குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௨௨
Qur'an Surah Luqman Verse 22
ஸூரத்து லுக்மான் [௩௧]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ وَمَنْ يُّسْلِمْ وَجْهَهٗٓ اِلَى اللّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰىۗ وَاِلَى اللّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ (لقمان : ٣١)
- waman
- وَمَن
- And whoever
- எவர்
- yus'lim
- يُسْلِمْ
- submits
- பணியவைப்பாரோ
- wajhahu
- وَجْهَهُۥٓ
- his face
- தன் முகத்தை
- ilā l-lahi
- إِلَى ٱللَّهِ
- to Allah
- அல்லாஹ்வின் பக்கம்
- wahuwa
- وَهُوَ
- while he
- அவரோ
- muḥ'sinun
- مُحْسِنٌ
- (is) a good- doer
- நல்லறம் புரிகின்றவராக
- faqadi
- فَقَدِ
- then indeed
- திட்டமாக
- is'tamsaka
- ٱسْتَمْسَكَ
- he has grasped
- அவர் பற்றிப்பிடித்தார்
- bil-ʿur'wati
- بِٱلْعُرْوَةِ
- the handhold
- வளையத்தை
- l-wuth'qā
- ٱلْوُثْقَىٰۗ
- the most trustworthy
- மிக உறுதியான
- wa-ilā
- وَإِلَى
- And to
- பக்கம்தான்
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- அல்லாஹ்வின்
- ʿāqibatu
- عَٰقِبَةُ
- (is the) end
- முடிவு இருக்கின்றது
- l-umūri
- ٱلْأُمُورِ
- (of) the matters
- எல்லா காரியங்களின்
Transliteration:
Wa many yuslim wajha hooo ilal laahi wa huwa muhsinun faqadistamsaka bil'ur watil wusqaa; wa ilal laahi 'aaqibatul umoor(QS. Luq̈mān:22)
English Sahih International:
And whoever submits his face [i.e., self] to Allah while he is a doer of good – then he has grasped the most trustworthy handhold. And to Allah will be the outcome of [all] matters. (QS. Luqman, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
எவர் தன்னுடைய முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கம் திருப்பி நன்மையும் செய்து கொண்டிருக்கிறாரோ அவர் நிச்சயமாக (அறுபடாத) மிக்க பலமானதொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டார். எல்லா காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கின்றது. (ஸூரத்து லுக்மான், வசனம் ௨௨)
Jan Trust Foundation
எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ, அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டான். இன்னும் காரியங்களின் முடிவெல்லாம் அல்லாஹ்விடமேயுள்ளது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவர் தனது முகத்தை அல்லாஹ்வின் பக்கம் -அவரோ நல்லறம் புரிகின்றவராக இருக்க- பணியவைப்பாரோ திட்டமாக அவர் மிக உறுதியான வளையத்தை பற்றிப்பிடித்தார். அல்லாஹ்வின் பக்கம்தான் எல்லா காரியங்களின் முடிவு இருக்கின்றது.