Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௫௩

Qur'an Surah Al-'Ankabut Verse 53

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِۗ وَلَوْلَآ اَجَلٌ مُّسَمًّى لَّجَاۤءَهُمُ الْعَذَابُۗ وَلَيَأْتِيَنَّهُمْ بَغْتَةً وَّهُمْ لَا يَشْعُرُوْنَ (العنكبوت : ٢٩)

wayastaʿjilūnaka
وَيَسْتَعْجِلُونَكَ
And they ask you to hasten
அவர்கள் உம்மிடம் அவசரமாகக் கேட்கின்றனர்
bil-ʿadhābi
بِٱلْعَذَابِۚ
[with] the punishment
தண்டனையை
walawlā ajalun
وَلَوْلَآ أَجَلٌ
And if not (for) a term
ஒரு தவணை இல்லை என்றால்
musamman
مُّسَمًّى
appointed
குறிப்பிடப்பட்ட
lajāahumu
لَّجَآءَهُمُ
surely (would) have come to them
வந்தே இருக்கும் அவர்களுக்கு
l-ʿadhābu
ٱلْعَذَابُ
the punishment
தண்டனை
walayatiyannahum
وَلَيَأْتِيَنَّهُم
But it will surely come to them
அவர்களிடம் வரும்
baghtatan
بَغْتَةً
suddenly
திடீரென
wahum
وَهُمْ
while they
நிச்சயமாக அவர்கள்
lā yashʿurūna
لَا يَشْعُرُونَ
(do) not perceive
உணராதவர்களாக இருக்க

Transliteration:

Wa yasta'jiloonaka bil'azaab; wa law laaa ajalum musammal lajaaa'ahumul 'zaab; wa la yaatiyannahum baghta tanw wa hum laa yash'uroon (QS. al-ʿAnkabūt:53)

English Sahih International:

And they urge you to hasten the punishment. And if not for [the decree of] a specified term, punishment would have reached them. But it will surely come to them suddenly while they perceive not. (QS. Al-'Ankabut, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

(மறுமையின்) வேதனையைப் பற்றி (அது எப்பொழுது வரும்? என்று) அவர்கள் உங்களிடம் அவசரப்படுகின்றனர். அதற்குறிய ஒரு குறிப்பிட்ட தவணை இல்லாதிருந்தால் (இதுவரையில்) அவ்வேதனை அவர்களை வந்தடைந்தே இருக்கும். எனினும், அவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் திடீரென நிச்சயமாக அவர்களிடம் (அது) வந்தே தீரும். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௫௩)

Jan Trust Foundation

இன்னும், (மறுமையின்) வேதனையைப் பற்றி அவர்கள் உம்மை அவசரப்படுத்துகிறார்கள்; மேலும், (அதற்கெனக்) குறிப்பிட்ட தவணை ஏற்படுத்தப்படாதிருப்பின் அவ்வேதனை அவர்களுக்கு வந்திருக்கும்; எனினும் (அத்தவணையை) அவர்கள் உணர்ந்தறிய முடியாதிருக்கும் நிலையில், அவர்களிடம் அ(வ்வேதனையான)து திடீரென்று வந்து சேரும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் உம்மிடம் தண்டனையை அவசரமாகக் கேட்கின்றனர். குறிப்பிடப்பட்ட ஒரு தவணை இல்லை என்றால் அவர்களுக்கு தண்டனை வந்தே இருக்கும். நிச்சயமாக அவர்கள் உணராதவர்களாக இருக்க, அவர்களிடம் (அது) திடீர் என வரும்,