Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௩௧

Qur'an Surah Luqman Verse 31

ஸூரத்து லுக்மான் [௩௧]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَمْ تَرَ اَنَّ الْفُلْكَ تَجْرِيْ فِى الْبَحْرِ بِنِعْمَتِ اللّٰهِ لِيُرِيَكُمْ مِّنْ اٰيٰتِهٖۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ (لقمان : ٣١)

alam tara
أَلَمْ تَرَ
Do not you see
நீர் கவனிக்கவில்லையா?
anna
أَنَّ
that
நிச்சயமாக
l-ful'ka
ٱلْفُلْكَ
the ships
கப்பல்
tajrī
تَجْرِى
sail
ஓடுகின்றன
fī l-baḥri
فِى ٱلْبَحْرِ
through the sea
கடலில்
biniʿ'mati
بِنِعْمَتِ
by (the) Grace
அருளினால்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
liyuriyakum
لِيُرِيَكُم
that He may show you
அவன் உங்களுக்கு காண்பிப்பதற்காக
min āyātihi
مِّنْ ءَايَٰتِهِۦٓۚ
of His Signs?
தனது அத்தாட்சிகளை
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
in that
இதில் உள்ளன
laāyātin
لَءَايَٰتٍ
surely (are) Signs
அத்தாட்சிகள்
likulli
لِّكُلِّ
for everyone
எல்லோருக்கும்
ṣabbārin
صَبَّارٍ
(who is) patient
பெரிய பொறுமையாளர்
shakūrin
شَكُورٍ
grateful
அதிகம் நன்றி செலுத்துபவர்

Transliteration:

Alam tara annal fulka tajree fil bahri bini'matil laahi li yuriyakum min Aayaatih; inna fee zaalika la Aayaatil likulli sabbaarin shakoor (QS. Luq̈mān:31)

English Sahih International:

Do you not see that ships sail through the sea by the favor of Allah that He may show you of His signs? Indeed in that are signs for everyone patient and grateful. (QS. Luqman, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வினுடைய அருட்கொடைகளைச் சுமந்துகொண்டு கடலில் செல்லும் கப்பலும் அவனுடைய அத்தாட்சிகளை உங்களுக்கு அறிவிக்கக் கூடியதாக இருப்பதை நீங்கள் கவனிக்க வில்லையா? பொறுமையுடன் (கஷ்டங்களைச்) சகித்திருந்து, அவனுக்கு நன்றி செலுத்தும் அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (ஸூரத்து லுக்மான், வசனம் ௩௧)

Jan Trust Foundation

தன்னுடைய அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பதற்காக வேண்டி, அல்லாஹ்வுடைய அருள் கொடையைக் கொண்டு நிச்சயமாகக் கப்பல் கடலில் (மிதந்து) செல்வதை நீர் காணவில்லையா? நிச்சயமாக இதில் பொறுமை மிக்க - நன்றியறிதலுடைய ஒவ்வொருவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக கடலில் கப்பல் அல்லாஹ்வின் அருளினால் ஓடுகின்றன - அவன் (-அல்லாஹ்) தனது (வல்லமையின்) அத்தாட்சிகளை உங்களுக்கு காண்பிப்பதற்காக (இதை செய்தான்) என்பதை நீர் கவனிக்கவில்லையா? நிச்சயமாக இதில் பெரிய பொறுமையாளர், அதிகம் நன்றி செலுத்துபவர் எல்லோருக்கும் (இறை) அத்தாட்சிகள் உள்ளன.