Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௩௩

Qur'an Surah Luqman Verse 33

ஸூரத்து லுக்மான் [௩௧]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ وَاخْشَوْا يَوْمًا لَّا يَجْزِيْ وَالِدٌ عَنْ وَّلَدِهٖۖ وَلَا مَوْلُوْدٌ هُوَ جَازٍ عَنْ وَّالِدِهٖ شَيْـًٔاۗ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيٰوةُ الدُّنْيَاۗ وَلَا يَغُرَّنَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ (لقمان : ٣١)

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
O mankind!
மக்களே!
ittaqū
ٱتَّقُوا۟
Fear
பயந்துகொள்ளுங்கள்!
rabbakum
رَبَّكُمْ
your Lord
உங்கள் இறைவனை
wa-ikh'shaw
وَٱخْشَوْا۟
and fear
இன்னும் பயந்துகொள்ளுங்கள்
yawman
يَوْمًا
a Day
ஒரு நாளை
lā yajzī
لَّا يَجْزِى
not can avail
தடுக்கமாட்டார்
wālidun
وَالِدٌ
a father
தந்தை
ʿan waladihi
عَن وَلَدِهِۦ
[for] his son
தன் மகனை விட்டு
walā mawlūdun
وَلَا مَوْلُودٌ
and not a son
பிள்ளையும் இல்லை
huwa
هُوَ
he
அவர்
jāzin
جَازٍ
(can) avail
தடுக்கக்கூடியவராக
ʿan wālidihi
عَن وَالِدِهِۦ
[for] his father
தனது தகப்பனை விட்டு
shayan inna
شَيْـًٔاۚ إِنَّ
anything Indeed
எதையும்
waʿda
وَعْدَ
(the) Promise
நிச்சயமாக வாக்கு
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
ḥaqqun
حَقٌّۖ
(is) True
உண்மையானது
falā taghurrannakumu
فَلَا تَغُرَّنَّكُمُ
so let not deceive you so let not deceive you
ஆகவே, உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்
l-ḥayatu l-dun'yā
ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا
the life (of) the world
உலக வாழ்க்கை
walā yaghurrannakum
وَلَا يَغُرَّنَّكُم
and let not deceive you and let not deceive you
இன்னும் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்
bil-lahi
بِٱللَّهِ
about Allah
அல்லாஹ்வின் விஷயத்தில்
l-gharūru
ٱلْغَرُورُ
the deceiver
ஏமாற்றக் கூடியவன்

Transliteration:

Yaaa ayyuhan naasuttaqoo Rabbakum wakhshaw Yawmal laa yajzee waalidun 'anw waladihee wa laa mawloodun huwa jaazin 'anw waalidihee shai'aa; innaa wa'dal laahi haqqun falaa taghurran nakumul hayaatud dunyaa wa laa yaghur rannakum billaahil gharoon (QS. Luq̈mān:33)

English Sahih International:

O mankind, fear your Lord and fear a Day when no father will avail his son, nor will a son avail his father at all. Indeed, the promise of Allah is truth, so let not the worldly life delude you and be not deceived about Allah by the Deceiver [i.e., Satan]. (QS. Luqman, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு அஞ்சி ஒரு நாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள். (அந்நாளில்) தந்தை பிள்ளைக்கு உதவ மாட்டான்; பிள்ளையும் தந்தைக்கு யாதொரு உதவியும் செய்ய மாட்டான். ஒவ்வொருவரும் தன்னையே பாதுகாத்துக் கொள்ளும் படி நிர்ப்பந்திக்கக்கூடிய நாளாகும். நிச்சயமாக (அந்நாள் வருமென்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி விட வேண்டாம். (ஷைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம். (ஸூரத்து லுக்மான், வசனம் ௩௩)

Jan Trust Foundation

மனிதர்களே! உங்கள் இறைவனையஞ்சி (நடந்து) கொள்ளுங்கள்; இன்னும் அந்த (கியாமத்) நாளைக்குறித்துப் பயந்து கொள்ளுங்கள்; (அந்நாளில்) தந்தை தன் மகனுக்கு பலனளிக்க மாட்டார்; (அதே போன்று) பிள்ளையும் தன் தந்தைக்கு எதையும் நிறைவேற்றி வைக்க இயலாது; நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே இவ்வுலக வாழ்க்கை உங்களை மருட்டி ஏமாற்றிவிட வேண்டாம்; மருட்டி ஏமாற்றுபவ(னாகிய ஷைத்தா)னும் அல்லாஹ்வைக் குறித்து உங்களை மருட்டி ஏமாற்றாதிருக்கட்டும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மக்களே! உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள்! இன்னும், ஒரு நாளை பயந்துகொள்ளுங்கள்! (அந்நாளில்) தந்தை தன் மகனை விட்டும் (வேதனையை) தடுக்கமாட்டார். பிள்ளையும் தனது தகப்பனை விட்டும் (வேதனையை) தடுக்கக் கூடியவராக இல்லை. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது. ஆகவே, உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றிவிட வேண்டாம். ஏமாற்றக் கூடியவன் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்.