Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௮

Qur'an Surah Al-'Ankabut Verse 8

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا ۗوَاِنْ جَاهَدٰكَ لِتُشْرِكَ بِيْ مَا لَيْسَ لَكَ بِهٖ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا ۗاِلَيَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ (العنكبوت : ٢٩)

wawaṣṣaynā
وَوَصَّيْنَا
And We have enjoined
நாம் உபதேசித்தோம்
l-insāna
ٱلْإِنسَٰنَ
(on) man
மனிதனுக்கு
biwālidayhi
بِوَٰلِدَيْهِ
goodness to his parents
அவன் தனது பெற்றோரிடம்
ḥus'nan
حُسْنًاۖ
goodness to his parents
அழகிய முறையில்
wa-in jāhadāka
وَإِن جَٰهَدَاكَ
but if they both strive against you
அவர்கள் உன்னை வற்புறுத்தினால்
litush'rika
لِتُشْرِكَ
to make you associate
நீ இணைஆக்கும்படி
بِى
with Me
எனக்கு
mā laysa
مَا لَيْسَ
what not
எதை/இல்லை
laka
لَكَ
you have
உனக்கு
bihi
بِهِۦ
of it
அதைப் பற்றி
ʿil'mun
عِلْمٌ
any knowledge
அறிவு
falā tuṭiʿ'humā
فَلَا تُطِعْهُمَآۚ
then (do) not obey both of them
அவர்களுக்கு நீ கீழ்ப்படியாதே!
ilayya
إِلَىَّ
To Me
என் பக்கமே
marjiʿukum
مَرْجِعُكُمْ
(is) your return
உங்கள் மீட்சி இருக்கிறது
fa-unabbi-ukum
فَأُنَبِّئُكُم
and I will inform you
நான் உங்களுக்கு அறிவிப்பேன்
bimā kuntum taʿmalūna
بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
about what you used (to) do
நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை

Transliteration:

Wa wassainal insaana biwaalidaihi husnanw wa in jaahadaaka litushrika bee maa laisa laka bihee 'ilmun falaa tuti'humaa; ilaiya marji'ukum fa unabbi'ukum bimaa kuntum ta'maloon (QS. al-ʿAnkabūt:8)

English Sahih International:

And We have enjoined upon man goodness to parents. But if they endeavor to make you associate with Me that of which you have no knowledge, do not obey them. To Me is your return, and I will inform you about what you used to do. (QS. Al-'Ankabut, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம். (எனினும், இறைவன் என்பதற்கு) எவ்வித ஆதாரமும் இல்லாதவைகளை எனக்கு இணையாக்கும்படி (மனிதனே!) அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விஷயத்தில்) நீ அவர்களுக்கு வழிப்படாதே! என்னிடமே நீ திரும்ப வேண்டிய லிதிருக்கின்றது. நீ செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி (நன்மையா தீமையா என்பதை) அச்சமயம் நான் உனக்கு அறிவித்துவிடுவேன். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௮)

Jan Trust Foundation

தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்; எனினும், (மனிதனே!) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம்; என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கிறது; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மனிதனுக்கு அவன் தனது பெற்றோரிடம் அழகிய முறையில் நடக்க வேண்டும் என நாம் உபதேசித்தோம். உனக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதை எனக்கு இணை ஆக்கும்படி அவர்கள் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்கு நீ கீழ்ப்படியாதே! என் பக்கமே உங்கள் மீட்சி இருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நான் உங்களுக்குஅறிவிப்பேன்.