وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ اٰبَاۤءَنَاۗ اَوَلَوْ كَانَ الشَّيْطٰنُ يَدْعُوْهُمْ اِلٰى عَذَابِ السَّعِيْرِ ٢١
- wa-idhā qīla
- وَإِذَا قِيلَ
- கூறப்பட்டால்
- lahumu
- لَهُمُ
- அவர்களுக்கு
- ittabiʿū
- ٱتَّبِعُوا۟
- பின்பற்றுங்கள்
- mā anzala
- مَآ أَنزَلَ
- இறக்கியதை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- qālū
- قَالُوا۟
- கூறுகின்றனர்
- bal
- بَلْ
- மாறாக
- nattabiʿu
- نَتَّبِعُ
- பின்பற்றுவோம்
- mā wajadnā
- مَا وَجَدْنَا
- எதை/கண்டோமோ
- ʿalayhi
- عَلَيْهِ
- அதன் மீது
- ābāanā
- ءَابَآءَنَآۚ
- எங்கள் மூதாதைகளை
- awalaw kāna
- أَوَلَوْ كَانَ
- இருந்தாலுமா?
- l-shayṭānu
- ٱلشَّيْطَٰنُ
- ஷைத்தான்
- yadʿūhum
- يَدْعُوهُمْ
- அவர்களை அழைப்பவனாக
- ilā ʿadhābi
- إِلَىٰ عَذَابِ
- வேதனையின் பக்கம்
- l-saʿīri
- ٱلسَّعِيرِ
- கொழுந்துவிட்டெரியும் நரகம்
அவர்களை நோக்கி "அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்" எனக் கூறினால், அதற்கு அவர்கள் "அன்று, எங்கள் மூதாதைகள் எதன்மீது இருக்க நாங்கள் கண்டோமோ அதனையே பின்பற்றுவோம்" என்று கூறுகின்றனர். (என்னே!) அவர்கள் மூதாதைகளை ஷைத்தான் நரக வேதனையின் பக்கம் அழைத்து (அவர்களும் சென்று) இருந்தாலுமா? (இவர்கள் அவர்களைப் பின்பற்றிச் செல்வார்கள்!) ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௨௧)Tafseer
۞ وَمَنْ يُّسْلِمْ وَجْهَهٗٓ اِلَى اللّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰىۗ وَاِلَى اللّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ ٢٢
- waman
- وَمَن
- எவர்
- yus'lim
- يُسْلِمْ
- பணியவைப்பாரோ
- wajhahu
- وَجْهَهُۥٓ
- தன் முகத்தை
- ilā l-lahi
- إِلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் பக்கம்
- wahuwa
- وَهُوَ
- அவரோ
- muḥ'sinun
- مُحْسِنٌ
- நல்லறம் புரிகின்றவராக
- faqadi
- فَقَدِ
- திட்டமாக
- is'tamsaka
- ٱسْتَمْسَكَ
- அவர் பற்றிப்பிடித்தார்
- bil-ʿur'wati
- بِٱلْعُرْوَةِ
- வளையத்தை
- l-wuth'qā
- ٱلْوُثْقَىٰۗ
- மிக உறுதியான
- wa-ilā
- وَإِلَى
- பக்கம்தான்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- ʿāqibatu
- عَٰقِبَةُ
- முடிவு இருக்கின்றது
- l-umūri
- ٱلْأُمُورِ
- எல்லா காரியங்களின்
எவர் தன்னுடைய முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கம் திருப்பி நன்மையும் செய்து கொண்டிருக்கிறாரோ அவர் நிச்சயமாக (அறுபடாத) மிக்க பலமானதொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டார். எல்லா காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கின்றது. ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௨௨)Tafseer
