Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௮

Qur'an Surah Ar-Rum Verse 8

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوَلَمْ يَتَفَكَّرُوْا فِيْٓ اَنْفُسِهِمْ ۗ مَا خَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَآ اِلَّا بِالْحَقِّ وَاَجَلٍ مُّسَمًّىۗ وَاِنَّ كَثِيْرًا مِّنَ النَّاسِ بِلِقَاۤئِ رَبِّهِمْ لَكٰفِرُوْنَ (الروم : ٣٠)

awalam yatafakkarū
أَوَلَمْ يَتَفَكَّرُوا۟
Do not they ponder
அவர்கள் சிந்தித்து பார்க்க மாட்டார்களா?
fī anfusihim
فِىٓ أَنفُسِهِمۗ
within themselves?
தங்களைத் தாமே
mā khalaqa
مَّا خَلَقَ
Not Allah (has) created
படைக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
Allah (has) created
அல்லாஹ்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
the heavens
வானங்களையும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
and the earth
பூமியையும்
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَآ
and what (is) between them
அந்த இரண்டிற்கும் மத்தியில் உள்ளவற்றையும்
illā bil-ḥaqi
إِلَّا بِٱلْحَقِّ
except in truth
தவிர/உண்மையான காரியத்திற்காக
wa-ajalin
وَأَجَلٍ
and (for) a term
தவணைக்காக
musamman
مُّسَمًّىۗ
appointed
ஒரு குறிப்பிட்ட
wa-inna
وَإِنَّ
And indeed
நிச்சயமாக
kathīran
كَثِيرًا
many
அதிகமானவர்கள்
mina l-nāsi
مِّنَ ٱلنَّاسِ
of the people
மக்களில்
biliqāi
بِلِقَآئِ
in (the) meeting
சந்திப்பை
rabbihim
رَبِّهِمْ
(with) their Lord
தங்கள் இறைவனின்
lakāfirūna
لَكَٰفِرُونَ
surely (are) disbelievers
நிராகரிப்பவர்கள்தான்

Transliteration:

Awalam yatafakkaroo feee anfusihim; maa khalaqal laahus samaawaati wal arda wa maa bainahumaaa illaa bil haqqi wa ajalim musammaa; wa inna kaseeram minan naasi biliqaaa'i Rabbihim lakaafiroon (QS. ar-Rūm:8)

English Sahih International:

Do they not contemplate within themselves? Allah has not created the heavens and the earth and what is between them except in truth and for a specified term. And indeed, many of the people, in the meeting with their Lord, are disbelievers. (QS. Ar-Rum, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

(இதனை) அவர்கள் தங்களுக்குள்ளாகவே கவனிக்க வேண்டாமா? வானங்களையும். பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் நியாயமான காரணமின்றியும், குறிப்பிட்ட தவணையின்றியும் அல்லாஹ் படைக்கவில்லை. எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதையும் நிராகரிக்கின்றனர். (ஸூரத்துர் ரூம், வசனம் ௮)

Jan Trust Foundation

அவர்கள் தங்களுக்குள்ளே (இது பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும், உண்மையையும், குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை; எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்களைத் தாமே சிந்தித்து பார்க்க மாட்டார்களா? அல்லாஹ் வானங்களையும் பூமியையும் அந்த இரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றையும் உண்மையான காரியத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட தவணைக்காகவும் தவிர படைக்கவில்லை. நிச்சயமாக மக்களில் அதிகமானவர்கள் தங்கள் இறைவனின் சந்திப்பை நிராகரிப்பவர்கள்தான்.