Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௪௨

Qur'an Surah Ar-Rum Verse 42

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ سِيْرُوْا فِى الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلُۗ كَانَ اَكْثَرُهُمْ مُّشْرِكِيْنَ (الروم : ٣٠)

qul
قُلْ
Say
கூறுவீராக!
sīrū
سِيرُوا۟
"Travel
பயணியுங்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
fa-unẓurū
فَٱنظُرُوا۟
and see
பாருங்கள்
kayfa
كَيْفَ
how
எப்படி
kāna
كَانَ
was
இருந்தது
ʿāqibatu
عَٰقِبَةُ
(the) end
முடிவு
alladhīna
ٱلَّذِينَ
(of) those who
எவர்கள்
min qablu
مِن قَبْلُۚ
(were) before (were) before
முன்னர்
kāna
كَانَ
Most of them were
இருந்தனர்
aktharuhum
أَكْثَرُهُم
Most of them were
அதிகமானவர்கள் அவர்களில்
mush'rikīna
مُّشْرِكِينَ
polytheists"
இணை வைப்பவர்களாக

Transliteration:

Qul seeroo fil ardi fanzuroo kaifa kaana 'aaqibatul lazeena min qabl; kaana aksaruhum mushrikeen (QS. ar-Rūm:42)

English Sahih International:

Say, [O Muhammad], "Travel through the land and observe how was the end of those before. Most of them were associators [of others with Allah]. (QS. Ar-Rum, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து பாருங்கள். உங்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு என்னாயிற்று? முன்னிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இணைவைத்து வணங்குபவர்களாகவே இருந்தனர். (ஸூரத்துர் ரூம், வசனம் ௪௨)

Jan Trust Foundation

“பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து (உங்களுக்கு) முன்னிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்? அவர்கள் பெரும்பாலோர் முஷ்ரிக்குகளாக (இணை வைப்பவர்களாக) இருந்தனர்” என்று (நபியே!) நீர் கூறும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே! இணை வைப்பவர்களை நோக்கி) கூறுவீராக! பூமியில் பயணியுங்கள். (உங்களுக்கு) முன்னிருந்தவர்களுடைய முடிவு எப்படி இருந்தது என்று பாருங்கள். அவர்களில் அதிகமானவர்கள் இணை வைப்பவர்களாக இருந்தனர்.