وَمَنْ كَفَرَ فَلَا يَحْزُنْكَ كُفْرُهٗۗ اِلَيْنَا مَرْجِعُهُمْ فَنُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْاۗ اِنَّ اللّٰهَ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ٢٣
- waman
- وَمَن
- எவர்(கள்)
- kafara
- كَفَرَ
- நிராகரிப்பாரோ
- falā yaḥzunka
- فَلَا يَحْزُنكَ
- உம்மை கவலைப்படுத்த வேண்டாம்
- kuf'ruhu
- كُفْرُهُۥٓۚ
- அவருடைய நிராகரிப்பு
- ilaynā
- إِلَيْنَا
- நம் பக்கம்தான்
- marjiʿuhum
- مَرْجِعُهُمْ
- அவர்களின் மீளுமிடம்
- fanunabbi-uhum
- فَنُنَبِّئُهُم
- அவர்களுக்கு நாம் அறிவிப்போம்
- bimā ʿamilū
- بِمَا عَمِلُوٓا۟ۚ
- அவர்கள் செய்தவற்றை
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌۢ
- நன்கறிந்தவன்
- bidhāti
- بِذَاتِ
- உள்ளவற்றை
- l-ṣudūri
- ٱلصُّدُورِ
- நெஞ்சங்களில்
(நபியே!) எவரேனும் உங்களை நிராகரித்து விட்டால், அவர்களுடைய நிராகரிப்பு உங்களைத் துக்கத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அவர்கள் நம்மிடமே வரவேண்டியது இருக்கின்றது. அச்சமயம் அவர்களுடைய (இச்) செயலைப் பற்றி நாம் அவர்களுக்கு அறிவுறுத்துவோம். நிச்சயமாக அல்லாஹ் (மனிதர்களின்) உள்ளங்களில் உள்ளவைகளை நன்கறிந்தவனாக இருக்கிறான். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௨௩)Tafseer
نُمَتِّعُهُمْ قَلِيْلًا ثُمَّ نَضْطَرُّهُمْ اِلٰى عَذَابٍ غَلِيْظٍ ٢٤
- numattiʿuhum
- نُمَتِّعُهُمْ
- அவர்களுக்கு நாம் சுகமளிப்போம்
- qalīlan
- قَلِيلًا
- கொஞ்சம்
- thumma
- ثُمَّ
- பிறகு
- naḍṭarruhum
- نَضْطَرُّهُمْ
- நிர்ப்பந்தமாக கொண்டு வருவோம் அவர்களை
- ilā
- إِلَىٰ
- பக்கம்
- ʿadhābin
- عَذَابٍ
- வேதனையின்
- ghalīẓin
- غَلِيظٍ
- கடுமையான
அவர்களை (இச்சமயம்) சிறிது சுகமனுபவிக்கும்படி நாம் விட்டு வைப்போம். பின்னரோ கடுமையான வேதனையின் பக்கம் (செல்லும்படி) நாம் அவர்களை நிர்ப்பந்தித்து விடுவோம். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௨௪)Tafseer
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَيَقُوْلُنَّ اللّٰهُ ۗقُلِ الْحَمْدُ لِلّٰهِ ۗبَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ ٢٥
- wala-in
- وَلَئِن
- sa-altahum
- سَأَلْتَهُم
- அவர்களிடம் நீர் கேட்டால்
- man
- مَّنْ
- எவன்
- khalaqa
- خَلَقَ
- படைத்தான்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களையும்
- wal-arḍa
- وَٱلْأَرْضَ
- பூமியையும்
- layaqūlunna
- لَيَقُولُنَّ
- நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்
- l-lahu
- ٱللَّهُۚ
- அல்லாஹ்தான்
- quli
- قُلِ
- கூறுவீராக!
- l-ḥamdu
- ٱلْحَمْدُ
- எல்லாப் புகழும்
- lillahi
- لِلَّهِۚ
- அல்லாஹ்விற்கே!
