குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௨௯
Qur'an Surah Luqman Verse 29
ஸூரத்து லுக்மான் [௩௧]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَۖ كُلٌّ يَّجْرِيْٓ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى وَّاَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ (لقمان : ٣١)
- alam tara
- أَلَمْ تَرَ
- Do not you see
- நீர் கவனிக்கவில்லையா?
- anna
- أَنَّ
- that
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- yūliju
- يُولِجُ
- causes to enter
- நுழைக்கின்றான்
- al-layla
- ٱلَّيْلَ
- the night
- இரவை
- fī l-nahāri
- فِى ٱلنَّهَارِ
- into the day
- பகலில்
- wayūliju
- وَيُولِجُ
- and causes to enter
- இன்னும் நுழைக்கின்றான்
- l-nahāra
- ٱلنَّهَارَ
- the day
- பகலை
- fī al-layli
- فِى ٱلَّيْلِ
- into the night
- இரவில்
- wasakhara
- وَسَخَّرَ
- and has subjected
- இன்னும் வசப்படுத்தினான்
- l-shamsa
- ٱلشَّمْسَ
- the sun
- சூரியனை(யும்)
- wal-qamara
- وَٱلْقَمَرَ
- and the moon
- சந்திரனையும்
- kullun
- كُلٌّ
- each
- எல்லாம்
- yajrī
- يَجْرِىٓ
- moving
- ஓடுகின்றன
- ilā ajalin
- إِلَىٰٓ أَجَلٍ
- for a term
- தவணையின் பக்கம்
- musamman
- مُّسَمًّى
- appointed
- ஒரு குறிப்பிட்ட
- wa-anna
- وَأَنَّ
- and that
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- of what you do
- நீங்கள் செய்பவற்றை
- khabīrun
- خَبِيرٌ
- (is) All-Aware
- ஆழ்ந்தறிபவன்
Transliteration:
Alam tara annal laaha yoolijul laila fin nahaari wa yoolijun nahaara fil laili wa sakhkharash shamsa wal qamara kulluny yajreee ilaaa ajalim musammanw wa annal laaha bimaa ta'malona Khabeer(QS. Luq̈mān:29)
English Sahih International:
Do you not see [i.e., know] that Allah causes the night to enter the day and causes the day to enter the night and has subjected the sun and the moon, each running [its course] for a specified term, and that Allah, of whatever you do, is Aware? (QS. Luqman, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
(நபியே!) அல்லாஹ்தான் இரவைப் பகலிலும் பகலை இரவிலும் நுழைய வைத்து சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்திற்குள்) அடக்கி வைத்திருக்கின்றான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? இவைகளில் ஒவ்வொன்றும் (அவைகளுக்கு அவன்) குறிப்பிட்ட திட்டப்படியே நடக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கிறான். (ஸூரத்து லுக்மான், வசனம் ௨௯)
Jan Trust Foundation
“நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்” என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன; அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அல்லாஹ் பகலில் இரவை நுழைக்கின்றான்; இரவில் பகலை நுழைக்கின்றான்; சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தினான்; எல்லாம் ஒரு குறிப்பிட்ட தவணையின் பக்கம் ஓடுகின்றன என்பதையும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் (எல்லோரும்) செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் என்பதையும் நீர் கவனிக்கவில்லையா?