Skip to content

ஸூரா ஸூரத்து லுக்மான் - Word by Word

Luqman

(Luq̈mān)

bismillaahirrahmaanirrahiim

الۤمّۤ ۗ ١

alif-lam-meem
الٓمٓ
அலிஃப், லாம், மீம்
அலிஃப்; லாம்; மீம். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௧)
Tafseer

تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْحَكِيْمِۙ ٢

til'ka
تِلْكَ
இவை
āyātu
ءَايَٰتُ
வசனங்களாகும்
l-kitābi
ٱلْكِتَٰبِ
வேதத்தின்
l-ḥakīmi
ٱلْحَكِيمِ
ஞானமிக்க(து)
இவை ஞானம் நிறைந்த இவ்வேதத்தின் (சில) வசனங்களாகும். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௨)
Tafseer

هُدًى وَّرَحْمَةً لِّلْمُحْسِنِيْنَۙ ٣

hudan
هُدًى
நேர்வழிகாட்டி(யும்)
waraḥmatan
وَرَحْمَةً
கருணையும்
lil'muḥ'sinīna
لِّلْمُحْسِنِينَ
நல்லறம் புரிவோருக்கு
(இது) நன்மை செய்பவர்களுக்கு ஒரு நேர்வழிகாட்டியாகவும், ஓர் அருளாகவும் இருக்கின்றது. ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௩)
Tafseer

الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَۗ ٤

alladhīna yuqīmūna
ٱلَّذِينَ يُقِيمُونَ
அவர்கள் நிலை நிறுத்துவார்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
wayu'tūna
وَيُؤْتُونَ
கொடுப்பார்கள்
l-zakata
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
wahum
وَهُم
இன்னும் அவர்கள்தான்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
hum yūqinūna
هُمْ يُوقِنُونَ
உறுதியாகநம்புவார்கள்
அவர்கள் (எத்தகையவர்களென்றால்) தொழுகையைக் கடைப்பிடித்தொழுகுவார்கள். ஜகாத்தும் கொடுத்து வருவார்கள். இறுதி நாளையும் அவர்கள் உறுதியாக நம்புவார்கள். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௪)
Tafseer

اُولٰۤىِٕكَ عَلٰى هُدًى مِّنْ رَّبِّهِمْ وَاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ٥

ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
ʿalā
عَلَىٰ
மீது
hudan
هُدًى
நேர்வழியின்
min rabbihim
مِّن رَّبِّهِمْۖ
தங்கள் இறைவனிடமிருந்து
wa-ulāika humu
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
இன்னும் அவர்கள்தான்
l-muf'liḥūna
ٱلْمُفْلِحُونَ
வெற்றி பெற்றவர்கள்
இத்தகையவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேரான வழியில் இருப்பவர்கள். இவர்கள்தாம் வெற்றி அடைவார்கள். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௫)
Tafseer

وَمِنَ النَّاسِ مَنْ يَّشْتَرِيْ لَهْوَ الْحَدِيْثِ لِيُضِلَّ عَنْ سَبِيْلِ اللّٰهِ بِغَيْرِ عِلْمٍۖ وَّيَتَّخِذَهَا هُزُوًاۗ اُولٰۤىِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ ٦

wamina l-nāsi
وَمِنَ ٱلنَّاسِ
மக்களில்
man yashtarī
مَن يَشْتَرِى
விலைக்கு வாங்குபவன்
lahwa
لَهْوَ
வீண்
l-ḥadīthi
ٱلْحَدِيثِ
பேச்சை
liyuḍilla
لِيُضِلَّ
அவன் வழிகெடுப்பதற்காக
ʿan sabīli
عَن سَبِيلِ
பாதையிலிருந்து
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
bighayri ʿil'min
بِغَيْرِ عِلْمٍ
கல்வி இன்றி
wayattakhidhahā
وَيَتَّخِذَهَا
இன்னும் அதை எடுத்துக்கொள்வதற்காக
huzuwan
هُزُوًاۚ
பரிகாசமாக
ulāika
أُو۟لَٰٓئِكَ
இத்தகையவர்கள்
lahum
لَهُمْ
இவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
muhīnun
مُّهِينٌ
இழிவுபடுத்தும்
(இவர்களைத் தவிர) மனிதரில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக்கதைகள் முதலிய) வீணான விஷயங்களை விலைக்கு வாங்கி (அவற்றை மக்களுக்கு ஓதிக் காண்பித்து) அல்லாஹ்வுடைய வழியில் இருந்து ஞானமின்றி மக்களை வழிகெடுத்து அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையவர்களுக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு. ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௬)
Tafseer

