குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௧௫
Qur'an Surah Luqman Verse 15
ஸூரத்து லுக்மான் [௩௧]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنْ جَاهَدٰكَ عَلٰٓى اَنْ تُشْرِكَ بِيْ مَا لَيْسَ لَكَ بِهٖ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِى الدُّنْيَا مَعْرُوْفًا ۖوَّاتَّبِعْ سَبِيْلَ مَنْ اَنَابَ اِلَيَّۚ ثُمَّ اِلَيَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ (لقمان : ٣١)
- wa-in jāhadāka
- وَإِن جَٰهَدَاكَ
- But if they strive against you
- அவர்கள் உன்னை சிரமப்படுத்தினால்
- ʿalā an tush'rika
- عَلَىٰٓ أَن تُشْرِكَ
- on that you associate partners
- நீ இணையாக்குவதற்கு
- bī
- بِى
- with Me
- எனக்கு
- mā laysa
- مَا لَيْسَ
- what not
- ஒன்றை/இல்லை
- laka
- لَكَ
- you have
- உனக்கு
- bihi
- بِهِۦ
- of it
- அதற்கு
- ʿil'mun
- عِلْمٌ
- any knowledge
- அறிவு
- falā tuṭiʿ'humā
- فَلَا تُطِعْهُمَاۖ
- then (do) not obey both of them
- அவ்விருவருக்கும் நீ கீழ்ப்படியாதே!
- waṣāḥib'humā
- وَصَاحِبْهُمَا
- But accompany them
- இன்னும் அவ்விருவருடன் பழகுவாயாக!
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- in the world
- உலகத்தில்
- maʿrūfan
- مَعْرُوفًاۖ
- (with) kindness
- நல்லமுறையில்
- wa-ittabiʿ
- وَٱتَّبِعْ
- and follow
- இன்னும் நீ பின்பற்று !
- sabīla
- سَبِيلَ
- (the) path
- பாதையை
- man anāba
- مَنْ أَنَابَ
- (of him) who turns
- திரும்பியவர்களின்
- ilayya thumma
- إِلَىَّۚ ثُمَّ
- to Me Then
- என் பக்கம்/பிறகு
- ilayya
- إِلَىَّ
- towards Me
- என் பக்கம்தான்
- marjiʿukum
- مَرْجِعُكُمْ
- (is) your return
- உங்கள் மீளுமிடம்
- fa-unabbi-ukum
- فَأُنَبِّئُكُم
- then I will inform you
- நான் உங்களுக்கு அறிவிப்பேன்
- bimā kuntum taʿmalūna
- بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
- of what you used (to) do"
- நீங்கள் செய்து கொண்டிருந்ததை
Transliteration:
Wa in jaahadaaka 'alaaa an tushrika bee maa laisa laka bihee 'ilmun falaa tuti'humaa wa saahib humaa fid dunyaa ma'roofanw wattabi' sabeela man anaaba ilayy; summa ilaiya marji'ukum fa unabbi'ukum bimaa kuntum ta'maloon(QS. Luq̈mān:15)
English Sahih International:
But if they endeavor to make you associate with Me that of which you have no knowledge, do not obey them but accompany them in [this] world with appropriate kindness and follow the way of those who turn back to Me [in repentance]. Then to Me will be your return, and I will inform you about what you used to do. (QS. Luqman, Ayah ௧௫)
Abdul Hameed Baqavi:
எனினும், (இறைவன் என்று) நீ அறிந்துகொள்ளாத யாதொரு பொருளை எனக்கு இணை வைக்கும்படி அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ் விஷயத்தில்) நீ அவர்களுக்கு வழிப்பட வேண்டாம். ஆயினும், இவ்வுலக விஷயத்தில் நீ அவர்களுக்கு (நீதமாக) உதவி செய்து (அன்பாக) நேசித்துவா. எவ்விஷயத்திலும் என்னையே நோக்கி நிற்பவர்களின் வழியை நீ பின்பற்றி நட. பின்னர், நீங்கள் அனைவரும் நம்மிடமே வரவேண்டிய திருக்கின்றது. நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அச்சமயம் நான் உங்களுக்கு அறிவுறுத்துவேன்" (என்று கூறினோம்). (ஸூரத்து லுக்மான், வசனம் ௧௫)
Jan Trust Foundation
ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உனக்கு அறிவில்லாத ஒன்றை எனக்கு நீ இணையாக்குவதற்கு அவர்கள் உன்னை சிரமப்படுத்தினால், (-அதற்காக உன் மீது அவர்கள் முழு முயற்சி செய்தால்) அவ்விருவருக்கும் நீ கீழ்ப்படியாதே! (ஆனால்) உலக(விஷய)த்தில் அவ்விருவருடன் நல்லமுறையில் பழகுவாயாக! என் பக்கம் திரும்பியவர்களின் பாதையை நீ பின்பற்று! பிறகு, என் பக்கம்தான் உங்கள் (அனைவருடைய) மீளுமிடம் இருக்கின்றது. நீங்கள் செய்துகொண்டிருந்ததை நான் உங்களுக்கு அறிவிப்பேன்.