Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௫௦

Qur'an Surah Al-'Ankabut Verse 50

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالُوْا لَوْلَآ اُنْزِلَ عَلَيْهِ اٰيٰتٌ مِّنْ رَّبِّهٖ ۗ قُلْ اِنَّمَا الْاٰيٰتُ عِنْدَ اللّٰهِ ۗوَاِنَّمَآ اَنَا۠ نَذِيْرٌ مُّبِيْنٌ (العنكبوت : ٢٩)

waqālū
وَقَالُوا۟
And they say
அவர்கள் கூறினர்
lawlā unzila
لَوْلَآ أُنزِلَ
"Why not are sent down
இறக்கப்பட வேண்டாமா?
ʿalayhi
عَلَيْهِ
to him
இவர் மீது
āyātun
ءَايَٰتٌ
(the) Signs
அத்தாட்சிகள்
min rabbihi
مِّن رَّبِّهِۦۖ
from his Lord?"
அவரது இறைவனிடமிருந்து
qul
قُلْ
Say
கூறுவீராக!
innamā
إِنَّمَا
"Only
எல்லாம்
l-āyātu
ٱلْءَايَٰتُ
the Signs
அத்தாட்சிகள்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
(are) with Allah
அல்லாஹ்விடம்
wa-innamā
وَإِنَّمَآ
and only
எல்லாம்
anā
أَنَا۠
I (am)
நான்
nadhīrun
نَذِيرٌ
a warner
எச்சரிப்பாளர்தான்
mubīnun
مُّبِينٌ
clear"
தெளிவான

Transliteration:

Wa qaaloo law laaa unzila 'alaihi aayaatum mir Rabbihee qul innamal aayaatu 'indal laahi wa innamaaa ana nazeerum mubeen (QS. al-ʿAnkabūt:50)

English Sahih International:

But they say, "Why are not signs sent down to him from his Lord?" Say, "The signs are only with Allah, and I am only a clear warner." (QS. Al-'Ankabut, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

அன்றி ("தாங்கள் விரும்புகிறபடி) சில அத்தாட்சிகள் அவருடைய இறைவனால் அவருக்கு அளிக்கப்பட வேண்டாமா?" என்று இவ்வக்கிரமக்காரர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கின்றன. (என்னிடமில்லை.) நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன் மட்டும்தான்." (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௫௦)

Jan Trust Foundation

“அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; “அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன; ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினர்: “இவர் மீது அவரது இறைவனிடமிருந்து அத்தாட்சிகள் இறக்கப்பட வேண்டாமா!” (நபியே!) கூறுவீராக! அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடம் இருக்கின்றன. நானெல்லாம் தெளிவான எச்சரிப்பாளர்தான்.