Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௪௪

Qur'an Surah Al-'Ankabut Verse 44

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

خَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّلْمُؤْمِنِيْنَ ࣖ ۔ (العنكبوت : ٢٩)

khalaqa
خَلَقَ
Allah created
படைத்தான்
l-lahu
ٱللَّهُ
Allah created
அல்லாஹ்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
the heavens
வானங்களையும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
and the earth
பூமியையும்
bil-ḥaqi
بِٱلْحَقِّۚ
in truth
உண்மையான காரணத்திற்கே
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
in that
இதில்
laāyatan
لَءَايَةً
(is) surely a Sign
ஓர் அத்தாட்சி இருக்கிறது
lil'mu'minīna
لِّلْمُؤْمِنِينَ
for the believers
நம்பிக்கையாளர்களுக்கு

Transliteration:

Khalaqal laahus samaawaati wal arda bilhaqq; inna fee zaalika la aayatal lilmu mineen (QS. al-ʿAnkabūt:44)

English Sahih International:

Allah created the heavens and the earth in truth. Indeed in that is a sign for the believers. (QS. Al-'Ankabut, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

வானங்களையும் பூமியையும் படைத்தவன் மெய்யாகவே அல்லாஹ்தான். (வேறொருவருமன்று.) நம்பிக்கை கொண்டவர் களுக்கு நிச்சயமாக இவைகளிலும் (பல) அத்தாட்சி(கள்) இருக்கின்றன. (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௪௪)

Jan Trust Foundation

வானங்களையும், பூமியையும் அல்லாஹ் உண்மையைக் கொண்டே படைத்துள்ளான் - நிச்சயமாக இதில் முஃமின்களுக்கு அத்தாட்சி இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்கே படைத்தான். நிச்சயமாக இதில் நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.