குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௭
Qur'an Surah Al-'Ankabut Verse 7
ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَلَنَجْزِيَنَّهُمْ اَحْسَنَ الَّذِيْ كَانُوْا يَعْمَلُوْنَ (العنكبوت : ٢٩)
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- And those who
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- believe
- நம்பிக்கை கொண்டனர்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- and do
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- righteous (deeds)
- நன்மைகளை
- lanukaffiranna
- لَنُكَفِّرَنَّ
- surely We will remove
- நாம் நீக்கி விடுவோம்
- ʿanhum
- عَنْهُمْ
- from them
- அவர்களை விட்டும்
- sayyiātihim
- سَيِّـَٔاتِهِمْ
- their evil deeds
- அவர்களின் பாவங்களை
- walanajziyannahum
- وَلَنَجْزِيَنَّهُمْ
- and We will surely reward them
- நாம் அவர்களுக்கு கூலியாகத் தருவோம்
- aḥsana
- أَحْسَنَ
- (the) best
- மிகச் சிறந்ததை
- alladhī kānū yaʿmalūna
- ٱلَّذِى كَانُوا۟ يَعْمَلُونَ
- (of) what they used (to) do
- அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட
Transliteration:
Wallazeena aamanoo wa 'amilus saalihaati lanukaf firanna 'anhum saiyiaatihim wa lanajziyannahum ahsanal lazee kaanoo ya'maloon(QS. al-ʿAnkabūt:7)
English Sahih International:
And those who believe and do righteous deeds – We will surely remove from them their misdeeds and will surely reward them according to the best of what they used to do. (QS. Al-'Ankabut, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுடைய பாவத்திற்கு (அவைகளைப்) பரிகாரமாக்கி வைத்து அவர்கள் செய்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௭)
Jan Trust Foundation
ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிக்க அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளைச் செய்தார்களோ - அவர்களை விட்டும் அவர்களின் பாவங்களை நாம் நீக்கி விடுவோம்; அவர்கள் (இணைவைப்பின் போது) செய்து கொண்டிருந்ததை விட மிகச் சிறந்ததை நாம் அவர்களுக்கு கூலியாகத் தருவோம்.