Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௧௯

Qur'an Surah Luqman Verse 19

ஸூரத்து லுக்மான் [௩௧]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاقْصِدْ فِيْ مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَۗ اِنَّ اَنْكَرَ الْاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيْرِ ࣖ (لقمان : ٣١)

wa-iq'ṣid
وَٱقْصِدْ
And be moderate
இன்னும் பணிவாக இரு!
fī mashyika
فِى مَشْيِكَ
in your pace
உனது நடையில்
wa-ugh'ḍuḍ
وَٱغْضُضْ
and lower
இன்னும் தாழ்த்திக்கொள்!
min ṣawtika
مِن صَوْتِكَۚ
[of] your voice
உனது சப்தத்தை
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
ankara
أَنكَرَ
(the) harshest
மிக மிக அருவருப்பானது
l-aṣwāti
ٱلْأَصْوَٰتِ
(of all) sounds
சப்தங்களில்
laṣawtu
لَصَوْتُ
(is) surely (the) voice
சப்தமாகும்
l-ḥamīri
ٱلْحَمِيرِ
(of) the donkeys"
கழுதைகளின்

Transliteration:

Waqsid fee mashyika waghdud min sawtik; inna ankaral aswaati lasawtul hameer (QS. Luq̈mān:19)

English Sahih International:

And be moderate in your pace and lower your voice; indeed, the most disagreeable of sounds is the voice of donkeys." (QS. Luqman, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

உன் நடையில் (பெருமையும் கர்வமுமின்றி) மத்திய தரத்தை விரும்பு. உன் சப்தத்தையும் தாழ்த்திக்கொள். ஏனென்றால், சப்தங்களிலெல்லாம் மிக்க வெறுக்கத்தக்கது கழுதையின் (உரத்த) சப்தமே!" (என்று கூறினார்கள்). (ஸூரத்து லுக்மான், வசனம் ௧௯)

Jan Trust Foundation

“உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உனது நடையில் பணிவாக இரு! (நிதானமாக இரு!) உனது சப்தத்தை தாழ்த்திக்கொள்! நிச்சயமாக சப்தங்களில் மிக மிக அருவருப்பானது கழுதைகளின் சப்தமாகும்.