وَاِذَا تُتْلٰى عَلَيْهِ اٰيٰتُنَا وَلّٰى مُسْتَكْبِرًا كَاَنْ لَّمْ يَسْمَعْهَا كَاَنَّ فِيْٓ اُذُنَيْهِ وَقْرًاۚ فَبَشِّرْهُ بِعَذَابٍ اَلِيْمٍ ٧

wa-idhā tut'lā
وَإِذَا تُتْلَىٰ
ஓதப்பட்டால்
ʿalayhi
عَلَيْهِ
அவனுக்கு முன்
āyātunā
ءَايَٰتُنَا
நமது வசனங்கள்
wallā
وَلَّىٰ
திரும்பி விடுகின்றான்
mus'takbiran
مُسْتَكْبِرًا
பெருமையடித்தவனாக
ka-an lam yasmaʿhā
كَأَن لَّمْ يَسْمَعْهَا
அவற்றை அவன் செவிமடுக்காததைப் போன்று
ka-anna
كَأَنَّ
போன்று
fī udhunayhi
فِىٓ أُذُنَيْهِ
அவனுடைய இரண்டு காதுகளில்
waqran
وَقْرًاۖ
மந்தம்
fabashir'hu
فَبَشِّرْهُ
ஆகவே, அவனுக்கு நற்செய்தி கூறுவீராக!
biʿadhābin alīmin
بِعَذَابٍ أَلِيمٍ
வலிமிகுந்த வேதனையைக் கொண்டு
இவர்களில் எவருக்கும் நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதனை அவன் கேட்காதவனைப் போலும், தன்னுடைய இரு காதுகளிலும் செவிடு உள்ளவனைப் போலும் கர்வம்கொண்டு விலகிவிடுகிறான். ஆகவே, (நபியே!) அவனுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு நீங்கள் நற்செய்தி கூறுங்கள் ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௭)
Tafseer

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتُ النَّعِيْمِۙ ٨

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
lahum
لَهُمْ
அவர்களுக்கு
jannātu
جَنَّٰتُ
சொர்க்கங்கள்
l-naʿīmi
ٱلنَّعِيمِ
இன்பமிகுந்த
ஆயினும், (இவர்களில்) எவர்கள் (நம்முடைய வசனங்களுக்குச் செவி சாய்த்து) நம்பிக்கை கொண்டு நற் செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு மிக்க இன்பம் தரும் சுவனபதிகள் உள்ளன. ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௮)
Tafseer

خٰلِدِيْنَ فِيْهَاۗ وَعْدَ اللّٰهِ حَقًّاۗ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ٩

khālidīna
خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள்
fīhā
فِيهَاۖ
அவற்றில்
waʿda
وَعْدَ
வாக்காகும்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ḥaqqan
حَقًّاۚ
உண்மையான
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மிகுந்த ஞானவான்
அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வுடைய (இவ்)வாக்குறுதி உண்மையானதே! அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௯)
Tafseer
௧௦

خَلَقَ السَّمٰوٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا وَاَلْقٰى فِى الْاَرْضِ رَوَاسِيَ اَنْ تَمِيْدَ بِكُمْ وَبَثَّ فِيْهَا مِنْ كُلِّ دَاۤبَّةٍۗ وَاَنْزَلْنَا مِنَ السَّمَاۤءِ مَاۤءً فَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيْمٍ ١٠

khalaqa
خَلَقَ
அவன் படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
bighayri ʿamadin
بِغَيْرِ عَمَدٍ
தூண்கள் இன்றி
tarawnahā
تَرَوْنَهَاۖ
பார்க்கின்றீர்கள்/ அவற்றை
wa-alqā
وَأَلْقَىٰ
இன்னும் ஏற்படுத்தினான்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
rawāsiya
رَوَٰسِىَ
உறுதியான மலைகளை
an tamīda bikum
أَن تَمِيدَ بِكُمْ
அது உங்களை சாய்த்து விடாமல் இருப்பதற்காக
wabatha
وَبَثَّ
இன்னும் , பரப்பினான்
fīhā min kulli
فِيهَا مِن كُلِّ
அதில்/எல்லா
dābbatin
دَآبَّةٍۚ
உயிரினங்களையும்
wa-anzalnā
وَأَنزَلْنَا
இன்னும் நாம் இறக்கினோம்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
மேகத்திலிருந்து
māan
مَآءً
மழையை
fa-anbatnā
فَأَنۢبَتْنَا
முளைக்க வைத்தோம்
fīhā
فِيهَا
அதில்
min kulli zawjin karīmin
مِن كُلِّ زَوْجٍ كَرِيمٍ
எல்லா வகையான அழகிய தாவரங்களை
அவனே வானங்களைத் தூண்கள் இன்றியே படைத்திருக்கின்றான். அதனை நீங்களும் பார்க்கின்றீர்கள். பூமி உங்களைக் கவிழ்த்து விடாதிருப்பதற்காக (பளுவான) மலைகளை (அதில்) நிறுத்திவைத்து விதவிதமான உயிரினங்களையும் அதில் பரப்பினான். (மனிதர்களே! அல்லாஹ்வாகிய) நாமே மேகத்தில் இருந்து மழையை பொழியச்செய்து அதிலிருந்தே நேர்த்தியான ஒவ்வொரு வகைப் புற்பூண்டுகளையும் ஜோடி ஜோடியாக முளைப்பிக்கச் செய்கிறோம். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௧௦)
Tafseer