குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௧௬
Qur'an Surah Luqman Verse 16
ஸூரத்து லுக்மான் [௩௧]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰبُنَيَّ اِنَّهَآ اِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِيْ صَخْرَةٍ اَوْ فِى السَّمٰوٰتِ اَوْ فِى الْاَرْضِ يَأْتِ بِهَا اللّٰهُ ۗاِنَّ اللّٰهَ لَطِيْفٌ خَبِيْرٌ (لقمان : ٣١)
- yābunayya
- يَٰبُنَىَّ
- "O my son!
- என் மகனே!
- innahā
- إِنَّهَآ
- Indeed it
- நிச்சயமாக அது
- in taku
- إِن تَكُ
- if it be
- இருந்தாலும்
- mith'qāla
- مِثْقَالَ
- (the) weight
- அளவு
- ḥabbatin
- حَبَّةٍ
- (of) a grain
- விதை
- min khardalin
- مِّنْ خَرْدَلٍ
- of a mustard seed
- எள்ளின்
- fatakun
- فَتَكُن
- and it be
- அது இருந்தாலும்
- fī ṣakhratin
- فِى صَخْرَةٍ
- in a rock
- ஒரு பாறையில்
- aw
- أَوْ
- or
- அல்லது
- fī l-samāwāti
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- in the heavens
- வானங்களில்
- aw
- أَوْ
- or
- அல்லது
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- yati
- يَأْتِ
- Allah will bring it forth
- கொண்டு வருவான்
- bihā
- بِهَا
- Allah will bring it forth
- அதை
- l-lahu
- ٱللَّهُۚ
- Allah will bring it forth
- அல்லாஹ்
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- laṭīfun
- لَطِيفٌ
- (is) All-Subtle
- மிக நுட்பமானவன்
- khabīrun
- خَبِيرٌ
- All-Aware
- ஆழ்ந்தறிபவன்
Transliteration:
Ya bunaiya innahaaa in taku misqaala habbatim min khardalin fatakun fee sakhratin aw fis samaawaati aw fil ardi yaati bihal laa; innal laaha lateefun Khabeer(QS. Luq̈mān:16)
English Sahih International:
[And Luqman said], "O my son, indeed if it [i.e., a wrong] should be the weight of a mustard seed and should be within a rock or [anywhere] in the heavens or in the earth, Allah will bring it forth. Indeed, Allah is Subtle and Aware. (QS. Luqman, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
(பின்னும் லுக்மான் தனது மகனை நோக்கி) "என் அருமை மகனே! (நன்மையோ தீமையோ) அது ஒரு கடுகின் விதை அளவில் இருந்தாலும் சரி, அது (கரும்) பாறைகளுக்குள்ளோ அல்லது வானத்திலோ, பூமியின் ஆழத்திலோ (மறைந்து) இருந்தபோதிலும் (உங்களிடம் கணக்குக் கேட்கும்போது) நிச்சயமாக அல்லாஹ் அதையும் கொண்டு வந்து விடுவான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வெகு நுட்பமான அறிவுடையவனும் (அனைத்தையும்) நன்கு தெரிந்து வைத்திருப்பவனாகவும் இருக்கிறான். (ஸூரத்து லுக்மான், வசனம் ௧௬)
Jan Trust Foundation
(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
என் மகனே! நிச்சயமாக அது (-நீ செய்கின்ற நன்மை அல்லது தீமை) எள்ளின் விதை அளவு இருந்தாலும், அது ஒரு பாறையில் இருந்தாலும் அல்லது வானங்களில் அல்லது பூமியில் இருந்தாலும், அல்லாஹ் அதைக் கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் மிக நுட்பமானவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.