Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா - Word by Word

As-Sajdah

(as-Sajdah)

bismillaahirrahmaanirrahiim

الۤمّۤ ۗ ١

alif-lam-meem
الٓمٓ
அலிஃப், லாம், மீம்
அலிஃப்; லாம்; மீம். ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௧)
Tafseer

تَنْزِيْلُ الْكِتٰبِ لَا رَيْبَ فِيْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِيْنَۗ ٢

tanzīlu
تَنزِيلُ
இறக்கப்பட்ட
l-kitābi
ٱلْكِتَٰبِ
வேதமாகும்
lā rayba
لَا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
fīhi
فِيهِ
இதில்
min rabbi
مِن رَّبِّ
இறைவனிடமிருந்து
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
(நபியே! உங்கள்மீது) அருளப்பட்ட இவ்வேதம் உலகத்தாரின் இறைவனிடமிருந்தே வந்ததென்பதில் யாதொரு சந்தேகமுமில்லை. ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௨)
Tafseer

اَمْ يَقُوْلُوْنَ افْتَرٰىهُ ۚ بَلْ هُوَ الْحَقُّ مِنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّآ اَتٰىهُمْ مِّنْ نَّذِيْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ يَهْتَدُوْنَ ٣

am yaqūlūna
أَمْ يَقُولُونَ
அல்லது கூறுகிறார்களா?
if'tarāhu
ٱفْتَرَىٰهُۚ
இதை அவர் இட்டுக் கட்டினார் என்று
bal
بَلْ
மாறாக
huwa
هُوَ
இதுதான்
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மையா(ன வேதமா)கும்
min rabbika
مِن رَّبِّكَ
உமது இறைவனிடமிருந்து
litundhira
لِتُنذِرَ
நீர் எச்சரிப்பதற்காக
qawman
قَوْمًا
ஒரு சமுதாயத்தை
mā atāhum
مَّآ أَتَىٰهُم
அவர்களிடம் வராத
min nadhīrin
مِّن نَّذِيرٍ
எச்சரிப்பவர் எவரும்
min qablika
مِّن قَبْلِكَ
இதற்கு முன்னர்
laʿallahum yahtadūna
لَعَلَّهُمْ يَهْتَدُونَ
அவர்கள் நேர்வழி பெறுவதற்காக
(நமது நபி) "இதனை(த் தாமாகவே) கற்பனை செய்து கொண்டார்" என்று (உங்களைப் பற்றி) அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறன்று. இது உங்களது இறைவனால் உங்களுக்கு அருளப்பட்ட உண்மையான வேதமாகும். உங்களுக்கு முன்னர் இதுவரையில் யாதொரு தூதருமே வராதிருந்த (இந்த அரபி) மக்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே (இவ்வேதம் அருளப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி) அவர்கள் நேரான வழியில் செல்வார்களாக! ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௩)
Tafseer

اَللّٰهُ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِيْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِۗ مَا لَكُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّلِيٍّ وَّلَا شَفِيْعٍۗ اَفَلَا تَتَذَكَّرُوْنَ ٤

al-lahu alladhī
ٱللَّهُ ٱلَّذِى
அல்லாஹ்தான்
khalaqa
خَلَقَ
படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியையும்
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَا
அவ்விரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும்
fī sittati ayyāmin
فِى سِتَّةِ أَيَّامٍ
ஆறு நாட்களில்
thumma
ثُمَّ
பிறகு
is'tawā
ٱسْتَوَىٰ
உயர்ந்தான்
ʿalā l-ʿarshi
عَلَى ٱلْعَرْشِۖ
அர்ஷின் மீது
mā lakum
مَا لَكُم
உங்களுக்கு இல்லை
min dūnihi
مِّن دُونِهِۦ
அவனையன்றி
min waliyyin
مِن وَلِىٍّ
பொருப்பாளரோ
walā shafīʿin
وَلَا شَفِيعٍۚ
பரிந்துறையாளரோ
afalā tatadhakkarūna
أَفَلَا تَتَذَكَّرُونَ
நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா ?
அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் ஆறே நாள்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். (உங்களை) பாதுகாப்பவனோ அல்லது (உங்களுக்குப்) பரிந்து பேசுபவனோ அவனைத் தவிர (வேறொருவரும்) உங்களுக்கு இல்லை. (இதனை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெறவேண்டாமா? ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௪)
Tafseer

