Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௪௫

Qur'an Surah Al-'Ankabut Verse 45

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُتْلُ مَآ اُوْحِيَ اِلَيْكَ مِنَ الْكِتٰبِ وَاَقِمِ الصَّلٰوةَۗ اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَاۤءِ وَالْمُنْكَرِ ۗوَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ ۗوَاللّٰهُ يَعْلَمُ مَا تَصْنَعُوْنَ (العنكبوت : ٢٩)

ut'lu
ٱتْلُ
Recite
ஓதுவீராக!
mā ūḥiya
مَآ أُوحِىَ
what has been revealed
வஹீ அறிவிக்கப்பட்டதை
ilayka
إِلَيْكَ
to you
உமக்கு
mina l-kitābi
مِنَ ٱلْكِتَٰبِ
of the Book
வேதத்தில்
wa-aqimi
وَأَقِمِ
and establish
இன்னும் நிலைநிறுத்துவீராக
l-ṣalata
ٱلصَّلَوٰةَۖ
the prayer
தொழுகையை
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
the prayer
தொழுகை
tanhā
تَنْهَىٰ
prevents
தடுக்கிறது
ʿani l-faḥshāi
عَنِ ٱلْفَحْشَآءِ
from the immorality
மானக்கேடானவற்றை விட்டும்
wal-munkari
وَٱلْمُنكَرِۗ
and evil deeds
தீயகாரியங்களை விட்டும்
waladhik'ru
وَلَذِكْرُ
and surely (the) remembrance
நினைவு கூர்வது
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்
akbaru
أَكْبَرُۗ
(is) greatest
மிகப் பெரியது
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
knows
நன்கறிகின்றான்
mā taṣnaʿūna
مَا تَصْنَعُونَ
what you do
நீங்கள் செய்பவற்றை

Transliteration:

Utlu maaa oohiya ilaika mional Kitaabi wa aqimis Salaata innas Salaata tanhaa 'anil fahshaaa'i wal munkar; wa lazikrul laahi akbar; wal laahu ya'lamu maa tasna'oon (QS. al-ʿAnkabūt:45)

English Sahih International:

Recite, [O Muhammad], what has been revealed to you of the Book and establish prayer. Indeed, prayer prohibits immorality and wrongdoing, and the remembrance of Allah is greater. And Allah knows that which you do. (QS. Al-'Ankabut, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) வஹீ மூலம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட இவ்வேதத்தை (மக்களுக்கு) நீங்கள் ஓதிக் காண்பித்து தொழுகையைக் கடைப்பிடித்து வாருங்கள். ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும். பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவைகளுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்). (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௪௫)

Jan Trust Foundation

(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வேதத்தில் உமக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டதை ஓதுவீராக! இன்னும், தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றை விட்டும் தீயகாரியங்களை விட்டும் தடுக்கிறது. அல்லாஹ் (உங்களை) நினைவு கூர்வது (நீங்கள் அவனை நினைவு கூர்வதை விட) மிகப் பெரியது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகின்றான்.