Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௭

Qur'an Surah Luqman Verse 7

ஸூரத்து லுக்மான் [௩௧]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا تُتْلٰى عَلَيْهِ اٰيٰتُنَا وَلّٰى مُسْتَكْبِرًا كَاَنْ لَّمْ يَسْمَعْهَا كَاَنَّ فِيْٓ اُذُنَيْهِ وَقْرًاۚ فَبَشِّرْهُ بِعَذَابٍ اَلِيْمٍ (لقمان : ٣١)

wa-idhā tut'lā
وَإِذَا تُتْلَىٰ
And when are recited
ஓதப்பட்டால்
ʿalayhi
عَلَيْهِ
to him
அவனுக்கு முன்
āyātunā
ءَايَٰتُنَا
Our Verses
நமது வசனங்கள்
wallā
وَلَّىٰ
he turns away
திரும்பி விடுகின்றான்
mus'takbiran
مُسْتَكْبِرًا
arrogantly
பெருமையடித்தவனாக
ka-an lam yasmaʿhā
كَأَن لَّمْ يَسْمَعْهَا
as if not he (had) heard them
அவற்றை அவன் செவிமடுக்காததைப் போன்று
ka-anna
كَأَنَّ
as if
போன்று
fī udhunayhi
فِىٓ أُذُنَيْهِ
in his ears
அவனுடைய இரண்டு காதுகளில்
waqran
وَقْرًاۖ
(is) deafness
மந்தம்
fabashir'hu
فَبَشِّرْهُ
So give him tidings
ஆகவே, அவனுக்கு நற்செய்தி கூறுவீராக!
biʿadhābin alīmin
بِعَذَابٍ أَلِيمٍ
of a punishment painful
வலிமிகுந்த வேதனையைக் கொண்டு

Transliteration:

Wa izaa tutlaa 'alayhi Aayaatunaa wallaa mustakbiran ka al lam yasma'haa ka anna feee uzunwihi waqran fabash shiru bi'azaabin aleem (QS. Luq̈mān:7)

English Sahih International:

And when Our verses are recited to him, he turns away arrogantly as if he had not heard them, as if there was in his ears deafness. So give him tidings of a painful punishment. (QS. Luqman, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

இவர்களில் எவருக்கும் நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதனை அவன் கேட்காதவனைப் போலும், தன்னுடைய இரு காதுகளிலும் செவிடு உள்ளவனைப் போலும் கர்வம்கொண்டு விலகிவிடுகிறான். ஆகவே, (நபியே!) அவனுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு நீங்கள் நற்செய்தி கூறுங்கள் (ஸூரத்து லுக்மான், வசனம் ௭)

Jan Trust Foundation

அ(த்தகைய)வனுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவன் அவற்றைக் கேட்காதவனைப் போல் - அவன் இரு காதுகளிலும் செவிட்டுத் தனம் இருப்பது போல், பெருமை கொண்டவனாகத் திரும்பி விடுகிறான்; ஆகவே அவனுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டென்று (நபியே!) நீர் நற் செய்தி கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவனுக்கு முன் நமது வசனங்கள் ஓதப்பட்டால் பெருமையடித்தவனாக திரும்பி விடுகின்றான் -அவற்றை அவன் செவிமடுக்காததைப் போன்று, அவனுடைய இரண்டு காதுகளில் மந்தம் இருப்பதைப் போன்று. வலிமிகுந்த வேதனையைக் கொண்டு அவனுக்கு நற்செய்தி கூறுவீராக!