Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௫௧

Qur'an Surah Al-'Ankabut Verse 51

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوَلَمْ يَكْفِهِمْ اَنَّآ اَنْزَلْنَا عَلَيْكَ الْكِتٰبَ يُتْلٰى عَلَيْهِمْ ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَرَحْمَةً وَّذِكْرٰى لِقَوْمٍ يُّؤْمِنُوْنَ ࣖ (العنكبوت : ٢٩)

awalam yakfihim
أَوَلَمْ يَكْفِهِمْ
And is (it) not sufficient for them
அவர்களுக்கு போதுமாகாதா?
annā
أَنَّآ
that We
நிச்சயமாக நாம்
anzalnā
أَنزَلْنَا
revealed
இறக்கியது
ʿalayka
عَلَيْكَ
to you
உம்மீது
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
இந்த வேதத்தை
yut'lā
يُتْلَىٰ
(which) is recited
ஓதப்படுகின்ற
ʿalayhim
عَلَيْهِمْۚ
to them?
அவர்கள் மீது
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
in that
இதில் இருக்கின்றன
laraḥmatan
لَرَحْمَةً
surely is a mercy
அருளும்
wadhik'rā
وَذِكْرَىٰ
and a reminder
அறிவுரையும்
liqawmin
لِقَوْمٍ
for a people
மக்களுக்கு
yu'minūna
يُؤْمِنُونَ
who believe
நம்பிக்கை கொள்கின்ற

Transliteration:

Awa lam yakfihim annaaa anzalnaa 'alaikal kitaaba yutlaa 'alaikhim; inna fee zaalika larahmatanw wa zikraa liqawminy yu'minoon (QS. al-ʿAnkabūt:51)

English Sahih International:

And is it not sufficient for them that We revealed to you the Book [i.e., the Quran] which is recited to them? Indeed in that is a mercy and reminder for a people who believe. (QS. Al-'Ankabut, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இவ்வேதத்தை மெய்யாகவே நாம் உங்கள் மீது இறக்கி வைத்திருக்கிறோம் என்பதற்கு அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படும் இவ்வேதமே போதுமான அத்தாட்சியல்லவா? ஏனென்றால், இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக (இறைவனுடைய) அருளும் இருக்கின்றது; (பல) நல்லுபதேசங்களும் இருக்கின்றன. (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௫௧)

Jan Trust Foundation

அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் போதாதா? நிச்சயமாக அ(வ் வேதத்)தில் ரஹ்மத்தும், ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமும் இருக்கின்றன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் மீது ஓதப்படுகின்ற இந்த வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியது அவர்களுக்கு போதுமாகாதா? நிச்சயமாக நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு இதில் அருளும் அறிவுரையும் இருக்கின்றன.