Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௫௮

Qur'an Surah Al-'Ankabut Verse 58

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُبَوِّئَنَّهُمْ مِّنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۗ نِعْمَ اَجْرُ الْعٰمِلِيْنَۖ (العنكبوت : ٢٩)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
believe
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
and do
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
[the] righteous deeds
நன்மைகளை
lanubawwi-annahum
لَنُبَوِّئَنَّهُم
surely We will give them a place
அவர்களுக்கு நாம் தயார்படுத்திக் கொடுப்போம்
mina l-janati
مِّنَ ٱلْجَنَّةِ
in Paradise
சொர்க்கத்தில்
ghurafan
غُرَفًا
lofty dwellings
பல அறைகளை
tajrī
تَجْرِى
flow
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
from underneath it
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
the rivers
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
will abide forever
அவர்கள் நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَاۚ
in it
அதில்
niʿ'ma
نِعْمَ
Excellent is
மிகச் சிறப்பானதே
ajru
أَجْرُ
(the) reward
கூலி
l-ʿāmilīna
ٱلْعَٰمِلِينَ
(of) the workers
அமல் செய்தவர்களின்

Transliteration:

Wallazeena aamanoo wa 'amilus saalihaati la nubawwi 'annahum minal Jannati ghurafan tajree min tahtihal anhaaru khaalideena feehaa; ni'ma ajrul 'aamileen (QS. al-ʿAnkabūt:58)

English Sahih International:

And those who have believed and done righteous deeds – We will surely assign to them of Paradise [elevated] chambers beneath which rivers flow, wherein they abide eternally. Excellent is the reward of the [righteous] workers (QS. Al-'Ankabut, Ayah ௫௮)

Abdul Hameed Baqavi:

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் சுவனபதிகளிலுள்ள மேல் மாடிகளில் அமர்த்துவோம். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். நற்செயல்கள் செய்தவர்களின் கூலியும் நன்றே. (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௫௮)

Jan Trust Foundation

எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்) அமல்களை செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம்; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள்; (இவ்வாறாக நற்) செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்கள் -அவர்களுக்கு சொர்க்கத்தில் பல அறைகளை நாம் தயார்படுத்திக் கொடுப்போம். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள். அமல் செய்தவர்களின் கூலி மிகச் சிறப்பானதே!