Skip to content

ஸூரா ஸூரத்துர் ரூம் - Page: 3

Ar-Rum

(ar-Rūm)

௨௧

وَمِنْ اٰيٰتِهٖٓ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْٓا اِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ ٢١

wamin āyātihi
وَمِنْ ءَايَٰتِهِۦٓ
இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
an khalaqa
أَنْ خَلَقَ
அவன் படைத்தது
lakum
لَكُم
உங்களுக்காக
min anfusikum
مِّنْ أَنفُسِكُمْ
உங்களிலிருந்தே
azwājan
أَزْوَٰجًا
மனைவிகளை
litaskunū
لِّتَسْكُنُوٓا۟
நீங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காக
ilayhā
إِلَيْهَا
அவர்களிடம்
wajaʿala
وَجَعَلَ
இன்னும் அவன் ஏற்படுத்தினான்
baynakum
بَيْنَكُم
உங்களுக்கு மத்தியில்
mawaddatan
مَّوَدَّةً
அன்பையும்
waraḥmatan
وَرَحْمَةًۚ
கருணையையும்
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் உள்ளன
laāyātin
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yatafakkarūna
يَتَفَكَّرُونَ
சிந்திக்கின்றார்கள்
நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு இவைகளில் (ஒன்றல்ல) நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௨௧)
Tafseer
௨௨

وَمِنْ اٰيٰتِهٖ خَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافُ اَلْسِنَتِكُمْ وَاَلْوَانِكُمْۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّلْعٰلِمِيْنَ ٢٢

wamin āyātihi
وَمِنْ ءَايَٰتِهِۦ
இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
khalqu
خَلْقُ
படைத்ததும்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
wal-arḍi
وَٱلْأَرْضِ
பூமியையும்
wa-ikh'tilāfu
وَٱخْتِلَٰفُ
வேறுபட்டு இருப்பதும்
alsinatikum
أَلْسِنَتِكُمْ
உங்கள் மொழிகளும்
wa-alwānikum
وَأَلْوَٰنِكُمْۚ
உங்கள் நிறங்களும்
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் உள்ளன
laāyātin
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
lil'ʿālimīna
لِّلْعَٰلِمِينَ
கல்விமான்களுக்கு
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களுடைய மொழிகளும் நிறங்களும் வெவ்வேறாக இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். இதிலும் கல்விமான்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௨௨)
Tafseer
௨௩

وَمِنْ اٰيٰتِهٖ مَنَامُكُمْ بِالَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَاۤؤُكُمْ مِّنْ فَضْلِهٖۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّسْمَعُوْنَ ٢٣

wamin āyātihi
وَمِنْ ءَايَٰتِهِۦ
இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
manāmukum
مَنَامُكُم
நீங்கள் தூங்குவதும்
bi-al-layli
بِٱلَّيْلِ
இரவிலும்
wal-nahāri
وَٱلنَّهَارِ
பகலிலும்
wa-ib'tighāukum
وَٱبْتِغَآؤُكُم
நீங்கள் தேடுவதும்
min faḍlihi
مِّن فَضْلِهِۦٓۚ
அவனுடைய அருளிலிருந்து
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் உள்ளன
laāyātin
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yasmaʿūna
يَسْمَعُونَ
செவியேற்கின்றனர்
இரவிலும் பகலிலும் நீங்கள் நித்திரை செய்து இளைப்பாறிக் கொள்வதும் (பூமியின் பல பாகங்களிலும் சென்று) நீங்கள் அவனுடைய அருளைத் தேடிக்கொள்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். (நல்லுபதேசத்தைச்) செவியுறும் மக்களுக்கு இதிலும் நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௨௩)
Tafseer
௨௪