- bal
- بَلْ
- மாறாக
- aktharuhum
- أَكْثَرُهُمْ
- அதிகமானோர் அவர்களில்
- lā yaʿlamūna
- لَا يَعْلَمُونَ
- அறியமாட்டார்கள்
(நபியே!) "வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்?" என்று நீங்கள் அவர்களைக் கேட்பீராயின், அதற்கவர்கள் "அல்லாஹ்தான்" என்று நிச்சயமாகக் கூறுவார்கள். (அதற்கு நீங்கள் "இவ்வளவேனும் உங்களுக்கு அறிவு இருப்பது பற்றி) அல்லாஹ்வை நான் புகழ்கிறேன்" என்று கூறுங்கள். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இறைவனை இவ்வாறு புகழ்ந்து துதி செய்ய) அறிய மாட்டார்கள். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௨௫)Tafseer
لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ اِنَّ اللّٰهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيْدُ ٢٦
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்விற்கே
- mā fī l-samāwāti
- مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில் உள்ளவை(யும்)
- wal-arḍi
- وَٱلْأَرْضِۚ
- இன்னும் பூமியில்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha huwa
- ٱللَّهَ هُوَ
- அல்லாஹ்தான்
- l-ghaniyu
- ٱلْغَنِىُّ
- முற்றிலும் நிறைவானவன்
- l-ḥamīdu
- ٱلْحَمِيدُ
- மிகுந்த புகழாளன்
வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே. எனினும், நிச்சயமாக அல்லாஹ் (இவற்றின்) தேவையற்றவனும் மிகப் புகழுடையவனாகவும் இருக்கிறான். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௨௬)Tafseer
وَلَوْ اَنَّ مَا فِى الْاَرْضِ مِنْ شَجَرَةٍ اَقْلَامٌ وَّالْبَحْرُ يَمُدُّهٗ مِنْۢ بَعْدِهٖ سَبْعَةُ اَبْحُرٍ مَّا نَفِدَتْ كَلِمٰتُ اللّٰهِ ۗاِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ ٢٧
- walaw
- وَلَوْ
- இருந்தால்/நிச்சயமாக
- annamā fī l-arḍi
- أَنَّمَا فِى ٱلْأَرْضِ
- இருந்தால்/நிச்சயமாக பூமியில் உள்ளவை
- min shajaratin
- مِن شَجَرَةٍ
- மரங்கள்
- aqlāmun
- أَقْلَٰمٌ
- எழுது கோல்களாக
- wal-baḥru
- وَٱلْبَحْرُ
- இன்னும் கடல்
- yamudduhu
- يَمُدُّهُۥ
- அதற்கு மையாக மாறினால்
- min baʿdihi
- مِنۢ بَعْدِهِۦ
- அதற்குப் பின்னர்
- sabʿatu
- سَبْعَةُ
- ஏழு
- abḥurin
- أَبْحُرٍ
- கடல்களும்
- mā nafidat
- مَّا نَفِدَتْ
- தீர்ந்துவிடாது
- kalimātu
- كَلِمَٰتُ
- ஞானங்கள்
- l-lahi
- ٱللَّهِۗ
- அல்லாஹ்வின்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- ʿazīzun
- عَزِيزٌ
- மிகைத்தவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- மகா ஞானவான்
பூமியிலுள்ள மரங்கள் (செடிகள்) அனைத்தும் எழுது கோல்களாகவும், கடல் நீரை மையாகவும் வைத்து (அது தீர்ந்து) பின்னும் ஏழு கடல் நீரையும் மையாக வைத்து எழுதியபோதிலும் அல்லாஹ்வுடைய வசனங்கள் (எழுதி) முடிவு பெறாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௨௭)Tafseer
مَا خَلْقُكُمْ وَلَا بَعْثُكُمْ اِلَّا كَنَفْسٍ وَّاحِدَةٍ ۗاِنَّ اللّٰهَ سَمِيْعٌۢ بَصِيْرٌ ٢٨
- mā khalqukum
- مَّا خَلْقُكُمْ
- இல்லை/உங்களைப் படைப்பது
- walā baʿthukum
- وَلَا بَعْثُكُمْ
- இன்னும் உங்களை எழுப்புவதும்
- illā kanafsin
- إِلَّا كَنَفْسٍ
- ஆன்மாவை போன்றே தவிர
- wāḥidatin
- وَٰحِدَةٍۗ
- ஒரே ஓர்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- samīʿun
- سَمِيعٌۢ
- நன்கு செவியுறுபவன்
- baṣīrun
- بَصِيرٌ
- உற்று நோக்குபவன்
மனிதர்களே! (ஆரம்பத்தில்) உங்களை படைப்பதும், (மரணித்த பின்) உங்களுக்கு உயிர்கொடுத்து எழுப்புவதும் அவனுக்கு உங்களில் ஒருவரை (ஆரம்பத்தில்) படை(த்து உயிர் கொடு)ப்பது போலவேயன்றி வேறில்லை. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௨௮)Tafseer
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَۖ كُلٌّ يَّجْرِيْٓ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى وَّاَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ ٢٩
- alam tara
- أَلَمْ تَرَ
- நீர் கவனிக்கவில்லையா?
