குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௩௪
Qur'an Surah Luqman Verse 34
ஸூரத்து லுக்மான் [௩௧]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِۚ وَيُنَزِّلُ الْغَيْثَۚ وَيَعْلَمُ مَا فِى الْاَرْحَامِۗ وَمَا تَدْرِيْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًاۗ وَمَا تَدْرِيْ نَفْسٌۢ بِاَيِّ اَرْضٍ تَمُوْتُۗ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ ࣖ (لقمان : ٣١)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- ʿindahu
- عِندَهُۥ
- with Him
- அவனிடம்தான்
- ʿil'mu
- عِلْمُ
- (is the) knowledge
- அறிவு
- l-sāʿati
- ٱلسَّاعَةِ
- (of) the Hour
- மறுமையின்
- wayunazzilu
- وَيُنَزِّلُ
- and He sends down
- இன்னும் அவன்தான் இறக்குகின்றான்
- l-ghaytha
- ٱلْغَيْثَ
- the rain
- மழையை
- wayaʿlamu
- وَيَعْلَمُ
- and knows
- இன்னும் அவன் அறிகின்றான்
- mā fī l-arḥāmi
- مَا فِى ٱلْأَرْحَامِۖ
- what (is) in the wombs
- கர்ப்பப்பைகளில் உள்ளவற்றை
- wamā tadrī
- وَمَا تَدْرِى
- And not knows
- இன்னும் அறியாது
- nafsun
- نَفْسٌ
- any soul
- ஓர் ஆன்மா
- mādhā
- مَّاذَا
- what
- என்ன
- taksibu
- تَكْسِبُ
- it will earn
- அது செய்யும்
- ghadan
- غَدًاۖ
- tomorrow
- நாளை
- wamā tadrī
- وَمَا تَدْرِى
- and not knows
- இன்னும் அறியாது
- nafsun
- نَفْسٌۢ
- any soul
- ஓர் ஆன்மா
- bi-ayyi
- بِأَىِّ
- in what
- எந்த
- arḍin
- أَرْضٍ
- land
- பூமியில்
- tamūtu
- تَمُوتُۚ
- it will die
- அது மரணிக்கும்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌ
- (is) All-Knower
- நன்கறிந்தவன்
- khabīrun
- خَبِيرٌۢ
- All-Aware
- ஆழ்ந்தறிபவன்
Transliteration:
Innal laaha 'indahoo 'ilmus saa'ati wa yunazzilul ghaisa wa ya'lamu maa fil arhaami wa maa tadree nafsum maazaa takisbu ghadaa; wa maa tadree nafsum bi ayyi ardin tamoot; innal laaha 'Aleemun Khabeer(QS. Luq̈mān:34)
English Sahih International:
Indeed, Allah [alone] has knowledge of the Hour and sends down the rain and knows what is in the wombs. And no soul perceives what it will earn tomorrow, and no soul perceives in what land it will die. Indeed, Allah is Knowing and Aware. (QS. Luqman, Ayah ௩௪)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக (உலக முடிவு) காலத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் (மட்டும்)தான் இருக்கிறது. அவனே மழையை இறக்கி வைக்கிறான். அவனே கர்ப்பங்களில் தரிப்பதையும் அறிவான். (அவனைத் தவிர) எவரும் நாளைக்கு அவர் என்ன செய்வார் என்பதை அறியமாட்டார். எந்தப் பூமியில் இறப்பார் என்பதையும் (அவனைத் தவிர) எவரும் அறியமாட்டார். நிச்சயமாக அல்லாஹ்தான் (இவைகளை) நன்கறிந்தவனும் தெரிந்தவனுமாக இருக்கிறான். (ஸூரத்து லுக்மான், வசனம் ௩௪)
Jan Trust Foundation
நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அல்லாஹ்- அவனிடம்தான் மறுமை(யின்) அறிவு இருக்கின்றது. அவன்தான் மழையை இறக்குகின்றான். கர்ப்பப்பைகளில் உள்ளவற்றை அவன் அறிகின்றான். ஓர் ஆன்மா நாளை அது என்ன செய்யும் என்பதை அறியாது. ஓர் ஆன்மா அது எந்த பூமியில் மரணிக்கும் என்றும் அறியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...