Skip to content

ஸூரா ஸூரத்துர் ரூம் - Page: 4

Ar-Rum

(ar-Rūm)

௩௧

۞ مُنِيْبِيْنَ اِلَيْهِ وَاتَّقُوْهُ وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَلَا تَكُوْنُوْا مِنَ الْمُشْرِكِيْنَۙ ٣١

munībīna
مُنِيبِينَ
முற்றிலும் திரும்பியவர்களாக
ilayhi
إِلَيْهِ
அவன் பக்கம்
wa-ittaqūhu
وَٱتَّقُوهُ
இன்னும் அவனை அஞ்சிக் கொள்ளுங்கள்
wa-aqīmū
وَأَقِيمُوا۟
இன்னும் நிறைவேற்றுங்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
walā takūnū
وَلَا تَكُونُوا۟
நீங்கள் ஆகிவிடாதீர்கள்
mina l-mush'rikīna
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்
(நம்பிக்கையாளர்களே! நீங்களும் அந்த) ஒருவனிடமே திரும்பி (இஸ்லாம் மார்க்கத்தின் மீது உறுதியாக இருந்து) அவ(ன் ஒருவ)னுக்கே பயந்து தொழுகையையும் கடைப்பிடித்து நடந்து கொள்ளுங்கள். இணைவைத்து வணங்குபவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௩௧)
Tafseer
௩௨

مِنَ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَعًا ۗ كُلُّ حِزْبٍۢ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ ٣٢

mina alladhīna
مِنَ ٱلَّذِينَ
எவர்களில்
farraqū
فَرَّقُوا۟
பிரித்தார்கள்
dīnahum
دِينَهُمْ
தங்களது மார்க்கத்தை
wakānū
وَكَانُوا۟
இன்னும் ஆகிவிட்டனர்
shiyaʿan
شِيَعًاۖ
பல பிரிவுகளாக
kullu
كُلُّ
ஒவ்வொரு
ḥiz'bin
حِزْبٍۭ
கட்சியும்
bimā
بِمَا
உள்ளதைக் கொண்டு
ladayhim
لَدَيْهِمْ
தங்களிடம்
fariḥūna
فَرِحُونَ
மகிழ்ச்சியடைகின்றனர்
(தவிர) எவர்கள் தங்கள் மார்க்கத்திற்குள் பிரிவினையை உண்டு பண்ணி, பல பிரிவுகளாகப் பிரித்து, அவர்கள் ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ள (தவறான)வைகளைக் கொண்டு சந்தோஷப்படுகின்றனரோ (அவர்களுடன் சேர்ந்து விடாதீர்கள்.) ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௩௨)
Tafseer
௩௩

وَاِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُمْ مُّنِيْبِيْنَ اِلَيْهِ ثُمَّ اِذَآ اَذَاقَهُمْ مِّنْهُ رَحْمَةً اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ بِرَبِّهِمْ يُشْرِكُوْنَۙ ٣٣

wa-idhā massa
وَإِذَا مَسَّ
நேர்ந்தால்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களுக்கு
ḍurrun
ضُرٌّ
ஒரு தீங்கு
daʿaw
دَعَوْا۟
அழைக்கின்றனர்
rabbahum
رَبَّهُم
தங்கள் இறைவனை
munībīna
مُّنِيبِينَ
முற்றிலும் திரும்பியவர்களாக
ilayhi
إِلَيْهِ
அவன் பக்கம்
thumma idhā adhāqahum
ثُمَّ إِذَآ أَذَاقَهُم
பிறகு/அவன் சுவைக்க வைத்தால்/அவர்களுக்கு
min'hu
مِّنْهُ
தன்புறத்திலிருந்து
raḥmatan
رَحْمَةً
அருளை
idhā farīqun
إِذَا فَرِيقٌ
அப்போது ஒரு சாரார்
min'hum
مِّنْهُم
அவர்களில்
birabbihim
بِرَبِّهِمْ
தங்கள் இறைவனுக்கு
yush'rikūna
يُشْرِكُونَ
இணைவைக்கின்றனர்
மனிதர்களை யாதொரு தீங்கு அணுகும் பட்சத்தில் அவர்கள் தங்கள் இறைவன் பக்கம் முகம் நோக்கி அவனிடம் பிரார்த்திக்கிறார்கள். பின்னர் அவன் (அதனை நீக்கி) அவர்களைத் தன்னுடைய அருளைச் சுவைக்கும்படிச் செய்தால் அவர்களில் ஒரு பிரிவினர் தங்களுடைய இறைவனுக்கே இணை வைக்கின்றனர். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௩௩)
Tafseer
௩௪

