குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௨௮
Qur'an Surah Luqman Verse 28
ஸூரத்து லுக்மான் [௩௧]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَا خَلْقُكُمْ وَلَا بَعْثُكُمْ اِلَّا كَنَفْسٍ وَّاحِدَةٍ ۗاِنَّ اللّٰهَ سَمِيْعٌۢ بَصِيْرٌ (لقمان : ٣١)
- mā khalqukum
- مَّا خَلْقُكُمْ
- Not (is) your creation
- இல்லை/உங்களைப் படைப்பது
- walā baʿthukum
- وَلَا بَعْثُكُمْ
- and not your resurrection
- இன்னும் உங்களை எழுப்புவதும்
- illā kanafsin
- إِلَّا كَنَفْسٍ
- but as a soul
- ஆன்மாவை போன்றே தவிர
- wāḥidatin
- وَٰحِدَةٍۗ
- single
- ஒரே ஓர்
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- samīʿun
- سَمِيعٌۢ
- (is) All-Hearer
- நன்கு செவியுறுபவன்
- baṣīrun
- بَصِيرٌ
- All-Seer
- உற்று நோக்குபவன்
Transliteration:
Maa khalqukum wa laa ba'sukum illaa kanafsinw-waa hidah; innal laaha Samee'um Baseer(QS. Luq̈mān:28)
English Sahih International:
Your creation and your resurrection will not be but as that of a single soul. Indeed, Allah is Hearing and Seeing. (QS. Luqman, Ayah ௨௮)
Abdul Hameed Baqavi:
மனிதர்களே! (ஆரம்பத்தில்) உங்களை படைப்பதும், (மரணித்த பின்) உங்களுக்கு உயிர்கொடுத்து எழுப்புவதும் அவனுக்கு உங்களில் ஒருவரை (ஆரம்பத்தில்) படை(த்து உயிர் கொடு)ப்பது போலவேயன்றி வேறில்லை. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்து லுக்மான், வசனம் ௨௮)
Jan Trust Foundation
(மனிதர்களே!) உங்களை படைப்பதும், (நீங்கள் மரித்த பின்) உங்களை (உயிர்ப்பித்து) எழுப்புவதும் ஒருவரைப் (படைத்து, அவர் மரித்தபின் உயிர் கொடுத்து எழுப்புவது) போலன்றி வேறில்லை; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; உற்று நோக்குபவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களை (-உங்கள் அனைவரையும்) படைப்பதும் உங்களை (மரணிக்க வைத்து பின்னர் உயிர்கொடுத்து) எழுப்புவதும் ஒரே ஓர் ஆன்மாவைப் (படைப்பதைப்) போன்றே தவிர (வேறு ஒரு சிரமமான காரியம்) இல்லை. நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன்; உற்று நோக்குபவன் ஆவான்.