وَمِنْ اٰيٰتِهٖ يُرِيْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا وَّيُنَزِّلُ مِنَ السَّمَاۤءِ مَاۤءً فَيُحْيٖ بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَاۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ ٢٤

wamin āyātihi
وَمِنْ ءَايَٰتِهِۦ
அவனுடைய அத்தாட்சிகளில் இருந்து
yurīkumu
يُرِيكُمُ
அவன் உங்களுக்கு காட்டுகின்றான்
l-barqa
ٱلْبَرْقَ
மின்னலை
khawfan
خَوْفًا
பயமாகவும்
waṭamaʿan
وَطَمَعًا
ஆசையாகவும்
wayunazzilu
وَيُنَزِّلُ
இன்னும் இறக்குகின்றான்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
māan
مَآءً
மழையை
fayuḥ'yī
فَيُحْىِۦ
உயிர்ப்பிக்கின்றான்
bihi
بِهِ
அதன் மூலம்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
baʿda
بَعْدَ
பின்னர்
mawtihā
مَوْتِهَآۚ
அது மரணித்த
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் உள்ளன
laāyātin
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yaʿqilūna
يَعْقِلُونَ
சிந்தித்து புரிகின்றனர்
நயமும் பயமும் தரக்கூடியவாறு மின்னலை அவன் உங்களுக்குக் காண்பிப்பதும், மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து இறந்த பூமியை செழிக்கச் செய்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளனவாகும். அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக இதில் (ஒன்றல்ல) பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௨௪)
Tafseer
௨௫

وَمِنْ اٰيٰتِهٖٓ اَنْ تَقُوْمَ السَّمَاۤءُ وَالْاَرْضُ بِاَمْرِهٖۗ ثُمَّ اِذَا دَعَاكُمْ دَعْوَةًۖ مِّنَ الْاَرْضِ اِذَآ اَنْتُمْ تَخْرُجُوْنَ ٢٥

wamin āyātihi
وَمِنْ ءَايَٰتِهِۦٓ
அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
an taqūma
أَن تَقُومَ
நிற்பது
l-samāu
ٱلسَّمَآءُ
வானமும்
wal-arḍu
وَٱلْأَرْضُ
பூமியும்
bi-amrihi
بِأَمْرِهِۦۚ
அவனுடைய கட்டளையின்படி
thumma
ثُمَّ
பிறகு
idhā
إِذَا
அவன் அழைத்தால்
daʿākum
دَعَاكُمْ
உங்களை
daʿwatan
دَعْوَةً
ஒரு முறை அழைத்தல்
mina l-arḍi
مِّنَ ٱلْأَرْضِ
பூமியிலிருந்து
idhā antum
إِذَآ أَنتُمْ
அப்போது நீங்கள்
takhrujūna
تَخْرُجُونَ
வெளியேறுவீர்கள்
வானமும் பூமியும் அவன் கட்டளைப்படி நிலை பெற்றிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். (உங்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரையில் நீங்கள் அதில் உயிர் வாழ்ந்து மரணித்துப் பூமியில் அடக்கப்பட்டதன் பின்னரும்) அவன் உங்களை அழைக்கும்போது ஒரே அழைப்பில் நீங்கள் பூமியில் இருந்து வெளிப்பட்டு விடுவீர்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௨௫)
Tafseer
௨௬

وَلَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ كُلٌّ لَّهٗ قَانِتُوْنَ ٢٦

walahu
وَلَهُۥ
அவனுக்கே உரியவர்கள்
man
مَن
எவர்கள்
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களிலும்
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமியிலும்
kullun
كُلٌّ
எல்லோரும்
lahu
لَّهُۥ
அவனுக்கே
qānitūna
قَٰنِتُونَ
பணிந்துநடக்கின்றனர்
வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்குரியனவே. இவை அனைத்தும் அவனுக்கு அடிபணிந்து நடக்கின்றன. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௨௬)
Tafseer
௨௭

وَهُوَ الَّذِيْ يَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ وَهُوَ اَهْوَنُ عَلَيْهِۗ وَلَهُ الْمَثَلُ الْاَعْلٰى فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ࣖ ٢٧