لِيَكْفُرُوْا بِمَآ اٰتَيْنٰهُمْۗ فَتَمَتَّعُوْاۗ فَسَوْفَ تَعْلَمُوْنَ ٣٤

liyakfurū
لِيَكْفُرُوا۟
நிராகரிப்பதற்காக
bimā ātaynāhum
بِمَآ ءَاتَيْنَٰهُمْۚ
நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை
fatamattaʿū
فَتَمَتَّعُوا۟
ஆகவே சுகமனுபவியுங்கள்
fasawfa taʿlamūna
فَسَوْفَ تَعْلَمُونَ
நீங்கள் அறிவீர்கள்
அன்றி, நாம் அவர்களுக்களித்த அருளுக்கு நன்றி செலுத்தாது நிராகரித்தும் விடுகின்றனர். (இவ்வாறு நிராகரிப் லிபவர்களே!) நீங்கள் உங்கள் இஷ்டப்படி சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள். (உங்கள் செயலின் பயனைப்) பின்னர் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௩௪)
Tafseer
௩௫

اَمْ اَنْزَلْنَا عَلَيْهِمْ سُلْطٰنًا فَهُوَ يَتَكَلَّمُ بِمَا كَانُوْا بِهٖ يُشْرِكُوْنَ ٣٥

am
أَمْ
அல்லது
anzalnā
أَنزَلْنَا
நாம் இறக்கினோம்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
sul'ṭānan
سُلْطَٰنًا
ஓர் ஆதாரத்தை
fahuwa
فَهُوَ
அது
yatakallamu
يَتَكَلَّمُ
பேசுகிறதா
bimā
بِمَا
எதைப் பற்றி
kānū
كَانُوا۟
இருந்தனர்
bihi
بِهِۦ
அவனுக்கு
yush'rikūna
يُشْرِكُونَ
இணை வைப்பவர்களாக
அவர்கள் இணைவைத்து வணங்குவதற்கு ஆதாரமாகக் கூறக்கூடிய யாதொரு அத்தாட்சியையும் நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? (அவ்வாறு ஒன்றும் இல்லை.) ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௩௫)
Tafseer
௩௬

وَاِذَآ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوْا بِهَاۗ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ ۢبِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ اِذَا هُمْ يَقْنَطُوْنَ ٣٦

wa-idhā adhaqnā
وَإِذَآ أَذَقْنَا
நாம் சுவைக்க வைத்தால்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களுக்கு
raḥmatan
رَحْمَةً
அருளை
fariḥū
فَرِحُوا۟
மகிழ்ச்சியடைகின்றனர்
bihā
بِهَاۖ
அதனால்
wa-in tuṣib'hum
وَإِن تُصِبْهُمْ
அவர்களை அடைந்தால்
sayyi-atun
سَيِّئَةٌۢ
ஒரு தீமை
bimā qaddamat
بِمَا قَدَّمَتْ
முற்படுத்தியவற்றினால்
aydīhim
أَيْدِيهِمْ
அவர்களின் கரங்கள்
idhā hum
إِذَا هُمْ
அப்போது அவர்கள்
yaqnaṭūna
يَقْنَطُونَ
நிராசையடைந்து விடுகின்றனர்
மனிதர்கள் நம்முடைய அருளைச் சுவைக்கும்படி நாம் செய்தால் அதைக்கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். எனினும், அவர்களுடைய கைகளே தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக அவர்களுக்கு யாதொரு தீங்கேற்படும் பட்சத்தில் உடனே அவர்கள் நம்பிக்கையிழந்து விடுகின்றனர். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௩௬)
Tafseer
௩௭

اَوَلَمْ يَرَوْا اَنَّ اللّٰهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَاۤءُ وَيَقْدِرُۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ ٣٧

awalam yaraw
أَوَلَمْ يَرَوْا۟
இவர்கள் பார்க்க வேண்டாமா?
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yabsuṭu
يَبْسُطُ
விசாலமாக்குகின்றான்
l-riz'qa
ٱلرِّزْقَ
உணவை
liman yashāu
لِمَن يَشَآءُ
தான் நாடியவர்களுக்கு
wayaqdiru
وَيَقْدِرُۚ
இன்னும் சுருக்குகின்றான்
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் இருக்கின்றன
laāyātin
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கின்றனர்
நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு உணவை விரிவாக்குகின்றான்; (தான் நாடியவர்களுக்குக்) குறைத்து விடுகின்றான் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௩௭)
Tafseer
௩௮

فَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَالْمِسْكِيْنَ وَابْنَ السَّبِيْلِۗ ذٰلِكَ خَيْرٌ لِّلَّذِيْنَ يُرِيْدُوْنَ وَجْهَ اللّٰهِ ۖوَاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ٣٨

