Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௬௮

Qur'an Surah Al-'Ankabut Verse 68

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِالْحَقِّ لَمَّا جَاۤءَهٗ ۗ اَلَيْسَ فِيْ جَهَنَّمَ مَثْوًى لِّلْكٰفِرِيْنَ (العنكبوت : ٢٩)

waman
وَمَنْ
And who
யார்?
aẓlamu
أَظْلَمُ
(is) more unjust
மகா அநியாயக்காரன்
mimmani if'tarā
مِمَّنِ ٱفْتَرَىٰ
than (he) who invents
இட்டுக்கட்டியவனை விட
ʿalā
عَلَى
against
மீது
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்வின்
kadhiban
كَذِبًا
a lie
பொய்யை
aw
أَوْ
or
அல்லது
kadhaba
كَذَّبَ
denies
பொய்ப்பித்தான்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
the truth
உண்மையை
lammā jāahu
لَمَّا جَآءَهُۥٓۚ
when it has come to him
அது தன்னிடம் வந்த போது
alaysa
أَلَيْسَ
Is there not
இல்லையா?
fī jahannama
فِى جَهَنَّمَ
in Hell
நரகத்தில்
mathwan
مَثْوًى
an abode
தங்குமிடம்
lil'kāfirīna
لِّلْكَٰفِرِينَ
for the disbelievers?
நிராகரிப்பாளர்களுக்கு

Transliteration:

Wa man azlamu mimma nif taraa 'alal laahi kaziban aw kazzaba bilhaqqi lammaa jaaa'ah; alaisa fee jahannama maswal lil kaafireen (QS. al-ʿAnkabūt:68)

English Sahih International:

And who is more unjust than one who invents a lie about Allah or denies the truth when it has come to him? Is there not in Hell a [sufficient] residence for the disbelievers? (QS. Al-'Ankabut, Ayah ௬௮)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவனைவிட அல்லது தன்னிடம் வந்த உண்மையைப் பொய்யாக்குபவனைவிட அநியாயக்காரன் யார்? இத்தகைய நிராகரிப்பவர்களின் தங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது. (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௬௮)

Jan Trust Foundation

அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட - அல்லது தன்னிடம் சத்தியம் வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிட அநியாயம் செய்பவன் யார்? (இத்தகைய) காஃபிர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட அல்லது உண்மையை -அது தன்னிடம் வந்த போது- பொய்ப்பித்தவனை (விட) மகா அநியாயக்காரன் யார்? நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா?