Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௬௦

Qur'an Surah Al-'Ankabut Verse 60

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَاَيِّنْ مِّنْ دَاۤبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَاۖ اللّٰهُ يَرْزُقُهَا وَاِيَّاكُمْ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ (العنكبوت : ٢٩)

waka-ayyin
وَكَأَيِّن
And how many
எத்தனையோ
min dābbatin
مِّن دَآبَّةٍ
of a creature
கால்நடைகள்
lā taḥmilu
لَّا تَحْمِلُ
(does) not carry
சுமப்பதில்லை
riz'qahā
رِزْقَهَا
its provision
தனது உணவை
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்தான்
yarzuquhā
يَرْزُقُهَا
provides (for) it
அவற்றுக்கும் உணவளிக்கிறான்
wa-iyyākum
وَإِيَّاكُمْۚ
and (for) you
உங்களுக்கும்
wahuwa
وَهُوَ
And He
அவன்தான்
l-samīʿu
ٱلسَّمِيعُ
(is) the All-Hearer
நன்கு செவியுறுபவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
the All-Knower
நன்கறிந்தவன்

Transliteration:

Wa ka ayyim min daaabbatil laa tahmilu riqqahaa; al laahu yarzuquhaa wa iyyaakum; wa Huwas Samee'ul Aleem (QS. al-ʿAnkabūt:60)

English Sahih International:

And how many a creature carries not its [own] provision. Allah provides for it and for you. And He is the Hearing, the Knowing. (QS. Al-'Ankabut, Ayah ௬௦)

Abdul Hameed Baqavi:

உயிர்வாழும் பிராணிகளில் எத்தனையோ இருக்கின்றன. அவை தங்கள் உணவைச் சுமந்து திரிவதில்லை. அவற்றிற்கும் உங்களுக்கும் அல்லாஹ்தான் உணவளிக்கிறான். (இவ்வாறிருக்க அதற்காக நீங்கள் ஏன் அதிகக் கவலைப்பட வேண்டும்.) அவனோ (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௬௦)

Jan Trust Foundation

அன்றியும் (பூமியிலுள்ள) எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை; அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான் - இன்னும் அவன் (யாவற்றையும் செவிமடுப்பவனாகவும் (நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எத்தனையோ கால்நடைகள் தனது உணவை சுமப்பதில்லை. அல்லாஹ் தான் அவற்றுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.