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- yūliju
- يُولِجُ
- நுழைக்கின்றான்
- al-layla
- ٱلَّيْلَ
- இரவை
- fī l-nahāri
- فِى ٱلنَّهَارِ
- பகலில்
- wayūliju
- وَيُولِجُ
- இன்னும் நுழைக்கின்றான்
- l-nahāra
- ٱلنَّهَارَ
- பகலை
- fī al-layli
- فِى ٱلَّيْلِ
- இரவில்
- wasakhara
- وَسَخَّرَ
- இன்னும் வசப்படுத்தினான்
- l-shamsa
- ٱلشَّمْسَ
- சூரியனை(யும்)
- wal-qamara
- وَٱلْقَمَرَ
- சந்திரனையும்
- kullun
- كُلٌّ
- எல்லாம்
- yajrī
- يَجْرِىٓ
- ஓடுகின்றன
- ilā ajalin
- إِلَىٰٓ أَجَلٍ
- தவணையின் பக்கம்
- musamman
- مُّسَمًّى
- ஒரு குறிப்பிட்ட
- wa-anna
- وَأَنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- நீங்கள் செய்பவற்றை
- khabīrun
- خَبِيرٌ
- ஆழ்ந்தறிபவன்
(நபியே!) அல்லாஹ்தான் இரவைப் பகலிலும் பகலை இரவிலும் நுழைய வைத்து சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்திற்குள்) அடக்கி வைத்திருக்கின்றான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? இவைகளில் ஒவ்வொன்றும் (அவைகளுக்கு அவன்) குறிப்பிட்ட திட்டப்படியே நடக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கிறான். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௨௯)Tafseer
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ وَاَنَّ مَا يَدْعُوْنَ مِنْ دُوْنِهِ الْبَاطِلُۙ وَاَنَّ اللّٰهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيْرُ ࣖ ٣٠
- dhālika
- ذَٰلِكَ
- அது
- bi-anna
- بِأَنَّ
- காரணத்தால்/ நிச்சயமாக
- l-laha huwa
- ٱللَّهَ هُوَ
- அல்லாஹ்தான்
- l-ḥaqu
- ٱلْحَقُّ
- உண்மையானவன்
- wa-anna
- وَأَنَّ
- இன்னும் நிச்சயமாக
- mā yadʿūna
- مَا يَدْعُونَ
- அவர்கள் அழைக்கின்றவை
- min dūnihi
- مِن دُونِهِ
- அவனையன்றி
- l-bāṭilu
- ٱلْبَٰطِلُ
- பொய்யானவை
- wa-anna
- وَأَنَّ
- இன்னும் நிச்சயமாக
- l-laha huwa
- ٱللَّهَ هُوَ
- அல்லாஹ்தான்
- l-ʿaliyu
- ٱلْعَلِىُّ
- மிக உயர்ந்தவன்
- l-kabīru
- ٱلْكَبِيرُ
- மிகப் பெரியவன்
இவையனைத்தும் "நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன் என்பதற்கும், அவனையன்றி அவர்கள் (தெய்வங்களென) அழைப்பவை பொய்யானவை என்பதற்கும், அல்லாஹ்தான் மிகப் பெரியவனும் மேலானவனும் ஆவான்" என்பதற்கும் அத்தாட்சி களாக இருக்கின்றன. ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௩௦)Tafseer