يُدَبِّرُ الْاَمْرَ مِنَ السَّمَاۤءِ اِلَى الْاَرْضِ ثُمَّ يَعْرُجُ اِلَيْهِ فِيْ يَوْمٍ كَانَ مِقْدَارُهٗٓ اَلْفَ سَنَةٍ مِّمَّا تَعُدُّوْنَ ٥

yudabbiru
يُدَبِّرُ
அவன் திட்டமிட்டு நிர்வகிக்கின்றான்
l-amra
ٱلْأَمْرَ
காரியத்தை
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
ilā l-arḍi
إِلَى ٱلْأَرْضِ
பூமி வரை
thumma
ثُمَّ
பிறகு
yaʿruju
يَعْرُجُ
அது உயருகிறது
ilayhi
إِلَيْهِ
அவன் பக்கம்
fī yawmin
فِى يَوْمٍ
ஒரு நாளில்
kāna
كَانَ
இருக்கிறது
miq'dāruhu
مِقْدَارُهُۥٓ
அதன் அளவு
alfa
أَلْفَ
ஆயிரம்
sanatin
سَنَةٍ
ஆண்டுகளாக
mimmā taʿuddūna
مِّمَّا تَعُدُّونَ
நீங்கள் எண்ணுகின்றபடி
வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள எல்லா காரியங்களையும் அவனே ஒழுங்கு படுத்துகின்றான். (ஒவ்வொன்றின் முடிவும்) ஒரு நாளன்று அவனிடமே சென்றுவிடும். அந்த (ஒரு) நாள் நீங்கள் எண்ணுகின்ற உங்கள் கணக்கின்படி ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும். ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௫)
Tafseer

ذٰلِكَ عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْعَزِيْزُ الرَّحِيْمُۙ ٦

dhālika
ذَٰلِكَ
அவன்தான்
ʿālimu
عَٰلِمُ
அறிந்தவன்
l-ghaybi
ٱلْغَيْبِ
மறைவானதை(யும்)
wal-shahādati
وَٱلشَّهَٰدَةِ
தெரிவதையும்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
மகா கருணையாளன்
அவனே (வானம் பூமியிலுள்ள) மறைவானதையும் வெளிப்படையானதையும் (உள்ளது உள்ளபடி) நன்கறிந்தவன். அன்றி, (அனைத்தையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௬)
Tafseer

الَّذِيْٓ اَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهٗ وَبَدَاَ خَلْقَ الْاِنْسَانِ مِنْ طِيْنٍ ٧

alladhī aḥsana
ٱلَّذِىٓ أَحْسَنَ
அவன் செம்மையாக்கினான்
kulla shayin
كُلَّ شَىْءٍ
ஒவ்வொன்றையும்
khalaqahu
خَلَقَهُۥۖ
அதைப் படைத்தான்
wabada-a
وَبَدَأَ
இன்னும் ஆரம்பித்தான்
khalqa
خَلْقَ
படைப்பதை
l-insāni
ٱلْإِنسَٰنِ
மனிதனை
min ṭīnin
مِن طِينٍ
களிமண்ணிலிருந்து
அவனே ஒவ்வொரு பொருளையும் (படைத்து) அவற்றின் கோலத்தையும் மிக்க அழகாக அமைத்தான். ஆரம்பத்தில் மனிதனை களிமண்ணைக் கொண்டே படைத்தான். ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௭)
Tafseer

