Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௩௨

Qur'an Surah Luqman Verse 32

ஸூரத்து லுக்மான் [௩௧]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا غَشِيَهُمْ مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللّٰهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ ەۚ فَلَمَّا نَجّٰىهُمْ اِلَى الْبَرِّ فَمِنْهُمْ مُّقْتَصِدٌۗ وَمَا يَجْحَدُ بِاٰيٰتِنَآ اِلَّا كُلُّ خَتَّارٍ كَفُوْرٍ (لقمان : ٣١)

wa-idhā ghashiyahum
وَإِذَا غَشِيَهُم
And when covers them
அவர்களை சூழ்ந்துகொண்டால்
mawjun
مَّوْجٌ
a wave
ஓர் அலை
kal-ẓulali
كَٱلظُّلَلِ
like canopies
நிழல்களைப் போன்ற
daʿawū
دَعَوُا۟
they call
அழைக்கின்றனர்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
mukh'liṣīna
مُخْلِصِينَ
(being) sincere
தூய்மைப்படுத்தியவர்களாக
lahu
لَهُ
to Him
அவனுக்கு மட்டும்
l-dīna
ٱلدِّينَ
(in) religion
மார்க்கத்தை
falammā najjāhum
فَلَمَّا نَجَّىٰهُمْ
But when He delivers them
அவர்களை அவன் காப்பாற்றிய போது
ilā l-bari
إِلَى ٱلْبَرِّ
to the land
கரைக்கு
famin'hum
فَمِنْهُم
then among them
அவர்களில் சிலர்
muq'taṣidun
مُّقْتَصِدٌۚ
(some are) moderate
நல்லவர்களாக
wamā yajḥadu
وَمَا يَجْحَدُ
And not deny
மறுக்க மாட்டார்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَآ
Our Signs
நமது அத்தாட்சிகளை
illā kullu
إِلَّا كُلُّ
except every
தவிர/எல்லோரையும்
khattārin
خَتَّارٍ
traitor
வாக்குறுதிகளை மீறக்கூடியவர்(கள்)
kafūrin
كَفُورٍ
ungrateful
நன்றிகெட்டவர்(கள்)

Transliteration:

Wa izaa ghashiyahum mawjun kazzulali da'a-wul laaha mukhliseena lahud deena fa lammaa najjaahum ilal barri faminhum muqtasid; wa maa yajhadu bi Aayaatinaa illaa kullu khattaarin kafoor (QS. Luq̈mān:32)

English Sahih International:

And when waves come over them like canopies, they supplicate Allah, sincere to Him in religion [i.e., faith]. But when He delivers them to the land, there are [some] of them who are moderate [in faith]. And none rejects Our signs except everyone treacherous and ungrateful. (QS. Luqman, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

(கப்பலில் செல்லும்) அவர்களை(ப் புயல் காற்றடித்து நாலா பக்கங்களிலிருந்தும்) அலைகள் மேல் முகடுகளைப் போல் சூழ்ந்து கொள்ளும் சமயத்தில், அல்லாஹ்வுக்கு வழிபட்டு, கலப்பற்ற மனதுடன் அவனை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர்! நாம் அவர்களைக் கரையில் இறக்கி பாதுகாத்துக் கொண்டாலோ அவர்களில் சிலர்தாம் நிதானமாக நடக்கின்றனர். (பெரும்பாலான வர்களோ நிதானம் தவறியே நடக்கின்றனர்.) மிக நன்றிகெட்ட சதிகாரர்களைத் தவிர (மற்றெவரும்) நம்முடைய அத்தாட்சிகளை நிராகரிக்க மாட்டார்கள். (ஸூரத்து லுக்மான், வசனம் ௩௨)

Jan Trust Foundation

(கப்பலில் செல்லும்) அவர்களை, மலைமுகடுகளைப் போன்ற அலை சூழ்ந்து கொள்ளுமானால், அல்லாஹ்வுக்கே வழிபட்டு அந்தரங்க சுத்தியுடன் அவனிடம் பிரார்த்திக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களைக் காப்பாற்றிக்கரைசேர்த்து விட்டால், அவர்களில் சிலர் நடுநிலையாக நடந்து கொள்கிறார்கள் - எனினும் மிகவும் நன்றி கெட்ட, பெருந்துரோகிகளைத் தவிர வேறு எவரும் நம் அத்தாட்சிகளை நிராகரிப்பதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(பெரும்) நிழல்களைப் போன்ற ஓர் அலை அவர்களை சூழ்ந்துகொண்டால் அல்லாஹ்வை (மட்டும் உதவிக்கு) அழைக்கின்றனர் -மார்க்கத்தை (வழிபாடுகளை) அவனுக்கு மட்டும் தூய்மைப்படுத்தியவர்களாக. கரைக்கு அவர்களை அவன் காப்பாற்றியபோது அவர்களில் சிலர் (சொல்லால் மட்டும்) நல்லவர்களாக இருக்கின்றார்கள். (உள்ளத்தில் நிராகரிப்பை மறைத்துக் கொள்கின்றனர். மற்றும் அதிகமானவர்களோ வெளிப்படையாக நிராகரிப்புக்கே திரும்பி விடுகின்றனர்.) வாக்குறுதிகளை அதிகம் மீறக்கூடியவர்கள், நன்றி கெட்டவர்கள் ஆகிய எல்லோரையும் தவிர நமது அத்தாட்சிகளை (-வசனங்களை மற்றவர்கள்) மறுக்க மாட்டார்கள்.