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِى
அவன்தான்
yabda-u
يَبْدَؤُا۟
ஆரம்பமாக படைக்கின்றான்
l-khalqa
ٱلْخَلْقَ
படைப்புகளை
thumma
ثُمَّ
பிறகு
yuʿīduhu
يُعِيدُهُۥ
அவன் அவற்றை மீண்டும் படைக்கின்றான்
wahuwa
وَهُوَ
அது
ahwanu
أَهْوَنُ
மிக இலகுவானதே
ʿalayhi
عَلَيْهِۚ
அவனுக்கு
walahu
وَلَهُ
அவனுக்கே உரியன
l-mathalu
ٱلْمَثَلُ
தன்மைகள்
l-aʿlā
ٱلْأَعْلَىٰ
மிக உயர்ந்த
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களிலும்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
பூமியிலும்
wahuwa l-ʿazīzu
وَهُوَ ٱلْعَزِيزُ
அவன்தான் மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
அவன்தான் படைப்புகளை ஆரம்பத்தில் உற்பத்தி செய்பவன். அவனே (அவை மரணித்த பின்னரும் உயிர்கொடுத்து) அவற்றை மீளவைக்கிறவன். இது அவனுக்கு மிக்க எளிது. வானங்களிலும் பூமியிலும் அவனுடைய (உதாரணமும் பரிசுத்தத்) தன்மை(யும்)தான் மிக்க மேலானதாகும். அவன் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௨௭)
Tafseer
௨௮

ضَرَبَ لَكُمْ مَّثَلًا مِّنْ اَنْفُسِكُمْۗ هَلْ لَّكُمْ مِّنْ مَّا مَلَكَتْ اَيْمَانُكُمْ مِّنْ شُرَكَاۤءَ فِيْ مَا رَزَقْنٰكُمْ فَاَنْتُمْ فِيْهِ سَوَاۤءٌ تَخَافُوْنَهُمْ كَخِيْفَتِكُمْ اَنْفُسَكُمْۗ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْقِلُوْنَ ٢٨

ḍaraba
ضَرَبَ
அவன் விவரிக்கின்றான்
lakum
لَكُم
உங்களுக்கு
mathalan
مَّثَلًا
ஓர் உதாரணத்தை
min anfusikum
مِّنْ أَنفُسِكُمْۖ
உங்களிலிருந்து
hal
هَل
?
lakum
لَّكُم
உங்களுக்கு
min mā malakat
مِّن مَّا مَلَكَتْ
சொந்தமாக்கியவர்களில்
aymānukum
أَيْمَٰنُكُم
உங்கள் வலக்கரங்கள்
min shurakāa
مِّن شُرَكَآءَ
பங்காளிகள் யாரும்
fī mā razaqnākum
فِى مَا رَزَقْنَٰكُمْ
நாம் உங்களுக்கு கொடுத்தவற்றில்
fa-antum fīhi
فَأَنتُمْ فِيهِ
நீங்கள்/அதில்
sawāon
سَوَآءٌ
சமமானவர்களாக
takhāfūnahum
تَخَافُونَهُمْ
அவர்களை நீங்கள் பயப்படுகிறீர்கள்
kakhīfatikum
كَخِيفَتِكُمْ
நீங்கள் பயப்படுவது போன்று
anfusakum
أَنفُسَكُمْۚ
உங்களை
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறு
nufaṣṣilu
نُفَصِّلُ
விவரிக்கின்றோம்
l-āyāti
ٱلْءَايَٰتِ
வசனங்களை
liqawmin
لِقَوْمٍ
மக்களுக்கு
yaʿqilūna
يَعْقِلُونَ
சிந்தித்து புரிகின்றனர்
(மனிதர்களே! நீங்கள் அவனுடைய மேன்மையை அறிந்துகொள்வதற்காக) உங்களுக்குள்ளாகவே அவன் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். நாம் உங்களுக்குக் கொடுத்த பொருள்களில், உங்கள் அடிமைகளில் எவரேனும் (உங்களுடைய பொருள்களுக்கு) உங்களுடன் சம உரிமை உடையவர்களாக ஆகிவிடுவார்களா? அல்லது நீங்கள் உங்களைப் பொருட் படுத்துவதைப் போல் அவர்களையும் பொருட்படுத்துவீர்களா? (பொருட்படுத்த மாட்டீர்களே! இவ்வாறிருக்க, படைக்கப்பட்ட இவைகளை நீங்கள் எனக்கு இணை ஆக்கலாமா?) அறிவுடைய மக்களுக்கு நம்முடைய வசனங்களை இவ்வாறு விவரித்துக் கூறுகிறோம். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௨௮)
Tafseer
௨௯

