குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௬௫
Qur'an Surah Al-'Ankabut Verse 65
ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاِذَا رَكِبُوْا فِى الْفُلْكِ دَعَوُا اللّٰهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ ەۚ فَلَمَّا نَجّٰىهُمْ اِلَى الْبَرِّ اِذَا هُمْ يُشْرِكُوْنَۙ (العنكبوت : ٢٩)
- fa-idhā rakibū
- فَإِذَا رَكِبُوا۟
- And when they embark
- அவர்கள் பயணித்தால்
- fī l-ful'ki
- فِى ٱلْفُلْكِ
- [in] the ship
- கப்பலில்
- daʿawū
- دَعَوُا۟
- they call
- அழைக்கின்றனர்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- mukh'liṣīna
- مُخْلِصِينَ
- (being) sincere
- தூய்மைப்படுத்தியவர்களாக
- lahu
- لَهُ
- to Him
- அவனுக்கு மட்டும்
- l-dīna
- ٱلدِّينَ
- (in) the religion
- வணக்க வழிபாட்டை
- falammā najjāhum
- فَلَمَّا نَجَّىٰهُمْ
- But when He delivers them
- அவன் அவர்களை காப்பாற்றிக் கொண்டு வந்தால்
- ilā l-bari
- إِلَى ٱلْبَرِّ
- to the land
- கரைக்கு
- idhā hum
- إِذَا هُمْ
- behold they
- அப்போது அவர்கள்
- yush'rikūna
- يُشْرِكُونَ
- associate partners (with Him)
- இணைவைக்கின்றனர்
Transliteration:
Fa-izaa rakiboo fil fulki da'awul laaha mukhilseena lahud deena falammaa najjaa hum ilal baari izaa hum yushrikoon(QS. al-ʿAnkabūt:65)
English Sahih International:
And when they board a ship, they supplicate Allah, sincere to Him in religion [i.e., faith and hope]. But when He delivers them to the land, at once they associate others with Him (QS. Al-'Ankabut, Ayah ௬௫)
Abdul Hameed Baqavi:
(மனிதர்கள்) கப்பலில் ஏறி (ஆபத்தில் சிக்கி)க் கொண்டால், அவர்கள் முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிபட்டுக் கலப்பற்ற (பரிசுத்த) மனதோடு அவனை அழைத்துப் பிரார்த்தனை செய்கின்றனர். அவன், அவர்களை கரையில் (இறக்கி) பாதுகாத்துக் கொண்ட பின்னர் அவனுக்கு அவர்கள் (பலரை) இணை ஆக்குகின்றனர். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௬௫)
Jan Trust Foundation
மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில் வழிப்பட்டவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை (பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே) இணைவைக்கின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் கப்பலில் பயணித்தால் அல்லாஹ்வை அவனுக்கு மட்டும் வணக்க வழிபாட்டை தூய்மைப்படுத்தியவர்களாக அழைக்கின்றனர். அவன் அவர்களை கரைக்கு காப்பாற்றிக் கொண்டு வந்தால் அப்போது அவர்கள் (அவனுக்கு) இணைவைக்கின்றனர்.