāhumu
فَمَأْوَىٰهُمُ
அவர்களின் தங்குமிடம்
l-nāru
ٱلنَّارُۖ
நரகமாகும்
kullamā arādū
كُلَّمَآ أَرَادُوٓا۟
அவர்கள் நாடும்போதெல்லாம்
an yakhrujū
أَن يَخْرُجُوا۟
அவர்கள் வெளியேறுவதற்கு
min'hā
مِنْهَآ
அதிலிருந்து
uʿīdū
أُعِيدُوا۟
அவர்கள் திரும்பக் கொண்டுவரப்படுவார்கள்
fīhā
فِيهَا
அதில்
waqīla
وَقِيلَ
இன்னும் சொல்லப்படும்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
dhūqū
ذُوقُوا۟
சுவையுங்கள்
ʿadhāba
عَذَابَ
வேதனையை
l-nāri
ٱلنَّارِ
நரக
alladhī kuntum bihi tukadhibūna
ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்த
எவர்கள் பாவம் செய்கிறார்களோ அவர்கள் தங்குமிடம் நரகம்தான். அதிலிருந்து அவர்கள் வெளிப்பட முயற்சிக்கும் போதெல்லாம் அதனுள் இழுத்துத் தள்ளப்பட்டு "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரக வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள்" என்று அவர்களுக்குக் கூறப்படும். ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௨௦)
Tafseer