بَلِ اتَّبَعَ الَّذِيْنَ ظَلَمُوْٓا اَهْوَاۤءَهُمْ بِغَيْرِ عِلْمٍۗ فَمَنْ يَّهْدِيْ مَنْ اَضَلَّ اللّٰهُ ۗوَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ ٢٩

bali
بَلِ
மாறாக
ittabaʿa
ٱتَّبَعَ
பின்பற்றுகின்றனர்
alladhīna ẓalamū
ٱلَّذِينَ ظَلَمُوٓا۟
அநியாயக்காரர்கள்
ahwāahum
أَهْوَآءَهُم
மன இச்சைகளை தங்கள்
bighayri
بِغَيْرِ
இன்றி
ʿil'min
عِلْمٍۖ
கல்வி அறிவு
faman
فَمَن
யார்
yahdī
يَهْدِى
நேர்வழி செலுத்துவார்
man
مَنْ
எவரை
aḍalla
أَضَلَّ
வழிகெடுத்தான்
l-lahu
ٱللَّهُۖ
அல்லாஹ்
wamā lahum
وَمَا لَهُم
அவர்களுக்கு இல்லை
min nāṣirīna
مِّن نَّٰصِرِينَ
உதவியாளர்களில் எவரும்
எனினும், அநியாயக்காரர்கள் எவ்வித அறிவுமின்றியே (இறைவனின் வசனங்களை நிராகரித்துவிட்டுத்) தங்களுடைய சரீர இச்சையைப் பின்பற்றி நடக்கின்றனர். அல்லாஹ் எவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்களை நேரான வழியில் செலுத்தக் கூடியவர் யார்? இத்தகையவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவரும் இல்லை. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௨௯)
Tafseer
௩௦

فَاَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ حَنِيْفًاۗ فِطْرَتَ اللّٰهِ الَّتِيْ فَطَرَ النَّاسَ عَلَيْهَاۗ لَا تَبْدِيْلَ لِخَلْقِ اللّٰهِ ۗذٰلِكَ الدِّيْنُ الْقَيِّمُۙ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَۙ ٣٠

fa-aqim
فَأَقِمْ
ஆகவே நிறுத்துவீராக!
wajhaka
وَجْهَكَ
உம் முகத்தை
lilddīni
لِلدِّينِ
மார்க்கத்தின் பக்கம்
ḥanīfan
حَنِيفًاۚ
உறுதியுடையவராக
fiṭ'rata
فِطْرَتَ
இயற்கை மார்க்கம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
allatī faṭara
ٱلَّتِى فَطَرَ
எது/இயற்கையாக அமைத்தான்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களை
ʿalayhā
عَلَيْهَاۚ
அதன் மீதுதான்
lā tabdīla
لَا تَبْدِيلَ
மாற்றக்கூடாது
likhalqi
لِخَلْقِ
படைப்பை
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
dhālika
ذَٰلِكَ
இதுதான்
l-dīnu
ٱلدِّينُ
மார்க்கம்
l-qayimu
ٱلْقَيِّمُ
நிலையான
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
akthara
أَكْثَرَ
அதிகமானவர்கள்
l-nāsi
ٱلنَّاسِ
மக்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
(நபியே! இப்ராஹீமுடைய) நேரான மார்க்கத்தை நோக்கி நீங்கள் உங்களுடைய முகத்தை உறுதியான ஓர்மைப்பாட்டுடன் திருப்புங்கள். (அதுவே) மனிதர்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்திய இயற்கை மார்க்கமாகும். அவன் படைத்த (மார்க்கத்)தை (எவராலும்) மாற்றிவிட முடியாது. இதுதான் நிலையான மார்க்கம். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்துகொள்ளவே மாட்டார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௩௦)
Tafseer