Skip to content

ஸூரா ஸூரத்து லுக்மான் - Page: 2

Luqman

(Luq̈mān)

௧௧

هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِيْ مَاذَا خَلَقَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖۗ بَلِ الظّٰلِمُوْنَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ࣖ ١١

hādhā
هَٰذَا
இவை
khalqu
خَلْقُ
படைப்புகளாகும்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
fa-arūnī
فَأَرُونِى
ஆகவே எனக்கு நீங்கள் காண்பியுங்கள்
mādhā
مَاذَا
எதை?
khalaqa
خَلَقَ
படைத்தன
alladhīna min dūnihi
ٱلَّذِينَ مِن دُونِهِۦۚ
அவனை அன்றி உள்ளவர்கள்
bali
بَلِ
மாறாக
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்தான்
mubīnin
مُّبِينٍ
தெளிவான
(ஆகவே, நபியே! நீங்கள் அவர்களை நோக்கிக் கூறுங்கள்:) "இவை அனைத்தும் அல்லாஹ் படைத்தவைகளாகும். அவனை யன்றி (நீங்கள் தெய்வங்கள் என்று கூறும்) அவைகள் எதனை படைத்திருக்கின்றன என்பதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள். அவ்வாறு (ஒன்றும்) இல்லை. (அல்லாஹ்வை அன்றி மற்றவர்களை வணங்கும்) இந்த அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில் தான் இருக்கின்றனர். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௧௧)
Tafseer
௧௨

وَلَقَدْ اٰتَيْنَا لُقْمٰنَ الْحِكْمَةَ اَنِ اشْكُرْ لِلّٰهِ ۗوَمَنْ يَّشْكُرْ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِيٌّ حَمِيْدٌ ١٢

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ātaynā
ءَاتَيْنَا
நாம் வழங்கினோம்
luq'māna
لُقْمَٰنَ
லுக்மானுக்கு
l-ḥik'mata
ٱلْحِكْمَةَ
ஞானத்தை
ani ush'kur
أَنِ ٱشْكُرْ
அதாவது நீர் நன்றி செலுத்துவீராக!
lillahi
لِلَّهِۚ
அல்லாஹ்விற்கு
waman
وَمَن
யார்
yashkur
يَشْكُرْ
நன்றி செலுத்துவாரோ
fa-innamā yashkuru
فَإِنَّمَا يَشْكُرُ
அவர் நன்றி செலுத்துவதெல்லாம்
linafsihi
لِنَفْسِهِۦۖ
தன் நன்மைக்காகத்தான்
waman kafara
وَمَن كَفَرَ
எவர்/நிராகரிப்பாரோ
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ghaniyyun
غَنِىٌّ
நிறைவானவன்
ḥamīdun
حَمِيدٌ
மிகுந்த புகழாளன்
லுக்மானுக்கு நாம் ஞானத்தைக் கொடுத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்படி கூறினோம். ஏனென்றால், எவர் நன்றி செலுத்துகிறாரோ அவர் தன் நன்மைக்காகவே நன்றி செலுத்துகிறார். எவன் (அதனை) நிராகரிக்கிறானோ (அவன் தனக்கு தீங்கு தேடிக் கொள்கிறான். அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனும் புகழுடைய வனாகவும் இருக்கிறான். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௧௨)
Tafseer
௧௩

وَاِذْ قَالَ لُقْمٰنُ لِابْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَيَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ۗاِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيْمٌ ١٣

wa-idh qāla
وَإِذْ قَالَ
கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக!
luq'mānu
لُقْمَٰنُ
லுக்மான்
li-ib'nihi
لِٱبْنِهِۦ
தனது மகனுக்கு
wahuwa
وَهُوَ
அவர்
yaʿiẓuhu
يَعِظُهُۥ
அவருக்கு உபதேசித்தவராக
yābunayya
يَٰبُنَىَّ
என் மகனே!
lā tush'rik
لَا تُشْرِكْ
இணை வைக்காதே!
bil-lahi
بِٱللَّهِۖ
அல்லாஹ்விற்கு
inna
إِنَّ
நிச்சயமாக
l-shir'ka
ٱلشِّرْكَ
இணைவைத்தல்
laẓul'mun
لَظُلْمٌ
அநியாயமாகும்
ʿaẓīmun
عَظِيمٌ
மிகப் பெரிய
லுக்மான் தனது மகனுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதிய சமயத்தில் அவரை நோக்கி "என் அருமை மைந்தனே! நீ அல்லாஹ்வுக்கு (ஒன்றையுமே) இணையாக்காதே! ஏனென்றால், இணைவைப்பது நிச்சயமாக மிகப்பெரும் அநியாயமாகும்" என்று கூறினார். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௧௩)
Tafseer
௧௪

وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِۚ حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصَالُهٗ فِيْ عَامَيْنِ اَنِ اشْكُرْ لِيْ وَلِوَالِدَيْكَۗ اِلَيَّ الْمَصِيْرُ ١٤

wawaṣṣaynā
وَوَصَّيْنَا
இன்னும் நாம் உபதேசித்தோம்
l-insāna
ٱلْإِنسَٰنَ
மனிதனுக்கு
biwālidayhi
بِوَٰلِدَيْهِ
அவனது பெற்றோருடன் நல்லுறவு பேணும்படி
ḥamalathu
حَمَلَتْهُ
அவனை சுமந்தாள்
ummuhu
أُمُّهُۥ
அவனது தாய்
wahnan
وَهْنًا
பலவீனத்துடன்
ʿalā wahnin
عَلَىٰ وَهْنٍ
பலவீனத்துக்கு மேல்
wafiṣāluhu
وَفِصَٰلُهُۥ
அவனுக்கு பால்குடி மறக்கவைப்பது
fī ʿāmayni
فِى عَامَيْنِ
இரண்டுஆண்டுகளில்
ani ush'kur
أَنِ ٱشْكُرْ
அதாவது நீ நன்றி செலுத்து
لِى
எனக்கு(ம்)
waliwālidayka
وَلِوَٰلِدَيْكَ
உன் பெற்றோருக்கும்
ilayya
إِلَىَّ
என் பக்கம்தான்
l-maṣīru
ٱلْمَصِيرُ
மீளுதல் இருக்கிறது
"தனது தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்து கொண்டலைந்தாள். (பிறந்த) பிறகும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. முடிவில் நீ நம்மிடமே வந்து சேர வேண்டியதிருக்கின்றது. ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௧௪)
Tafseer
௧௫

وَاِنْ جَاهَدٰكَ عَلٰٓى اَنْ تُشْرِكَ بِيْ مَا لَيْسَ لَكَ بِهٖ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِى الدُّنْيَا مَعْرُوْفًا ۖوَّاتَّبِعْ سَبِيْلَ مَنْ اَنَابَ اِلَيَّۚ ثُمَّ اِلَيَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ١٥

wa-in jāhadāka
وَإِن جَٰهَدَاكَ
அவர்கள் உன்னை சிரமப்படுத்தினால்
ʿalā an tush'rika
عَلَىٰٓ أَن تُشْرِكَ
நீ இணையாக்குவதற்கு
بِى
எனக்கு
mā laysa
مَا لَيْسَ
ஒன்றை/இல்லை
laka
لَكَ
உனக்கு
bihi
بِهِۦ
அதற்கு
ʿil'mun
عِلْمٌ
அறிவு
falā tuṭiʿ'humā
فَلَا تُطِعْهُمَاۖ
அவ்விருவருக்கும் நீ கீழ்ப்படியாதே!
waṣāḥib'humā
وَصَاحِبْهُمَا
இன்னும் அவ்விருவருடன் பழகுவாயாக!
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
உலகத்தில்
maʿrūfan
مَعْرُوفًاۖ
நல்லமுறையில்
wa-ittabiʿ
وَٱتَّبِعْ
இன்னும் நீ பின்பற்று !
sabīla
سَبِيلَ
பாதையை
man anāba
مَنْ أَنَابَ
திரும்பியவர்களின்
ilayya thumma
إِلَىَّۚ ثُمَّ
என் பக்கம்/பிறகு
ilayya
إِلَىَّ
என் பக்கம்தான்
marjiʿukum
مَرْجِعُكُمْ
உங்கள் மீளுமிடம்
fa-unabbi-ukum
فَأُنَبِّئُكُم
நான் உங்களுக்கு அறிவிப்பேன்
bimā kuntum taʿmalūna
بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்து கொண்டிருந்ததை
எனினும், (இறைவன் என்று) நீ அறிந்துகொள்ளாத யாதொரு பொருளை எனக்கு இணை வைக்கும்படி அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ் விஷயத்தில்) நீ அவர்களுக்கு வழிப்பட வேண்டாம். ஆயினும், இவ்வுலக விஷயத்தில் நீ அவர்களுக்கு (நீதமாக) உதவி செய்து (அன்பாக) நேசித்துவா. எவ்விஷயத்திலும் என்னையே நோக்கி நிற்பவர்களின் வழியை நீ பின்பற்றி நட. பின்னர், நீங்கள் அனைவரும் நம்மிடமே வரவேண்டிய திருக்கின்றது. நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அச்சமயம் நான் உங்களுக்கு அறிவுறுத்துவேன்" (என்று கூறினோம்). ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௧௫)
Tafseer
௧௬

يٰبُنَيَّ اِنَّهَآ اِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِيْ صَخْرَةٍ اَوْ فِى السَّمٰوٰتِ اَوْ فِى الْاَرْضِ يَأْتِ بِهَا اللّٰهُ ۗاِنَّ اللّٰهَ لَطِيْفٌ خَبِيْرٌ ١٦

yābunayya
يَٰبُنَىَّ
என் மகனே!
innahā
إِنَّهَآ
நிச்சயமாக அது
in taku
إِن تَكُ
இருந்தாலும்
mith'qāla
مِثْقَالَ
அளவு
ḥabbatin
حَبَّةٍ
விதை
min khardalin
مِّنْ خَرْدَلٍ
எள்ளின்
fatakun
فَتَكُن
அது இருந்தாலும்
fī ṣakhratin
فِى صَخْرَةٍ
ஒரு பாறையில்
aw
أَوْ
அல்லது
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
aw
أَوْ
அல்லது
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
yati
يَأْتِ
கொண்டு வருவான்
bihā
بِهَا
அதை
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
laṭīfun
لَطِيفٌ
மிக நுட்பமானவன்
khabīrun
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்
(பின்னும் லுக்மான் தனது மகனை நோக்கி) "என் அருமை மகனே! (நன்மையோ தீமையோ) அது ஒரு கடுகின் விதை அளவில் இருந்தாலும் சரி, அது (கரும்) பாறைகளுக்குள்ளோ அல்லது வானத்திலோ, பூமியின் ஆழத்திலோ (மறைந்து) இருந்தபோதிலும் (உங்களிடம் கணக்குக் கேட்கும்போது) நிச்சயமாக அல்லாஹ் அதையும் கொண்டு வந்து விடுவான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வெகு நுட்பமான அறிவுடையவனும் (அனைத்தையும்) நன்கு தெரிந்து வைத்திருப்பவனாகவும் இருக்கிறான். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௧௬)
Tafseer
௧௭

يٰبُنَيَّ اَقِمِ الصَّلٰوةَ وَأْمُرْ بِالْمَعْرُوْفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلٰى مَآ اَصَابَكَۗ اِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ ١٧

yābunayya
يَٰبُنَىَّ
என் மகனே!
aqimi
أَقِمِ
நிலைநிறுத்து!
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
wamur
وَأْمُرْ
இன்னும் ஏவு!
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِ
நன்மையை
wa-in'ha
وَٱنْهَ
இன்னும் தடு!
ʿani l-munkari
عَنِ ٱلْمُنكَرِ
தீமையை விட்டும்
wa-iṣ'bir
وَٱصْبِرْ
இன்னும் பொறுமையாக இரு!
ʿalā mā aṣābaka
عَلَىٰ مَآ أَصَابَكَۖ
உனக்கு ஏற்பட்டதன் மீது
inna dhālika
إِنَّ ذَٰلِكَ
நிச்சயமாக இவைதான்
min ʿazmi l-umūri
مِنْ عَزْمِ ٱلْأُمُورِ
உறுதிமிக்க காரியங்களில்
என்னருமை மகனே! "தொழுகையைக் கடைப்பிடித்தொழுகு, நன்மையான காரியங்களைக் கொண்டு ஏவி, பாவமான காரியங்களில் இருந்து (மனிதர்களை) விலக்கி வா. உனக்கேற்படும் கஷ்டங்களைப் பொறுமையுடன் நீ சகித்துக்கொள். நிச்சயமாக இது எல்லா காரியங்களிலும் வீரமிக்கச் செயலாகும். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௧௭)
Tafseer
௧௮

