குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௪௯
Qur'an Surah Al-'Ankabut Verse 49
ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
بَلْ هُوَ اٰيٰتٌۢ بَيِّنٰتٌ فِيْ صُدُوْرِ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَۗ وَمَا يَجْحَدُ بِاٰيٰتِنَآ اِلَّا الظّٰلِمُوْنَ (العنكبوت : ٢٩)
- bal
- بَلْ
- Nay
- மாறாக,
- huwa
- هُوَ
- it
- இது
- āyātun
- ءَايَٰتٌۢ
- (is) Verses
- அத்தாட்சிகளாகும்
- bayyinātun
- بَيِّنَٰتٌ
- clear
- தெளிவான
- fī ṣudūri
- فِى صُدُورِ
- in (the) breasts
- நெஞ்சங்களில்
- alladhīna ūtū
- ٱلَّذِينَ أُوتُوا۟
- (of) those who are given
- கொடுக்கப்பட்டவர்களின்
- l-ʿil'ma
- ٱلْعِلْمَۚ
- the knowledge
- கல்வி
- wamā yajḥadu
- وَمَا يَجْحَدُ
- And not reject
- மறுக்க மாட்டார்கள்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَآ
- Our Verses
- நமது வசனங்களை
- illā
- إِلَّا
- except
- தவிர
- l-ẓālimūna
- ٱلظَّٰلِمُونَ
- the wrongdoers
- அநியாயக்காரர்களை
Transliteration:
Bal huwa aayaatum baiyinaatun fee sudooril lazeena ootul 'ilm; wa maa yajhadu bi aayaatinaa illaz zaalimoon(QS. al-ʿAnkabūt:49)
English Sahih International:
Rather, it [i.e., the Quran] is distinct verses [preserved] within the breasts of those who have been given knowledge. And none reject Our verses except the wrongdoers. (QS. Al-'Ankabut, Ayah ௪௯)
Abdul Hameed Baqavi:
அவ்வாறன்று. இது (இறைவனால்தான் அருளப்பட்ட) தெளிவான வசனங்களாக இருக்கின்றன. ஆகவே மெய்யான ஞானம் கொடுக்கப்பட்டவர்களின் உள்ளங்களில் இது பதிந்துவிடும். ஆகவே, அநியாயக்காரர்களைத் தவிர (மற்றெவரும்) நம்முடைய இவ்வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௪௯)
Jan Trust Foundation
அப்படியல்ல! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மாறாக, இது கல்வி கொடுக்கப்பட்டவர்களின் நெஞ்சங்களில் தெளிவான அத்தாட்சிகளாகும். அநியாயக்காரர்களைத் தவிர (மற்றவர்கள்) நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.