Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௨௧

Qur'an Surah Ar-Rum Verse 21

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنْ اٰيٰتِهٖٓ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْٓا اِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ (الروم : ٣٠)

wamin āyātihi
وَمِنْ ءَايَٰتِهِۦٓ
And among His Signs
இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
an khalaqa
أَنْ خَلَقَ
(is) that He created
அவன் படைத்தது
lakum
لَكُم
for you
உங்களுக்காக
min anfusikum
مِّنْ أَنفُسِكُمْ
from yourselves
உங்களிலிருந்தே
azwājan
أَزْوَٰجًا
mates
மனைவிகளை
litaskunū
لِّتَسْكُنُوٓا۟
that you may find tranquility
நீங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காக
ilayhā
إِلَيْهَا
in them;
அவர்களிடம்
wajaʿala
وَجَعَلَ
and He placed
இன்னும் அவன் ஏற்படுத்தினான்
baynakum
بَيْنَكُم
between you
உங்களுக்கு மத்தியில்
mawaddatan
مَّوَدَّةً
love
அன்பையும்
waraḥmatan
وَرَحْمَةًۚ
and mercy
கருணையையும்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
in that
இதில் உள்ளன
laāyātin
لَءَايَٰتٍ
surely (are) Signs
பல அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
for a people
மக்களுக்கு
yatafakkarūna
يَتَفَكَّرُونَ
who reflect
சிந்திக்கின்றார்கள்

Transliteration:

Wa min Aayaatiheee an khalaqa lakum min anfusikum azwaajal litaskunooo ilaihaa wa ja'ala bainakum mawad datanw wa rahmah; inna fee zaalika la Aayaatil liqawminy yatafakkaroon (QS. ar-Rūm:21)

English Sahih International:

And of His signs is that He created for you from yourselves mates that you may find tranquility in them; and He placed between you affection and mercy. Indeed in that are signs for a people who give thought. (QS. Ar-Rum, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு இவைகளில் (ஒன்றல்ல) நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (ஸூரத்துர் ரூம், வசனம் ௨௧)

Jan Trust Foundation

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் உங்களுக்காக உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளைப் படைத்தது, அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். அவர்களிடம் நீங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காக (அவர்களைப் படைத்தான்). உங்களுக்கு மத்தியில் அன்பையும் கருணையையும் அவன் ஏற்படுத்தினான். நிச்சயமாக சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.