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًاۗ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍۚ ١٨

walā tuṣaʿʿir
وَلَا تُصَعِّرْ
திருப்பிக்கொள்ளாதே!
khaddaka
خَدَّكَ
உனது கன்னத்தை
lilnnāsi
لِلنَّاسِ
மக்களை விட்டு
walā tamshi
وَلَا تَمْشِ
இன்னும் நடக்காதே
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
maraḥan
مَرَحًاۖ
பெருமை பிடித்தவனாக
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
விரும்ப மாட்டான்
kulla
كُلَّ
அனைவரையும்
mukh'tālin
مُخْتَالٍ
கர்வமுடையவர்(கள்)
fakhūrin
فَخُورٍ
தற்பெருமை பேசுபவர்(கள்)
(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம்கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௧௮)
Tafseer
௧௯

وَاقْصِدْ فِيْ مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَۗ اِنَّ اَنْكَرَ الْاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيْرِ ࣖ ١٩

wa-iq'ṣid
وَٱقْصِدْ
இன்னும் பணிவாக இரு!
fī mashyika
فِى مَشْيِكَ
உனது நடையில்
wa-ugh'ḍuḍ
وَٱغْضُضْ
இன்னும் தாழ்த்திக்கொள்!
min ṣawtika
مِن صَوْتِكَۚ
உனது சப்தத்தை
inna
إِنَّ
நிச்சயமாக
ankara
أَنكَرَ
மிக மிக அருவருப்பானது
l-aṣwāti
ٱلْأَصْوَٰتِ
சப்தங்களில்
laṣawtu
لَصَوْتُ
சப்தமாகும்
l-ḥamīri
ٱلْحَمِيرِ
கழுதைகளின்
உன் நடையில் (பெருமையும் கர்வமுமின்றி) மத்திய தரத்தை விரும்பு. உன் சப்தத்தையும் தாழ்த்திக்கொள். ஏனென்றால், சப்தங்களிலெல்லாம் மிக்க வெறுக்கத்தக்கது கழுதையின் (உரத்த) சப்தமே!" (என்று கூறினார்கள்). ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௧௯)
Tafseer
௨௦

اَلَمْ تَرَوْا اَنَّ اللّٰهَ سَخَّرَ لَكُمْ مَّا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ وَاَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهٗ ظَاهِرَةً وَّبَاطِنَةً ۗوَمِنَ النَّاسِ مَنْ يُّجَادِلُ فِى اللّٰهِ بِغَيْرِ عِلْمٍ وَّلَا هُدًى وَّلَا كِتٰبٍ مُّنِيْرٍ ٢٠

alam taraw
أَلَمْ تَرَوْا۟
நீங்கள் பார்க்கவில்லையா?
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
sakhara
سَخَّرَ
வசப்படுத்தினான்
lakum
لَكُم
உங்களுக்கு
mā fī l-samāwāti
مَّا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவற்றை(யும்)
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِ
பூமியில் உள்ளவற்றையும்
wa-asbagha
وَأَسْبَغَ
இன்னும் நிறைவாக்கினான்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
niʿamahu
نِعَمَهُۥ
தனது அருட்கொடைகளை
ẓāhiratan
ظَٰهِرَةً
வெளிப்படையாக(வும்)
wabāṭinatan
وَبَاطِنَةًۗ
மறைவாகவும்
wamina l-nāsi
وَمِنَ ٱلنَّاسِ
மக்களில் இருக்கின்றனர்
man yujādilu
مَن يُجَٰدِلُ
தர்க்கம் செய்கின்றவரும்
fī l-lahi
فِى ٱللَّهِ
அல்லாஹ்வின் விஷயத்தில்
bighayri ʿil'min
بِغَيْرِ عِلْمٍ
கல்வி இன்றி(யும்)
walā hudan
وَلَا هُدًى
நேர்வழி இன்றியும்
walā kitābin
وَلَا كِتَٰبٍ
வேதமின்றியும்
munīrin
مُّنِيرٍ
பிரகாசமான
(மனிதர்களே!) வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகளை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான் என்பதையும், அவன் தன் அருட்கொடைகளை மறைவாகவும் வெளிப்படையாகவும் உங்கள் மீது சொரிந்திருக்கின்றான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? (இவ்வாறெல்லாமிருந்தும்) மனிதர்களில் பலர் யாதொரு கல்வியும், யாதொரு (தர்க்கரீதியான) ஆதாரமும், யாதொரு தெளிவான வேத நூலின் ஆதாரமுமின்றி அல்லாஹ்வைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்கின்றனர். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௨௦)
Tafseer