Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௧௭

Qur'an Surah Luqman Verse 17

ஸூரத்து லுக்மான் [௩௧]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰبُنَيَّ اَقِمِ الصَّلٰوةَ وَأْمُرْ بِالْمَعْرُوْفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلٰى مَآ اَصَابَكَۗ اِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ (لقمان : ٣١)

yābunayya
يَٰبُنَىَّ
O my son!
என் மகனே!
aqimi
أَقِمِ
Establish
நிலைநிறுத்து!
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
the prayer
தொழுகையை
wamur
وَأْمُرْ
and enjoin
இன்னும் ஏவு!
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِ
[with] the right
நன்மையை
wa-in'ha
وَٱنْهَ
and forbid
இன்னும் தடு!
ʿani l-munkari
عَنِ ٱلْمُنكَرِ
from the wrong
தீமையை விட்டும்
wa-iṣ'bir
وَٱصْبِرْ
and be patient
இன்னும் பொறுமையாக இரு!
ʿalā mā aṣābaka
عَلَىٰ مَآ أَصَابَكَۖ
over what befalls you
உனக்கு ஏற்பட்டதன் மீது
inna dhālika
إِنَّ ذَٰلِكَ
Indeed that
நிச்சயமாக இவைதான்
min ʿazmi l-umūri
مِنْ عَزْمِ ٱلْأُمُورِ
(is) of the matters requiring determination the matters requiring determination
உறுதிமிக்க காரியங்களில்

Transliteration:

Yaa bunaiya aqimis-Salaata waamur bilma'roofi wanha 'anil munkari wasbir 'alaa maaa asaabaka inna zaalika min 'azmil umoor (QS. Luq̈mān:17)

English Sahih International:

O my son, establish prayer, enjoin what is right, forbid what is wrong, and be patient over what befalls you. Indeed, [all] that is of the matters [requiring] resolve. (QS. Luqman, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

என்னருமை மகனே! "தொழுகையைக் கடைப்பிடித்தொழுகு, நன்மையான காரியங்களைக் கொண்டு ஏவி, பாவமான காரியங்களில் இருந்து (மனிதர்களை) விலக்கி வா. உனக்கேற்படும் கஷ்டங்களைப் பொறுமையுடன் நீ சகித்துக்கொள். நிச்சயமாக இது எல்லா காரியங்களிலும் வீரமிக்கச் செயலாகும். (ஸூரத்து லுக்மான், வசனம் ௧௭)

Jan Trust Foundation

“என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

என் மகனே! தொழுகையை நிலைநிறுத்து! நன்மையை ஏவு! தீமையை விட்டும் (மக்களைத்) தடு! (சோதனைகளில்) உனக்கு ஏற்பட்டதன் மீது பொறுமையாக இரு! நிச்சயமாக இவைதான் உறுதிமிக்க காரியங்களில் உள்ளவை ஆகும்.