ثُمَّ جَعَلَ نَسْلَهٗ مِنْ سُلٰلَةٍ مِّنْ مَّاۤءٍ مَّهِيْنٍ ۚ ٨

thumma
ثُمَّ
பிறகு
jaʿala
جَعَلَ
உருவாக்கினான்
naslahu
نَسْلَهُۥ
அவனது சந்ததிகளை
min sulālatin
مِن سُلَٰلَةٍ
வெளியேறக்கூடிய நீரிலிருந்து
min māin
مِّن مَّآءٍ
நீரிலிருந்து
mahīnin
مَّهِينٍ
மென்மையான
பின்னர், ஓர் அற்பத் துளியாகிய (இந்திரியச்) சத்திலிருந்து அவனுடைய சந்ததியை படைக்கின்றான். ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௮)
Tafseer

ثُمَّ سَوّٰىهُ وَنَفَخَ فِيْهِ مِنْ رُّوْحِهٖ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَۗ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ ٩

thumma
ثُمَّ
பிறகு
sawwāhu
سَوَّىٰهُ
அவனை சமமாக்கினான்
wanafakha
وَنَفَخَ
இன்னும் ஊதினான்
fīhi
فِيهِ
அவனில்
min rūḥihi
مِن رُّوحِهِۦۖ
தனது உயிரிலிருந்து
wajaʿala
وَجَعَلَ
இன்னும் அவன் அமைத்தான்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-samʿa
ٱلسَّمْعَ
செவியை(யும்)
wal-abṣāra
وَٱلْأَبْصَٰرَ
பார்வைகளையும்
wal-afidata
وَٱلْأَفْـِٔدَةَۚ
இதயங்களையும்
qalīlan
قَلِيلًا
குறைவாகவே
mā tashkurūna
مَّا تَشْكُرُونَ
நன்றி செலுத்துகின்றீர்கள்
பின்னர், (படைப்பாகிய) அதனைச் செப்பனிட்டுத் தன்னுடைய "ரூஹை" அதில் புகுத்தி (உங்களை உற்பத்தி செய்கிறான்.) உங்களுக்குக் காதுகள், கண்கள், உள்ளங்கள் ஆகியவற்றையும் அவனே அமைக்கிறான். இவ்வாறு இருந்தும் உங்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சிலரே! ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௯)
Tafseer
௧௦

وَقَالُوْٓا ءَاِذَا ضَلَلْنَا فِى الْاَرْضِ ءَاِنَّا لَفِيْ خَلْقٍ جَدِيْدٍ ەۗ بَلْ هُمْ بِلِقَاۤءِ رَبِّهِمْ كٰفِرُوْنَ ١٠

waqālū
وَقَالُوٓا۟
அவர்கள் கூறுகின்றனர்
a-idhā ḍalalnā
أَءِذَا ضَلَلْنَا
நாங்கள் மறைந்து விட்டால்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
a-innā
أَءِنَّا
?/நிச்சயமாக நாங்கள்
lafī khalqin
لَفِى خَلْقٍ
படைப்பில் (படைக்கப்படுவோமா)
jadīdin
جَدِيدٍۭۚ
புதிய
bal hum
بَلْ هُم
மாறாக/அவர்கள்
biliqāi
بِلِقَآءِ
சந்திப்பை
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
kāfirūna
كَٰفِرُونَ
நிராகரிக்கின்றவர்கள்
"(நாங்கள் இறந்து) பூமியில் அழிந்து போனதன் பின்னர் மெய்யாகவே நாங்கள் புதிய படைப்பாக அமைக்கப்பட்டு விடுவோமா?" என்று அவர்கள் கூறுகின்றனர். (இதனால்) அவர்கள் தங்களுடைய இறைவனைச் சந்திப்பதையும் நிராகரிக்கின்றனர். ([௩௨] ஸூரத்துஸ் ஸஜ்தா: ௧௦)
Tafseer