Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௧௪

Qur'an Surah Luqman Verse 14

ஸூரத்து லுக்மான் [௩௧]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِۚ حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصَالُهٗ فِيْ عَامَيْنِ اَنِ اشْكُرْ لِيْ وَلِوَالِدَيْكَۗ اِلَيَّ الْمَصِيْرُ (لقمان : ٣١)

wawaṣṣaynā
وَوَصَّيْنَا
And We have enjoined
இன்னும் நாம் உபதேசித்தோம்
l-insāna
ٱلْإِنسَٰنَ
(upon) man
மனிதனுக்கு
biwālidayhi
بِوَٰلِدَيْهِ
for his parents -
அவனது பெற்றோருடன் நல்லுறவு பேணும்படி
ḥamalathu
حَمَلَتْهُ
carried him
அவனை சுமந்தாள்
ummuhu
أُمُّهُۥ
his mother
அவனது தாய்
wahnan
وَهْنًا
(in) weakness
பலவீனத்துடன்
ʿalā wahnin
عَلَىٰ وَهْنٍ
upon weakness
பலவீனத்துக்கு மேல்
wafiṣāluhu
وَفِصَٰلُهُۥ
and his weaning
அவனுக்கு பால்குடி மறக்கவைப்பது
fī ʿāmayni
فِى عَامَيْنِ
(is) in two years
இரண்டுஆண்டுகளில்
ani ush'kur
أَنِ ٱشْكُرْ
that "Be grateful
அதாவது நீ நன்றி செலுத்து
لِى
to Me
எனக்கு(ம்)
waliwālidayka
وَلِوَٰلِدَيْكَ
and to your parents;
உன் பெற்றோருக்கும்
ilayya
إِلَىَّ
towards Me
என் பக்கம்தான்
l-maṣīru
ٱلْمَصِيرُ
(is) the destination
மீளுதல் இருக்கிறது

Transliteration:

Wa wassainal bi waalidaihi hamalat hu ummuhoo wahnan 'alaa wahninw wa fisaaluhoo fee 'aamaini anishkur lee wa liwaalidaika ilaiyal maseer (QS. Luq̈mān:14)

English Sahih International:

And We have enjoined upon man [care] for his parents. His mother carried him, [increasing her] in weakness upon weakness, and his weaning is in two years. Be grateful to Me and to your parents; to Me is the [final] destination. (QS. Luqman, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

"தனது தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்து கொண்டலைந்தாள். (பிறந்த) பிறகும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. முடிவில் நீ நம்மிடமே வந்து சேர வேண்டியதிருக்கின்றது. (ஸூரத்து லுக்மான், வசனம் ௧௪)

Jan Trust Foundation

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மனிதனுக்கு அவனது பெற்றோருடன் நல்லுறவு பேணும்படி நாம் உபதேசித்தோம். அவனது தாய் அவனை பலவீனத்துக்கு மேல் பலவீனத்துடன் (-கஷ்டத்திற்கு மேல் கஷ்டத்துடன்) சுமந்தாள். அவனுக்கு பால்குடி மறக்க வைப்பது இரண்டு ஆண்டுகளில் ஆகும். அதாவது நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து! என் பக்கம்தான் மீளுதல் இருக்கிறது.