Skip to content

ஸூரா ஸூரத்து லுக்மான் - Page: 4

Luqman

(Luq̈mān)

௩௧

اَلَمْ تَرَ اَنَّ الْفُلْكَ تَجْرِيْ فِى الْبَحْرِ بِنِعْمَتِ اللّٰهِ لِيُرِيَكُمْ مِّنْ اٰيٰتِهٖۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ٣١

alam tara
أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
anna
أَنَّ
நிச்சயமாக
l-ful'ka
ٱلْفُلْكَ
கப்பல்
tajrī
تَجْرِى
ஓடுகின்றன
fī l-baḥri
فِى ٱلْبَحْرِ
கடலில்
biniʿ'mati
بِنِعْمَتِ
அருளினால்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
liyuriyakum
لِيُرِيَكُم
அவன் உங்களுக்கு காண்பிப்பதற்காக
min āyātihi
مِّنْ ءَايَٰتِهِۦٓۚ
தனது அத்தாட்சிகளை
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் உள்ளன
laāyātin
لَءَايَٰتٍ
அத்தாட்சிகள்
likulli
لِّكُلِّ
எல்லோருக்கும்
ṣabbārin
صَبَّارٍ
பெரிய பொறுமையாளர்
shakūrin
شَكُورٍ
அதிகம் நன்றி செலுத்துபவர்
அல்லாஹ்வினுடைய அருட்கொடைகளைச் சுமந்துகொண்டு கடலில் செல்லும் கப்பலும் அவனுடைய அத்தாட்சிகளை உங்களுக்கு அறிவிக்கக் கூடியதாக இருப்பதை நீங்கள் கவனிக்க வில்லையா? பொறுமையுடன் (கஷ்டங்களைச்) சகித்திருந்து, அவனுக்கு நன்றி செலுத்தும் அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௩௧)
Tafseer
௩௨

وَاِذَا غَشِيَهُمْ مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللّٰهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ ەۚ فَلَمَّا نَجّٰىهُمْ اِلَى الْبَرِّ فَمِنْهُمْ مُّقْتَصِدٌۗ وَمَا يَجْحَدُ بِاٰيٰتِنَآ اِلَّا كُلُّ خَتَّارٍ كَفُوْرٍ ٣٢

wa-idhā ghashiyahum
وَإِذَا غَشِيَهُم
அவர்களை சூழ்ந்துகொண்டால்
mawjun
مَّوْجٌ
ஓர் அலை
kal-ẓulali
كَٱلظُّلَلِ
நிழல்களைப் போன்ற
daʿawū
دَعَوُا۟
அழைக்கின்றனர்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
mukh'liṣīna
مُخْلِصِينَ
தூய்மைப்படுத்தியவர்களாக
lahu
لَهُ
அவனுக்கு மட்டும்
l-dīna
ٱلدِّينَ
மார்க்கத்தை
falammā najjāhum
فَلَمَّا نَجَّىٰهُمْ
அவர்களை அவன் காப்பாற்றிய போது
ilā l-bari
إِلَى ٱلْبَرِّ
கரைக்கு
famin'hum
فَمِنْهُم
அவர்களில் சிலர்
muq'taṣidun
مُّقْتَصِدٌۚ
நல்லவர்களாக
wamā yajḥadu
وَمَا يَجْحَدُ
மறுக்க மாட்டார்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَآ
நமது அத்தாட்சிகளை
illā kullu
إِلَّا كُلُّ
தவிர/எல்லோரையும்
khattārin
خَتَّارٍ
வாக்குறுதிகளை மீறக்கூடியவர்(கள்)
kafūrin
كَفُورٍ
நன்றிகெட்டவர்(கள்)
(கப்பலில் செல்லும்) அவர்களை(ப் புயல் காற்றடித்து நாலா பக்கங்களிலிருந்தும்) அலைகள் மேல் முகடுகளைப் போல் சூழ்ந்து கொள்ளும் சமயத்தில், அல்லாஹ்வுக்கு வழிபட்டு, கலப்பற்ற மனதுடன் அவனை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர்! நாம் அவர்களைக் கரையில் இறக்கி பாதுகாத்துக் கொண்டாலோ அவர்களில் சிலர்தாம் நிதானமாக நடக்கின்றனர். (பெரும்பாலான வர்களோ நிதானம் தவறியே நடக்கின்றனர்.) மிக நன்றிகெட்ட சதிகாரர்களைத் தவிர (மற்றெவரும்) நம்முடைய அத்தாட்சிகளை நிராகரிக்க மாட்டார்கள். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௩௨)
Tafseer
௩௩

يٰٓاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ وَاخْشَوْا يَوْمًا لَّا يَجْزِيْ وَالِدٌ عَنْ وَّلَدِهٖۖ وَلَا مَوْلُوْدٌ هُوَ جَازٍ عَنْ وَّالِدِهٖ شَيْـًٔاۗ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيٰوةُ الدُّنْيَاۗ وَلَا يَغُرَّنَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ ٣٣

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே!
ittaqū
ٱتَّقُوا۟
பயந்துகொள்ளுங்கள்!
rabbakum
رَبَّكُمْ
உங்கள் இறைவனை
wa-ikh'shaw
وَٱخْشَوْا۟
இன்னும் பயந்துகொள்ளுங்கள்
yawman
يَوْمًا
ஒரு நாளை
lā yajzī
لَّا يَجْزِى
தடுக்கமாட்டார்
wālidun
وَالِدٌ
தந்தை
ʿan waladihi
عَن وَلَدِهِۦ
தன் மகனை விட்டு
walā mawlūdun
وَلَا مَوْلُودٌ
பிள்ளையும் இல்லை
huwa
هُوَ
அவர்
jāzin
جَازٍ
தடுக்கக்கூடியவராக
ʿan wālidihi
عَن وَالِدِهِۦ
தனது தகப்பனை விட்டு
shayan inna
شَيْـًٔاۚ إِنَّ
எதையும்
waʿda
وَعْدَ
நிச்சயமாக வாக்கு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ḥaqqun
حَقٌّۖ
உண்மையானது
falā taghurrannakumu
فَلَا تَغُرَّنَّكُمُ
ஆகவே, உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்
l-ḥayatu l-dun'yā
ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا
உலக வாழ்க்கை
walā yaghurrannakum
وَلَا يَغُرَّنَّكُم
இன்னும் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வின் விஷயத்தில்
l-gharūru
ٱلْغَرُورُ
ஏமாற்றக் கூடியவன்
மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு அஞ்சி ஒரு நாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள். (அந்நாளில்) தந்தை பிள்ளைக்கு உதவ மாட்டான்; பிள்ளையும் தந்தைக்கு யாதொரு உதவியும் செய்ய மாட்டான். ஒவ்வொருவரும் தன்னையே பாதுகாத்துக் கொள்ளும் படி நிர்ப்பந்திக்கக்கூடிய நாளாகும். நிச்சயமாக (அந்நாள் வருமென்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி விட வேண்டாம். (ஷைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௩௩)
Tafseer
௩௪

اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِۚ وَيُنَزِّلُ الْغَيْثَۚ وَيَعْلَمُ مَا فِى الْاَرْحَامِۗ وَمَا تَدْرِيْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًاۗ وَمَا تَدْرِيْ نَفْسٌۢ بِاَيِّ اَرْضٍ تَمُوْتُۗ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ ࣖ ٣٤

inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ʿindahu
عِندَهُۥ
அவனிடம்தான்
ʿil'mu
عِلْمُ
அறிவு
l-sāʿati
ٱلسَّاعَةِ
மறுமையின்
wayunazzilu
وَيُنَزِّلُ
இன்னும் அவன்தான் இறக்குகின்றான்
l-ghaytha
ٱلْغَيْثَ
மழையை
wayaʿlamu
وَيَعْلَمُ
இன்னும் அவன் அறிகின்றான்
mā fī l-arḥāmi
مَا فِى ٱلْأَرْحَامِۖ
கர்ப்பப்பைகளில் உள்ளவற்றை
wamā tadrī
وَمَا تَدْرِى
இன்னும் அறியாது
nafsun
نَفْسٌ
ஓர் ஆன்மா
mādhā
مَّاذَا
என்ன
taksibu
تَكْسِبُ
அது செய்யும்
ghadan
غَدًاۖ
நாளை
wamā tadrī
وَمَا تَدْرِى
இன்னும் அறியாது
nafsun
نَفْسٌۢ
ஓர் ஆன்மா
bi-ayyi
بِأَىِّ
எந்த
arḍin
أَرْضٍ
பூமியில்
tamūtu
تَمُوتُۚ
அது மரணிக்கும்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
khabīrun
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிபவன்
நிச்சயமாக (உலக முடிவு) காலத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் (மட்டும்)தான் இருக்கிறது. அவனே மழையை இறக்கி வைக்கிறான். அவனே கர்ப்பங்களில் தரிப்பதையும் அறிவான். (அவனைத் தவிர) எவரும் நாளைக்கு அவர் என்ன செய்வார் என்பதை அறியமாட்டார். எந்தப் பூமியில் இறப்பார் என்பதையும் (அவனைத் தவிர) எவரும் அறியமாட்டார். நிச்சயமாக அல்லாஹ்தான் (இவைகளை) நன்கறிந்தவனும் தெரிந்தவனுமாக இருக்கிறான். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௩௪)
Tafseer