Skip to content

ஸூரா ஸூரத்துர் ரூம் - Word by Word

Ar-Rum

(ar-Rūm)

bismillaahirrahmaanirrahiim

الۤمّۤ ۚ ١

alif-lam-meem
الٓمٓ
அலிஃப், லாம், மீம்
அலிஃப்; லாம்; மீம். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௧)
Tafseer

غُلِبَتِ الرُّوْمُۙ ٢

ghulibati
غُلِبَتِ
தோற்கடிக்கப்பட்டனர்
l-rūmu
ٱلرُّومُ
ரோமர்கள்
(நமக்குச்) சமீபமான பூமியிலுள்ள "ரூம்"வாசிகள் தோல்வி அடைந்தனர். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௨)
Tafseer

فِيْٓ اَدْنَى الْاَرْضِ وَهُمْ مِّنْۢ بَعْدِ غَلَبِهِمْ سَيَغْلِبُوْنَۙ ٣

fī adnā
فِىٓ أَدْنَى
கீழ்ப் பகுதியில்
l-arḍi
ٱلْأَرْضِ
பூமியின்
wahum
وَهُم
இன்னும் அவர்கள்
min baʿdi
مِّنۢ بَعْدِ
பின்னர்
ghalabihim
غَلَبِهِمْ
அவர்கள் தோற்கடிக்கப்பட்டதன்
sayaghlibūna
سَيَغْلِبُونَ
அவர்கள் தோற்கடிப்பார்கள்
அவர்கள் (இன்று) தோல்வியடைந்து விட்டபோதிலும் அதிசீக்கிரத்தில் வெற்றி அடைவார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௩)
Tafseer

فِيْ بِضْعِ سِنِيْنَ ەۗ لِلّٰهِ الْاَمْرُ مِنْ قَبْلُ وَمِنْۢ بَعْدُ ۗوَيَوْمَىِٕذٍ يَّفْرَحُ الْمُؤْمِنُوْنَۙ ٤

fī biḍ'ʿi sinīna
فِى بِضْعِ سِنِينَۗ
சில ஆண்டுகளில்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கே உரியது
l-amru
ٱلْأَمْرُ
அதிகாரம்
min qablu
مِن قَبْلُ
முன்னரும்
wamin baʿdu
وَمِنۢ بَعْدُۚ
பின்னரும்
wayawma-idhin
وَيَوْمَئِذٍ
அந்நாளில்
yafraḥu
يَفْرَحُ
மகிழ்ச்சியடைவார்கள்
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
(அதுவும்) சில ஆண்டுகளுக்குள்ளாகவே (வெற்றி அடைவார்கள். வெற்றி தோல்வி என்ற) விஷயம் இதற்கு முன்னரும், இதற்குப் பின்னரும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. (அவர்கள் வெற்றியடையும்) அந்நாளில் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் உதவியைக் கண்டு மகிழ்ச்சியடைவார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௪)
Tafseer

بِنَصْرِ اللّٰهِ ۗيَنْصُرُ مَنْ يَّشَاۤءُۗ وَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ ٥

binaṣri
بِنَصْرِ
உதவியால்
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
yanṣuru
يَنصُرُ
அவன் உதவுகின்றான்
man yashāu
مَن يَشَآءُۖ
தான் நாடியவர்களுக்கு
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்
அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு உதவி புரிகிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௫)
Tafseer

وَعْدَ اللّٰهِ ۗ لَا يُخْلِفُ اللّٰهُ وَعْدَهٗ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ ٦

waʿda
وَعْدَ
வாக்களிக்கின்றான்
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்
lā yukh'lifu
لَا يُخْلِفُ
மாற்ற மாட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
waʿdahu
وَعْدَهُۥ
தனது வாக்கை
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
akthara l-nāsi
أَكْثَرَ ٱلنَّاسِ
மக்களில் அதிகமானவர்கள்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
(இது) அல்லாஹ்வுடைய வாக்குறுதியாகும். அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியில் தவறுவதில்லை. எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறியமாட்டார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௬)
Tafseer

يَعْلَمُوْنَ ظَاهِرًا مِّنَ الْحَيٰوةِ الدُّنْيَاۖ وَهُمْ عَنِ الْاٰخِرَةِ هُمْ غٰفِلُوْنَ ٧

yaʿlamūna
يَعْلَمُونَ
அவர்கள் அறிவார்கள்
ẓāhiran
ظَٰهِرًا
வெளிரங்கத்தை(த்தான்)
mina l-ḥayati
مِّنَ ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையின்
l-dun'yā
ٱلدُّنْيَا
இவ்வுலக
wahum
وَهُمْ
அவர்கள்
ʿani l-ākhirati
عَنِ ٱلْءَاخِرَةِ
மறுமையைப் பற்றி
hum
هُمْ
தான்
ghāfilūna
غَٰفِلُونَ
கவனமற்றவர்கள்
அவர்கள், இவ்வுலக வாழ்க்கையிலுள்ள வெளிப்படையான விஷயங்களை அறி(ந்து கவனிக்)கின்றனர். ஆனால், அவர்கள் மறுமையைப் பற்றி முற்றிலும் பராமுகமாயிருக்கின்றனர். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௭)
Tafseer

