Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௨௫

Qur'an Surah Ar-Rum Verse 25

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنْ اٰيٰتِهٖٓ اَنْ تَقُوْمَ السَّمَاۤءُ وَالْاَرْضُ بِاَمْرِهٖۗ ثُمَّ اِذَا دَعَاكُمْ دَعْوَةًۖ مِّنَ الْاَرْضِ اِذَآ اَنْتُمْ تَخْرُجُوْنَ (الروم : ٣٠)

wamin āyātihi
وَمِنْ ءَايَٰتِهِۦٓ
And among His Signs
அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
an taqūma
أَن تَقُومَ
(is) that stands
நிற்பது
l-samāu
ٱلسَّمَآءُ
the heavens
வானமும்
wal-arḍu
وَٱلْأَرْضُ
and the earth
பூமியும்
bi-amrihi
بِأَمْرِهِۦۚ
by His Command
அவனுடைய கட்டளையின்படி
thumma
ثُمَّ
Then
பிறகு
idhā
إِذَا
when
அவன் அழைத்தால்
daʿākum
دَعَاكُمْ
He calls you
உங்களை
daʿwatan
دَعْوَةً
(with) a call
ஒரு முறை அழைத்தல்
mina l-arḍi
مِّنَ ٱلْأَرْضِ
from the earth
பூமியிலிருந்து
idhā antum
إِذَآ أَنتُمْ
behold! You
அப்போது நீங்கள்
takhrujūna
تَخْرُجُونَ
will come forth
வெளியேறுவீர்கள்

Transliteration:

Wa min Aayaatihee an taqoomas samaaa'u wal ardu bi-amrih; summa izaa da'aakum da'watam minal ardi izaaa antum takhrujoon (QS. ar-Rūm:25)

English Sahih International:

And of His signs is that the heaven and earth stand [i.e., remain] by His command. Then when He calls you with a [single] call from the earth, immediately you will come forth. (QS. Ar-Rum, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

வானமும் பூமியும் அவன் கட்டளைப்படி நிலை பெற்றிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். (உங்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரையில் நீங்கள் அதில் உயிர் வாழ்ந்து மரணித்துப் பூமியில் அடக்கப்பட்டதன் பின்னரும்) அவன் உங்களை அழைக்கும்போது ஒரே அழைப்பில் நீங்கள் பூமியில் இருந்து வெளிப்பட்டு விடுவீர்கள். (ஸூரத்துர் ரூம், வசனம் ௨௫)

Jan Trust Foundation

வானமும், பூமியும் அவனுடைய கட்டளையினால் நிலைபெற்று நிற்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன; பின்னர் ஓர் அழைப்பைக் கொண்டு உங்களை அழைத்த உடன் நீங்கள், பூமியிலிருந்து வெளிப்பட்டு வருவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான் வானமும் பூமியும் அவனுடைய கட்டளையின்படி (அவற்றுக்குரிய இடத்தில் நிலையாக) நிற்பது. பிறகு, அவன் உங்களை பூமியிலிருந்து ஒருமுறை அழைத்தால் அப்போது நீங்கள் (அதிலிருந்து) வெளியேறுவீர்கள்.