Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௩௬

Qur'an Surah Ar-Rum Verse 36

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَآ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوْا بِهَاۗ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ ۢبِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ اِذَا هُمْ يَقْنَطُوْنَ (الروم : ٣٠)

wa-idhā adhaqnā
وَإِذَآ أَذَقْنَا
And when We cause men to taste
நாம் சுவைக்க வைத்தால்
l-nāsa
ٱلنَّاسَ
We cause men to taste
மக்களுக்கு
raḥmatan
رَحْمَةً
mercy
அருளை
fariḥū
فَرِحُوا۟
they rejoice
மகிழ்ச்சியடைகின்றனர்
bihā
بِهَاۖ
therein
அதனால்
wa-in tuṣib'hum
وَإِن تُصِبْهُمْ
But if afflicts them
அவர்களை அடைந்தால்
sayyi-atun
سَيِّئَةٌۢ
an evil
ஒரு தீமை
bimā qaddamat
بِمَا قَدَّمَتْ
for what have sent forth
முற்படுத்தியவற்றினால்
aydīhim
أَيْدِيهِمْ
their hands
அவர்களின் கரங்கள்
idhā hum
إِذَا هُمْ
behold! They
அப்போது அவர்கள்
yaqnaṭūna
يَقْنَطُونَ
despair
நிராசையடைந்து விடுகின்றனர்

Transliteration:

Wa izaaa azaqnan naasa rahmatan farihoo bihaa wa in tusibhum sayyi'atum bimaa qaddamat aydeehim izaa hum yaqnatoon (QS. ar-Rūm:36)

English Sahih International:

And when We let the people taste mercy, they rejoice therein, but if evil afflicts them for what their hands have put forth, immediately they despair. (QS. Ar-Rum, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

மனிதர்கள் நம்முடைய அருளைச் சுவைக்கும்படி நாம் செய்தால் அதைக்கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். எனினும், அவர்களுடைய கைகளே தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக அவர்களுக்கு யாதொரு தீங்கேற்படும் பட்சத்தில் உடனே அவர்கள் நம்பிக்கையிழந்து விடுகின்றனர். (ஸூரத்துர் ரூம், வசனம் ௩௬)

Jan Trust Foundation

இன்னும் நாம் மனிதர்களை (நம்) ரஹ்மத்தை ருசிக்க (அனுபவிக்க)ச் செய்தால். அவர்கள் அதைக் கொண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முன்னரே செய்துள்ளதைக் கொண்டு ஒரு தீங்கு அவர்களுக்கு சம்பவித்து விட்டால் அவர்கள் நிராசைப்பட்டு விடுகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மக்களுக்கு நாம் (நமது) அருளை சுவைக்க வைத்தால் அவர்கள் அதனால் மகிழ்ச்சியடைகின்றனர். அவர்களின் கரங்கள் முற்படுத்தியவற்றினால் அவர்களை ஒரு தீமை அடைந்தால் அப்போது அவர்கள் நிராசையடைந்து விடுகின்றனர்.