اَوَلَمْ يَتَفَكَّرُوْا فِيْٓ اَنْفُسِهِمْ ۗ مَا خَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَآ اِلَّا بِالْحَقِّ وَاَجَلٍ مُّسَمًّىۗ وَاِنَّ كَثِيْرًا مِّنَ النَّاسِ بِلِقَاۤئِ رَبِّهِمْ لَكٰفِرُوْنَ ٨

awalam yatafakkarū
أَوَلَمْ يَتَفَكَّرُوا۟
அவர்கள் சிந்தித்து பார்க்க மாட்டார்களா?
fī anfusihim
فِىٓ أَنفُسِهِمۗ
தங்களைத் தாமே
mā khalaqa
مَّا خَلَقَ
படைக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியையும்
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَآ
அந்த இரண்டிற்கும் மத்தியில் உள்ளவற்றையும்
illā bil-ḥaqi
إِلَّا بِٱلْحَقِّ
தவிர/உண்மையான காரியத்திற்காக
wa-ajalin
وَأَجَلٍ
தவணைக்காக
musamman
مُّسَمًّىۗ
ஒரு குறிப்பிட்ட
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
kathīran
كَثِيرًا
அதிகமானவர்கள்
mina l-nāsi
مِّنَ ٱلنَّاسِ
மக்களில்
biliqāi
بِلِقَآئِ
சந்திப்பை
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
lakāfirūna
لَكَٰفِرُونَ
நிராகரிப்பவர்கள்தான்
(இதனை) அவர்கள் தங்களுக்குள்ளாகவே கவனிக்க வேண்டாமா? வானங்களையும். பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் நியாயமான காரணமின்றியும், குறிப்பிட்ட தவணையின்றியும் அல்லாஹ் படைக்கவில்லை. எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதையும் நிராகரிக்கின்றனர். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௮)
Tafseer

اَوَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۗ كَانُوْٓا اَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَّاَثَارُوا الْاَرْضَ وَعَمَرُوْهَآ اَكْثَرَ مِمَّا عَمَرُوْهَا وَجَاۤءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِۗ فَمَا كَانَ اللّٰهُ لِيَظْلِمَهُمْ وَلٰكِنْ كَانُوْٓا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَۗ ٩

awalam yasīrū
أَوَلَمْ يَسِيرُوا۟
இவர்கள் பயணிக்க வேண்டாமா?
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
fayanẓurū
فَيَنظُرُوا۟
இவர்கள் பார்ப்பார்களே
kayfa
كَيْفَ
எப்படி (என்று)
kāna
كَانَ
இருந்தது
ʿāqibatu
عَٰقِبَةُ
முடிவு
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْۚ
தங்களுக்கு முன்னுள்ளவர்களின்
kānū
كَانُوٓا۟
அவர்கள் இருந்தார்கள்
ashadda
أَشَدَّ
கடுமையானவர்களாக
min'hum
مِنْهُمْ
இவர்களை விட
quwwatan
قُوَّةً
பலத்தால்
wa-athārū
وَأَثَارُوا۟
உழுதார்கள்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
waʿamarūhā
وَعَمَرُوهَآ
இன்னும் அவர்கள் அதை செழிப்பாக்கினார்கள்
akthara
أَكْثَرَ
அதிகமாக
mimmā ʿamarūhā
مِمَّا عَمَرُوهَا
அதை இவர்கள் செழிப்பாக்கியதைவிட
wajāathum
وَجَآءَتْهُمْ
இன்னும் , அவர்களிடம் வந்தனர்
rusuluhum
رُسُلُهُم
அவர்களுடைய தூதர்கள்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِۖ
தெளிவான அத்தாட்சிகளுடன்
famā kāna l-lahu
فَمَا كَانَ ٱللَّهُ
இல்லை/அல்லாஹ்
liyaẓlimahum
لِيَظْلِمَهُمْ
அவர்களுக்கு அநியாயம் செய்பவனாக
walākin
وَلَٰكِن
எனினும்
kānū
كَانُوٓا۟
அவர்கள் இருந்தனர்
anfusahum
أَنفُسَهُمْ
தங்களுக்குத்தாங்களே
yaẓlimūna
يَظْلِمُونَ
அநியாயம் செய்பவர்களாக
இவர்கள் பூமியில் சுற்றித் திரிய வேண்டாமா? அவ்வாறாயின், இவர்களுக்கு முன்னிருந்த (நிராகரிப்ப)வர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டுகொள்வார்கள். (முன்னிருந்த) அவர்கள் இவர்களைவிட பலசாலிகளாகவும், இவர்கள் எவ்வளவு பூமியை அபிவிருத்தி செய்தார்களோ அதைவிட அதிகமான பூமிகளைப் பண்படுத்தி அபிவிருத்தி செய்தவர்களாகவும் இருந்தார்கள். (இந்நிலைமையில்) அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்கள் (அந்நபிமார்களைப் பொய்யாக்கித்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௯)
Tafseer
௧௦

ثُمَّ كَانَ عَاقِبَةَ الَّذِيْنَ اَسَاۤءُوا السُّوْۤاٰىٓ اَنْ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ وَكَانُوْا بِهَا يَسْتَهْزِءُوْنَ ࣖ ١٠

thumma
ثُمَّ
பிறகு
kāna
كَانَ
இருந்தது
ʿāqibata
عَٰقِبَةَ
முடிவு
alladhīna asāū
ٱلَّذِينَ أَسَٰٓـُٔوا۟
தீமை செய்தவர்களின்
l-sūā
ٱلسُّوٓأَىٰٓ
மிக தீயதாகவே
an kadhabū
أَن كَذَّبُوا۟
ஏனெனில் அவர்கள் பொய்ப்பித்தனர்
biāyāti
بِـَٔايَٰتِ
அத்தாட்சிகளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wakānū
وَكَانُوا۟
இன்னும் , இருந்தனர்
bihā
بِهَا
அவற்றை
yastahziūna
يَسْتَهْزِءُونَ
பரிகாசம் செய்பவர்களாக
அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கி அவற்றைப் பரிகசித்துக் கொண்டிருந்ததன் காரணமாக, தீமை செய்து கொண்டிருந்த அவர்களின் முடிவும் தீமையாகவே முடிந்தது. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௧௦)
Tafseer