Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௬௦

Qur'an Surah Ar-Rum Verse 60

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلَا يَسْتَخِفَّنَّكَ الَّذِيْنَ لَا يُوْقِنُوْنَ ࣖ (الروم : ٣٠)

fa-iṣ'bir
فَٱصْبِرْ
So be patient
ஆகவே, பொறுமையாக இருப்பீராக!
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
waʿda
وَعْدَ
(the) Promise
வாக்கு
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வுடைய
ḥaqqun
حَقٌّۖ
(is) true
உண்மையானதே!
walā yastakhiffannaka
وَلَا يَسْتَخِفَّنَّكَ
And (let) not take you in light estimation
உம்மை இலேசாக கருதிவிட வேண்டாம்
alladhīna lā yūqinūna
ٱلَّذِينَ لَا يُوقِنُونَ
those who (are) not certain in faith
உறுதிகொள்ளாதவர்கள்

Transliteration:

Fasbir inna wa'dal laahi haqqunw wa laa yastakhif fannakal lazeena laa yooqinoon (QS. ar-Rūm:60)

English Sahih International:

So be patient. Indeed, the promise of Allah is truth. And let them not disquiet you who are not certain [in faith]. (QS. Ar-Rum, Ayah ௬௦)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (நபியே!) நீங்கள் (சகித்துக்கொண்டு) பொறுமையுடன் இருங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி மெய்யானது. (ஆகவே, முடிவில் நபியே! நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள்.) மறுமையை நம்பாத இவர்கள் நிச்சயமாக உங்களை இலேசாக எண்ணவேண்டாம். (ஸூரத்துர் ரூம், வசனம் ௬௦)

Jan Trust Foundation

ஆயினும், (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக; நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, உறுதியான நம்பிக்கை இல்லாத இவர்கள் உம்மைக் கலக்கமடையச் செய்ய வேண்டாம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையானதே! (இறையத்தாட்சியை) உறுதிகொள்ளாதவர்கள் உம்மை (-உமது பொறுமையை) இலேசாக கருதிவிட வேண்டாம். (பின்னர் உமது தீனிலிருந்து உம்மை திருப்பிவிட அவர்கள் முயற்சி செய்துவிடவேண்டாம். அது அவர்களால் முடியாது.)