faāti
فَـَٔاتِ
ஆகவே கொடுப்பீராக!
dhā l-qur'bā
ذَا ٱلْقُرْبَىٰ
உறவினருக்கு
ḥaqqahu
حَقَّهُۥ
அவருடைய உரிமையை
wal-mis'kīna
وَٱلْمِسْكِينَ
இன்னும் வறியவருக்கு
wa-ib'na l-sabīli
وَٱبْنَ ٱلسَّبِيلِۚ
இன்னும் வழிப்போக்கருக்கு
dhālika
ذَٰلِكَ
இதுதான்
khayrun
خَيْرٌ
சிறந்ததாகும்.
lilladhīna yurīdūna
لِّلَّذِينَ يُرِيدُونَ
நாடுவோருக்கு
wajha
وَجْهَ
முகத்தை
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
wa-ulāika humu
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
இவர்கள்தான்
l-muf'liḥūna
ٱلْمُفْلِحُونَ
வெற்றியாளர்கள்
(நபியே! உங்களது பொருளில்) உறவினருக்கு அவரின் உரிமையை கொடுத்து வாருங்கள். அவ்வாறே ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் (அவர்களுடைய உரிமையைக் கொடுத்து வாருங்கள்). எவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை விரும்புகின்றார்களோ அவர்களுக்கு இதுவே மிக்க நன்றாகும். இத்தகையவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௩௮)
Tafseer
௩௯

وَمَآ اٰتَيْتُمْ مِّنْ رِّبًا لِّيَرْبُوَا۠ فِيْٓ اَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُوْا عِنْدَ اللّٰهِ ۚوَمَآ اٰتَيْتُمْ مِّنْ زَكٰوةٍ تُرِيْدُوْنَ وَجْهَ اللّٰهِ فَاُولٰۤىِٕكَ هُمُ الْمُضْعِفُوْنَ ٣٩

wamā ātaytum
وَمَآ ءَاتَيْتُم
எதை/நீங்கள்கொடுத்தீர்கள்
min riban
مِّن رِّبًا
அன்பளிப்புகளிலிருந்து
liyarbuwā
لِّيَرْبُوَا۟
வளர்ச்சி காணுவதற்காக
fī amwāli
فِىٓ أَمْوَٰلِ
செல்வங்களில்
l-nāsi
ٱلنَّاسِ
மக்களின்
falā yarbū
فَلَا يَرْبُوا۟
அது வளர்ச்சி காணாது
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِۖ
அல்லாஹ்விடம்
wamā ātaytum
وَمَآ ءَاتَيْتُم
எதை/நீங்கள்கொடுத்தீர்கள்
min zakatin
مِّن زَكَوٰةٍ
தர்மங்களிலிருந்து
turīdūna
تُرِيدُونَ
நீங்கள் நாடியவர்களாக
wajha
وَجْهَ
முகத்தை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-muḍ'ʿifūna
ٱلْمُضْعِفُونَ
பன்மடங்காக்கிக் கொள்பவர்கள்
(மற்ற) மனிதர்களுடைய பொருள்களுடன் சேர்ந்து (உங்கள் பொருளும்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை. எனினும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக ஏதும் நீங்கள் கொடுத்தாலோ, கொடுத்தவர்கள் அதனை இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௩௯)
Tafseer
௪௦

اَللّٰهُ الَّذِيْ خَلَقَكُمْ ثُمَّ رَزَقَكُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْۗ هَلْ مِنْ شُرَكَاۤىِٕكُمْ مَّنْ يَّفْعَلُ مِنْ ذٰلِكُمْ مِّنْ شَيْءٍۗ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ ࣖ ٤٠

al-lahu alladhī
ٱللَّهُ ٱلَّذِى
அல்லாஹ்தான்
khalaqakum
خَلَقَكُمْ
உங்களைப் படைத்தான்
thumma razaqakum
ثُمَّ رَزَقَكُمْ
பிறகு/அவன் உங்களுக்கு உணவளித்தான்
thumma yumītukum
ثُمَّ يُمِيتُكُمْ
பிறகு/மரணிக்கச் செய்கிறான்/உங்களை
thumma yuḥ'yīkum
ثُمَّ يُحْيِيكُمْۖ
பிறகு/அவன் உங்களை உயிர்ப்பிப்பான்
hal
هَلْ
?
min shurakāikum
مِن شُرَكَآئِكُم
உங்கள் தெய்வங்களில் (இருக்கின்றாரா)
man yafʿalu
مَّن يَفْعَلُ
செய்கின்றவர்
min dhālikum
مِن ذَٰلِكُم
இவற்றில்
min shayin
مِّن شَىْءٍۚ
எதையும்
sub'ḥānahu
سُبْحَٰنَهُۥ
அவன் மிகப் பரிசுத்தமானவன்
wataʿālā
وَتَعَٰلَىٰ
இன்னும் அவன் மிக உயர்ந்தவன்
ʿammā yush'rikūna
عَمَّا يُشْرِكُونَ
அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும்
அல்லாஹ்தான் உங்களை படைத்தவன். உங்களுக்கு உணவு கொடுப்பவனும் அவனே. பின்னர், அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பான். இவற்றில் எதையும் செய்யக்கூடிய சக்தி உங்கள் தெய்வங்களில் எதற்கும் உண்டோ? இவர்கள் செய்யும் (இத்தகைய) இணைகளிலிருந்து அல்லாஹ் மிக்க உயர்ந்தவன்; பரிசுத்தமானவன். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௪௦)
Tafseer