Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௪௭

Qur'an Surah Al-'Ankabut Verse 47

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَذٰلِكَ اَنْزَلْنَآ اِلَيْكَ الْكِتٰبَۗ فَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يُؤْمِنُوْنَ بِهٖۚ وَمِنْ هٰٓؤُلَاۤءِ مَنْ يُّؤْمِنُ بِهٖۗ وَمَا يَجْحَدُ بِاٰيٰتِنَآ اِلَّا الْكٰفِرُوْنَ (العنكبوت : ٢٩)

wakadhālika
وَكَذَٰلِكَ
And thus
இவ்வாறுதான்
anzalnā
أَنزَلْنَآ
We (have) revealed
நாம் இறக்கினோம்
ilayka
إِلَيْكَ
to you
உமக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَۚ
the Book
இவ்வேதத்தை
fa-alladhīna ātaynāhumu
فَٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ
So those We gave [them]
எவர்கள்/கொடுத்தோம்/அவர்களுக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதத்தை
yu'minūna
يُؤْمِنُونَ
believe
நம்பிக்கை கொள்வார்கள்
bihi
بِهِۦۖ
therein
இதை
wamin hāulāi
وَمِنْ هَٰٓؤُلَآءِ
And among these
இன்னும் இவர்களில்
man yu'minu bihi
مَن يُؤْمِنُ بِهِۦۚ
(are some) who believe therein
நம்பிக்கை கொள்கின்றவர்களும்/இதை
wamā yajḥadu
وَمَا يَجْحَدُ
And none reject
மறுக்க மாட்டார்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَآ
Our Verses
நமது வசனங்களை
illā
إِلَّا
except
தவிர
l-kāfirūna
ٱلْكَٰفِرُونَ
the disbelievers
நிராகரிப்பாளர்களை

Transliteration:

Wa kazaalika anzalnaaa ilaikal Kitaab; fallazeena aatainaahumul kitaaba yu'minoona bihee wa min haaa'ulaaa'i many yu'minu bih; wa maa yajhadu bi'Aayaatinaa illal kaafiroon (QS. al-ʿAnkabūt:47)

English Sahih International:

And thus We have sent down to you the Book [i.e., the Quran]. And those to whom We [previously] gave the Scripture believe in it. And among these [people of Makkah] are those who believe in it. And none reject Our verses except the disbelievers. (QS. Al-'Ankabut, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்களுக்கு வேதத்தை இறக்கிய) அவ்வாறே நாம் உங்களுக்கு இவ்வேதத்தை அருளியிருக்கின்றோம். ஆகவே, நாம் எவர்களுக்கு (முன்னர்) வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்க(ளில் உள்ள சத்தியவான்க) ள் இ(வ்வேதத்)தையும் (அவசியம்) நம்பிக்கை கொள்வார்கள். அன்றி, (அரபிகளாகிய) இவர்களில் உள்ள (நியாயவாதிகளில்) பலரும் இதனை நம்பிக்கை கொள்கின்றனர். (மனமுரண்டாக நிராகரிக்கும்) காஃபிர்களைத் தவிர (மற்ற எவரும்) நம்முடைய வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௪௭)

Jan Trust Foundation

இவ்விதமே, (அவர்களுக்கு வேதம் இறக்கியது போன்றே நபியே!) உமக்கும் இவ்வேதத்தை இறக்கியிருக்கிறோம்; ஆகவே, நாம் (முன்னர்) எவருக்கு வேதத்தை, வழங்கியுள்ளோமோ, அவர்கள் இதனை நம்பி ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும், இதை நம்பி ஏற்றுக் கொள்வோரும் இவர்களில் இருக்கிறார்கள் - காஃபிர்களைத் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(உமக்கு முன்னர் உள்ள நபிமார்களுக்கு வேதத்தை இறக்கிய) இவ்வாறுதான் உமக்கு(ம்) இவ்வேதத்தை நாம் இறக்கினோம். (இதற்கு முன்) வேதத்தை நாம் கொடுத்தவர்கள் (முந்திய இஸ்ரவேலர்களில் பலர்) இதை நம்பிக்கை கொள்வார்கள். இன்னும் இவர்களில் (-உம்முடன் இருக்கின்ற வேதக்காரர்களில்) இதை நம்பிக்கை கொள்கின்றவர்களும் இருக்கின்றனர். நிராகரிப்பாளர்களைத் தவிர (மற்றவர்கள்) நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.