குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௪௮
Qur'an Surah Al-'Ankabut Verse 48
ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا كُنْتَ تَتْلُوْا مِنْ قَبْلِهٖ مِنْ كِتٰبٍ وَّلَا تَخُطُّهٗ بِيَمِيْنِكَ اِذًا لَّارْتَابَ الْمُبْطِلُوْنَ (العنكبوت : ٢٩)
- wamā kunta
- وَمَا كُنتَ
- And not (did) you
- நீர் இல்லை
- tatlū
- تَتْلُوا۟
- recite
- ஓதுபவராக
- min qablihi
- مِن قَبْلِهِۦ
- before it before it
- இதற்கு முன்
- min kitābin
- مِن كِتَٰبٍ
- any Book
- ஒரு வேதத்தை
- walā takhuṭṭuhu
- وَلَا تَخُطُّهُۥ
- and not (did) you write it
- இன்னும் அதை எழுதுபவராகவும் இல்லை
- biyamīnika
- بِيَمِينِكَۖ
- with your right hand
- உமது வலக்கரத்தால்
- idhan
- إِذًا
- in that case
- அப்படி இருந்திருந்தால்
- la-ir'tāba
- لَّٱرْتَابَ
- surely (would) have doubted
- நிச்சயமாக சந்தேகம் கொண்டிருப்பார்கள்
- l-mub'ṭilūna
- ٱلْمُبْطِلُونَ
- the falsifiers
- வீணர்கள்
Transliteration:
Wa maa kunta tatloo min qablihee min kitaabinw wa laa takhuttubhoo bi yameenika izal lartaabal mubtiloon(QS. al-ʿAnkabūt:48)
English Sahih International:
And you did not recite before it any scripture, nor did you inscribe one with your right hand. Then [i.e., otherwise] the falsifiers would have had [cause for] doubt. (QS. Al-'Ankabut, Ayah ௪௮)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் இதற்கு முன்னர் யாதொரு வேதத்தை ஓதி அறிந்தவருமல்ல; உங்களுடைய கையால் நீங்கள் அதனை எழுதி(ப் பழகி)யவருமல்ல. அவ்வாறு இருந்திருக்குமாயின், நிராகரிப்பவர்கள் (இதனை நீங்கள் தாமாகவே கற்பனை செய்து கொண்டீரே தவிர இறைவனால் அருளப்பட்டதல்ல என்று) சந்தேகம் கொள்ளலாம். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௪௮)
Jan Trust Foundation
அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இதற்கு முன் (வேறு) ஒரு வேதத்தை நீர் ஓதுபவராக இல்லை. உமது வலக்கரத்தால் அதை எழுதுபவராகவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் வீணர்கள் (இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது என்பதில்) நிச்சயமாக சந்தேகம் கொண்டிருப்பார்கள்.