Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து லுக்மான் வசனம் ௧௦

Qur'an Surah Luqman Verse 10

ஸூரத்து லுக்மான் [௩௧]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

خَلَقَ السَّمٰوٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا وَاَلْقٰى فِى الْاَرْضِ رَوَاسِيَ اَنْ تَمِيْدَ بِكُمْ وَبَثَّ فِيْهَا مِنْ كُلِّ دَاۤبَّةٍۗ وَاَنْزَلْنَا مِنَ السَّمَاۤءِ مَاۤءً فَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيْمٍ (لقمان : ٣١)

khalaqa
خَلَقَ
He created
அவன் படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
the heavens
வானங்களை
bighayri ʿamadin
بِغَيْرِ عَمَدٍ
without pillars
தூண்கள் இன்றி
tarawnahā
تَرَوْنَهَاۖ
that you see
பார்க்கின்றீர்கள்/ அவற்றை
wa-alqā
وَأَلْقَىٰ
and has cast
இன்னும் ஏற்படுத்தினான்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
rawāsiya
رَوَٰسِىَ
firm mountains
உறுதியான மலைகளை
an tamīda bikum
أَن تَمِيدَ بِكُمْ
lest it (might) shake with you
அது உங்களை சாய்த்து விடாமல் இருப்பதற்காக
wabatha
وَبَثَّ
and He dispersed
இன்னும் , பரப்பினான்
fīhā min kulli
فِيهَا مِن كُلِّ
in it from every
அதில்/எல்லா
dābbatin
دَآبَّةٍۚ
creature
உயிரினங்களையும்
wa-anzalnā
وَأَنزَلْنَا
And We sent down
இன்னும் நாம் இறக்கினோம்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
from the sky
மேகத்திலிருந்து
māan
مَآءً
water
மழையை
fa-anbatnā
فَأَنۢبَتْنَا
then We caused to grow
முளைக்க வைத்தோம்
fīhā
فِيهَا
therein
அதில்
min kulli zawjin karīmin
مِن كُلِّ زَوْجٍ كَرِيمٍ
of every kind noble
எல்லா வகையான அழகிய தாவரங்களை

Transliteration:

Khalaqas samaawaati bi ghairi 'amadin tarawnahaa wa alqaa fil ardi rawaasiya an tameeda bikum wa bassa feehaa min kulli daaabbah; wa anzalnaa minas samaaa'i maaa'an fa ambatnaa feeha min kulli zawjin kareem (QS. Luq̈mān:10)

English Sahih International:

He created the heavens without pillars that you see and has cast into the earth firmly set mountains, lest it should shift with you, and dispersed therein from every creature. And We sent down rain from the sky and made grow therein [plants] of every noble kind. (QS. Luqman, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

அவனே வானங்களைத் தூண்கள் இன்றியே படைத்திருக்கின்றான். அதனை நீங்களும் பார்க்கின்றீர்கள். பூமி உங்களைக் கவிழ்த்து விடாதிருப்பதற்காக (பளுவான) மலைகளை (அதில்) நிறுத்திவைத்து விதவிதமான உயிரினங்களையும் அதில் பரப்பினான். (மனிதர்களே! அல்லாஹ்வாகிய) நாமே மேகத்தில் இருந்து மழையை பொழியச்செய்து அதிலிருந்தே நேர்த்தியான ஒவ்வொரு வகைப் புற்பூண்டுகளையும் ஜோடி ஜோடியாக முளைப்பிக்கச் செய்கிறோம். (ஸூரத்து லுக்மான், வசனம் ௧௦)

Jan Trust Foundation

அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் வானங்களை -அவற்றை நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி படைத்தான். இன்னும், பூமியில் உறுதியான மலைகளை ஏற்படுத்தினான் அது உங்களை சாய்த்துவிடாமல் இருப்பதற்காக. இன்னும், அதில் எல்லா உயிரினங் களையும் பரப்பினான். நாம் மேகத்திலிருந்து மழையை இறக்கினோம். (அதன் மூலம்) அதில் எல்லா வகையான அழகிய தாவரங்களை முளைக்க வைத்தோம்.