Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௬

Qur'an Surah Luqman Verse 6

ஸூரத்து லுக்மான் [௩௧]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنَ النَّاسِ مَنْ يَّشْتَرِيْ لَهْوَ الْحَدِيْثِ لِيُضِلَّ عَنْ سَبِيْلِ اللّٰهِ بِغَيْرِ عِلْمٍۖ وَّيَتَّخِذَهَا هُزُوًاۗ اُولٰۤىِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ (لقمان : ٣١)

wamina l-nāsi
وَمِنَ ٱلنَّاسِ
And of the mankind
மக்களில்
man yashtarī
مَن يَشْتَرِى
(is he) who purchases
விலைக்கு வாங்குபவன்
lahwa
لَهْوَ
idle tales
வீண்
l-ḥadīthi
ٱلْحَدِيثِ
idle tales
பேச்சை
liyuḍilla
لِيُضِلَّ
to mislead
அவன் வழிகெடுப்பதற்காக
ʿan sabīli
عَن سَبِيلِ
from (the) path
பாதையிலிருந்து
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
bighayri ʿil'min
بِغَيْرِ عِلْمٍ
without knowledge
கல்வி இன்றி
wayattakhidhahā
وَيَتَّخِذَهَا
and takes it
இன்னும் அதை எடுத்துக்கொள்வதற்காக
huzuwan
هُزُوًاۚ
(in) ridicule
பரிகாசமாக
ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
இத்தகையவர்கள்
lahum
لَهُمْ
for them
இவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
வேதனை
muhīnun
مُّهِينٌ
humiliating
இழிவுபடுத்தும்

Transliteration:

Wa minan naasi mai-yashtaree lahuwal hadeesi li yudilla 'an sabeelil laahi bighairi 'ilminw wa yattakhizahaa huzuwaa; ulaaa'ika lahum 'azaabum muheen (QS. Luq̈mān:6)

English Sahih International:

And of the people is he who buys the amusement of speech to mislead [others] from the way of Allah without knowledge and who takes it [i.e., His way] in ridicule. Those will have a humiliating punishment. (QS. Luqman, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

(இவர்களைத் தவிர) மனிதரில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக்கதைகள் முதலிய) வீணான விஷயங்களை விலைக்கு வாங்கி (அவற்றை மக்களுக்கு ஓதிக் காண்பித்து) அல்லாஹ்வுடைய வழியில் இருந்து ஞானமின்றி மக்களை வழிகெடுத்து அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையவர்களுக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு. (ஸூரத்து லுக்மான், வசனம் ௬)

Jan Trust Foundation

(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் - அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கல்வி இன்றி அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற் காகவும், அதை (-அல்லாஹ்வின் பாதையை) பரிகாசமாக எடுத்துக் கொள்வதற் காகவும் வீண் பேச்சை விலைக்கு வாங்குபவன் மக்களில் இருக்கின்றான். இத்தகையவர்களுக்கு (அவர்களை) இழிவுபடுத்தும் வேதனை உண்டு.