குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௬௯
Qur'an Surah Al-'Ankabut Verse 69
ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَاۗ وَاِنَّ اللّٰهَ لَمَعَ الْمُحْسِنِيْنَ ࣖ (العنكبوت : ٢٩)
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- And those who
- எவர்கள்
- jāhadū
- جَٰهَدُوا۟
- strive
- போரிட்டனர்
- fīnā
- فِينَا
- for Us
- நமக்காக
- lanahdiyannahum
- لَنَهْدِيَنَّهُمْ
- We will surely guide them
- அவர்களுக்கு நாம் நிச்சயமாக வழிகாட்டுவோம்
- subulanā
- سُبُلَنَاۚ
- (to) Our ways
- நமது பாதைகளை
- wa-inna
- وَإِنَّ
- And indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- lamaʿa l-muḥ'sinīna
- لَمَعَ ٱلْمُحْسِنِينَ
- surely (is) with the good-doers
- நல்லோருடன் இருக்கின்றான்
Transliteration:
Wallazeena jaahadoo feenaa lanahdiyannahum subulana; wa innal laaha lama'al muhsineen(QS. al-ʿAnkabūt:69)
English Sahih International:
And those who strive for Us – We will surely guide them to Our ways. And indeed, Allah is with the doers of good. (QS. Al-'Ankabut, Ayah ௬௯)
Abdul Hameed Baqavi:
எவர்கள் நம்முடைய வழியில் (செல்ல) முயற்சிக் கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நம்முடைய (நல்) வழிகளில் செலுத்துகின்றோம். நன்மை செய்பவர்களுடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௬௯)
Jan Trust Foundation
மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நமக்காக (நமது தீன் உயர்வதற்காக இணைவைப்பாளர்களிடம்) போரிட்டவர்கள் - அவர்களுக்கு நாம் நிச்சயமாக நமது (நேரான) பாதைகளை வழிகாட்டுவோம். நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) நல்லோருடன் இருக்கின்றான்.