Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௫

Qur'an Surah Al-'Ankabut Verse 5

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَنْ كَانَ يَرْجُوْا لِقَاۤءَ اللّٰهِ فَاِنَّ اَجَلَ اللّٰهِ لَاٰتٍ ۗوَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ (العنكبوت : ٢٩)

man
مَن
Whoever
யார்
kāna
كَانَ
[is]
இருப்பாரோ
yarjū
يَرْجُوا۟
hopes
ஆதரவு வைக்கின்றார்
liqāa
لِقَآءَ
(for the) meeting
சந்திப்பை
l-lahi
ٱللَّهِ
(with) Allah
அல்லாஹ்வின்
fa-inna
فَإِنَّ
then indeed
நிச்சயமாக
ajala
أَجَلَ
(the) Term
தவணை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
laātin
لَءَاتٍۚ
(is) surely coming
வரக்கூடியதுதான்
wahuwa
وَهُوَ
And He
அவன்தான்
l-samīʿu
ٱلسَّمِيعُ
(is) the All-Hearer
நன்கு செவியுறுபவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
the All-Knower
நன்கறிந்தவன்

Transliteration:

Man kaana yarjoo liqaaa 'allaahi fa inna ajalal laahi laaat; wa Huwass Sameeul 'Aleem (QS. al-ʿAnkabūt:5)

English Sahih International:

Whoever should hope for the meeting with Allah – indeed, the term [decreed by] Allah is coming. And He is the Hearing, the Knowing. (QS. Al-'Ankabut, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

எவர்கள் அல்லாஹ்வைச் சந்திப்போம் என நம்புகிறார்களோ அவர்கள் (அதற்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால்) அதற்காக அல்லாஹ் ஏற்படுத்திய தவணை நிச்சயமாக வந்தே தீரும். அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௫)

Jan Trust Foundation

எவர் அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று நம்புகிறார்களோ அவர்கள் (அதற்காக நல்ல அமல்களைச் செய்து கொள்ளட்டும்); ஏனெனில் அல்லாஹ் (அதற்காகக் குறித்துள்ள) தவணை நிச்சயமாக வருவதாக இருக்கிறது; அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யார் அல்லாஹ்வின் சந்திப்பை ஆதரவு வைக்கின்றவராக இருப்பாரோ நிச்சயமாக, அல்லாஹ்வின் தவணை வரக்கூடியதுதான். அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.